News
ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் அலுவலகத்திலே இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆளும் அரசு தேர்தல் விதிமுறைகளை மீறுகிறது; சட்டத்தரணிகள் சங்கம்
தேர்தல் பரப்புரை நடவடிக்கையில் யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள் காண்பிக்கப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் என சட்டத்தரணிகள் சங்க தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தவெற்றியை சிந்திக்கும் படங்கள் கொழும்பின் பல பகுதிகளில் அதிநவீன திரைகளில் காண்பிக்கப்பட்டுகிறது. இந்த நடவடிக்கையினை ஜனாதிபதி மகிந்த ராஜக்சவின் பரப்புரை பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன டிஜிட்டல் திரைகளை இந்த படங்களை காண்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். அந்த விசேட டிஜிட்டல் திரை ஒவ்வொன்றும் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானவை….
மஹிந்த அரசிலிருந்து பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகினார்: மைத்திரிக்கு ஆதரவு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து உயர்கல்விப் பிரதியமைச்சர் நந்திமித்ர எக்கநாயக்கவும் விலகி, பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மேலும் வலுப்படுத்தி 3வது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் எனும் திருத்தத்தை முன்மொழிந்த 18வது அரசியல் திருத்தத்திற்கு தான் ஆதரவளித்தமை தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதன் மூலம்,…
தன்னால் நியமிக்கபட்டவருக்கே, தண்டனை வழங்க காத்திருக்கும் சந்திரிக்கா..!
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகளில் நான் நேரடியாக தலையீடு செய்வேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தார் அரச நிதியை தேவையானவாறு பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அவ்வாறு நிதியை பயன்படுத்த அனுமதித்த நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு முதலில் தண்டனை விதிக்கப்படும். ஜயசுந்தரவின் நடவடிக்கைகளினால் கோடிக்கணக்கான…
பிரதியமைச்சர் பைசர் முஸ்தப்பா மைத்திரிக்கு ஆதரவு
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தப்பா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார். இன்று விகாரமஹா தேவி பூங்காவில் இடம்பெற்ற பொது எதிரணியின் நிகழ்வில் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
மன்னார் ஆயரை மைத்திரிபால, றிஷாத் பதியுதீன் சந்திப்பு
இன்று மன்னாருக்கு வருகைத்தந்த எதிர்கட்சிகளி்ன் பொது வேட்பாளர் மைத்திரிபால் சிறிசேன மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களை அவரு இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுவதையும்,இந்த சந்திப்பி்ல் கலந்து கொண்ட முன்னால் அமைச்சரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருான மன்னார் ஆயரை மைத்திரிபால, றிஷாத் பதியுதீன் சந்திப்பு பதியுதீன் மற்றும் பாராளுமன்ற ரவி கருநாயக்க ஆகியோரையும் படங்களில் காணலாம்.
அடக்குமுறைகளை பார்த்துக் கொண்டு பதவியில் இருக்க முடியாது – றிஷாத் பதியுதீன் (photos)
இர்ஷாத் றஹ்மத்துல்லா எதிர்வரும் 9 ஆம் திதகி மலரப்போகும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் இந்த நாட்டு மக்கள் அளப்றிய நன்மைகளை அடையவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் இந்த நாட்டில நல்லாட்சியினை தோற்றுவிக்கும் வேலைத்திட்டத்திற்காக நிபந்தனைகளற்ற ஆதரவினை அவருக்கு எமது கட்சி வழங்க முன்வந்ததாகவும் கூறினார். வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதனத்தில் அணி திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பொது வேட்பாளர் மைத்திரிபல சிறிசேன…
மைத்திரியின் கூட்டத்திற்கு றிஷாத் பதியுதீனுடன் அணிதிரண்ட வன்னி மக்கள் (photos)
ஏ.எச்.எம்.பூமுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்கும் பொதுக்கூட்டம் இன்று (30) மன்னாரில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; அழைப்பை ஏற்று வன்னி மக்கள் திரண்டு வந்துள்ளமையையும் பொதுவேட்பாளர் மற்றும் றிஷாத் பதியுதீன் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.
நைஜீரியாவில் 3வயது சிறுமி குர்ஆனை மனனம் செய்து உலக சாதனை!
நைஜிரியா நாட்டில் 3 வயது சிறுமி ருக்காயாத்து ஃபடஹு என்ற மாணவி குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்…..! உலகில் இதுவரை யாரும் 3 வயதில் குர்ஆனை மனனம் செய்தது இல்லை. கடந்த வருடம் நைஜிரயாவில் குர்ஆன் மனனம் போட்டியில் இமாம் சேக் தாஹிரு உஸ்மான் அவர்கள் முன்னிலையில் சிறுமியிடம் மாற்றி மாற்றி கேட்கப்பட்ட குர்ஆன் ஆயத்துக்கள் அனைத்திற்க்கும் அழகான முறையில் ஒப்பித்தார்.. அதுவும் பல்லாயிரகணக்கனோர் முன்னிலை இமாம் அவர்கள் கேட்ட அனைத்து ஆயத்துகளையும் உடனுக்கு உடன்…
ஜி மெயிலை முற்றாக தடை செய்த சீனா
கூகுள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ‘ஜி மெயிலை’ சீனா முழுமையாக முடக்கியுள்ளது.சீனாவில் கூகுளின் சேவைகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக கணனி வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூன்றாம் தரப்பு மூலமாக அங்கு ஜி மெயில் உபயோகப்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதை முழுமையாக முடக்குவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் ‘ஜி மெயிலின்’ பயன்பாடு முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.அதன் பிறகு மிகமிகச் சொற்ப அளவிலான மின்னஞ்சல்கள் ஜி மெயில் மூலமாக சீனாவுக்குள் சென்றுள்ளன. கடந்த ஜூன் மாதம், டியானமென்…
பேருவளை தாக்குதல்! உடனடி நடவடிக்கைக்கு சந்திரிக்கா கோரிக்கை
பேருவளை சைனாபோட் என்ற இடத்தில் வைத்து சந்திரிக்காவும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவும் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், குறித்த இடத்தில் நின்ற விசேட அதிரடிப்படை வீரர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் சந்திரிக்காவின் சட்டத்தரணிகள், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அத்துடன் பேருவளை பொலிஸுக்கு அறிவிக்கப்பட்டபோதும் அவர்களும் கலகக்காரர்களை அடக்க முயற்சிக்கவில்லை என்று சந்திரிக்காவின் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மக்களின் பணம் ஜனாதிபதியின் குடும்ப நலனுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது: சரத் பொன்சேகா
இலவசமாக கிடைக்கும் வாகனங்கள் வெளிநாட்டு பயணங்களை ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் மட்டுமே அனுபவிக்கின்றனர். மாணவர்களின் கல்வியை சீர்குலைத்து நாட்டை பிழையான பதையில் வழிநடத்துகின்றனர். அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களில் பாரியளவில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. மக்கள் அடகு வைத்த தங்க ஆபரணங்களை மீட்க முடியாது அவை ஏலத்தில் விடப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியன இன்று மிருகக் காட்சி சாலையாக மாற்றமடைந்துள்ளது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்த…
