News
தேர்தல் பரப்புரைகளில் மஹிந்தவின் கையெழுத்துக் கடிகாரங்கள் விநியோகம்
ஜனாதிபதித் தேர்தலின் ஆளும் கட்சியின் பரப்புரை உத்தியா, மகிந்த ராஜபக்சவின் கையெழுத்துடனான கைக்கடிகாரங்கள் இளைஞர் யுவதிகளிடம் விநியோகிக்கப்படுகிறது
இலங்கைக்கு அப்பால் நகர்கிறது தாழமுக்கம்; காலநிலை சீரடையலாம்?
கிழக்கு கரையோரத்தை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவிய தாழமுக்கம் வடக்கு நோக்கி இலங்கைத் தீவைவிட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் எதிர்வரும் சில நாட்களில் காலநிலை சீரடையும் என்றும் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளது. எனினும் நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டமையால் தொடர்ந்தும் சில இடங்களில் வெள்ள…
தம்புள்ளை பிரதி மேயர் மைத்திரிக்கு ஆதரவு
தம்புள்ளை மாநகர சபை பிரதி மேயர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளார். தம்புள்ளை கம்உதா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்டத்திற்கு வருகை தந்த தம்புள்ளை மாநகர சபை பிரதி மேயர் குசுமசிறி ஆரியதிலக மற்றும் மாநகர சபை உறுப்பினர் எச்.எம்.ரூபசிங்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மைத்திரிக்கு ஆதரவு வழங்குகிறது கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது
எமது அரசாங்கத்தில் சகல இனத்தவரும், மதத்தவரும் சுதந்திரமாக தமது நடவடிக்கை முன்னெடுக்க முடியும் – மைத்திரி
சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் உங்களை கவனிக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். பெறுமதிமிக்க பல இடங்களை மஹிந்த ராஜபக்ஸ தமது சிநேகபூர்வமானவர்களுக்கு வழங்கி, காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றினார்கள். அவற்றை வேறு நபர்களுக்கு வழங்கினார்கள். அந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, அந்த…
நான் கர்ப்பமாக உள்ளேன், என் கணவனை கொன்றுவிடாதீர்கள் – சோலங்கராச்சியின் மனைவி கதறல்
தனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என முல்லேரியா -கொட்டிகாவத்த பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாகவும் தயவு செய்து எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் எனவும் நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…
றிஷாத் பதியுதீனின் கூட்டத்திற்கு அணிதிரண்ட காத்தான்குடி மக்கள் ( படங்கள் இணைப்பு )
ஏ.எச்.எம்.பூமுதீன் பொதுவேட்பாளர் மைத்திரபால மற்றும் ரிசாத் பதியுதீன் குழுவினர்; இன்று காலை (29) காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர். இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் ஒன்றும் காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்டது. அகில அலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் மற்றும் பொதுவேட்பாளரின் உரையை கேட்பதற்காக இக்கூட்டத்திற்கு காத்தான்குடி மக்கள் திரண்டு வந்திருந்தனர். சிப்லி பாறுக் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ரிசாத் பதியுதீன் உரையாற்றுவதை படத்தில் காணலாம்.
ஓட்டமாவடியில் ஒன்றிணைந்த முஸ்லிம் தலைமைகள்
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இன்று (29.12.2014) திங்கட்கிழமை ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிரணி பொது வேட்பாளா் மைத்திரிபால சிறிசேன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவா் றிஷாட் பதியூதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவூப் ஹக்கீம்,, ஐ.தே. கட்சி பிரதித்தலைவா் கரு ஜயசூரிய முன்னாள் கடற்றொழில் அமைச்சா் ராஜித சேனரத்ன பாராளுமன்ற உறுப்பினா் அல்ஹாஜ் MSS. அமீா் அலி, மாகாண சபைத் பிரதித்தவிசாளா் MS. சுபைா், ஐ.தே….
மைத்திரிக்கு 22; மஹிந்தவுக்கு 2
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டதை யடுத்து, கட்சித் தாவல்கள் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் நேற்றுவரை ஆளும் மற்றும் எதிரணியிலிருந்து 25 எம்.பிக்கள் மற்றும் 314 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தமாக 339 பேர் கட்சிதாவியுள்ளனர். அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்துடன், ஆளுந்தரப்பிலிருந்து நேற்றுவரை 23 எம்.பிக்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ள நிலையில், எதிரணியிலிருந்து 2 எம்.பிக்கள் ஆளுந்தரப்புக்குத் தாவியுள்ளனர். கட்சித் தாவல்களின் அடிப்படையில்எதிரணியின் பொது…
தோல்வியை ஒத்துக் கொண்ட ராஜபக்ச குடும்பம் ; மைத்திரிபால சிறிசேன
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள தனிமனித அதிகாரத்திற்கு முடிவு கட்டவே நான் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ளேன்” “ஜனவரி 8ஆம் திகதி எனது வெற்றி உறுதி. எனது வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. எனது வெற்றி மக்களின், ஜனநாயகத்தின், சுதந்திரத்தின் வெற்றியாகும். அதேபோல், தனிமனித அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் வெற்றியுமாகும். ஜனாதிபதியும், ராஜபக்ச குடும்பமும், அவரது அடிவருடிகளும் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். இதனால், எமது மேடைகளை…
பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி
அனைத்து முஸ்லிம் சக்திகளினதும் ஆதாரமாக துருக்கி இருப்பதாக பாராட்டி இருக்கும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “ஸ்திரமான, ஜனநாயகமான மற்றும் அபிவிருத்தி அடைந்த ஒரு துருக்கி அனைத்து முஸ்லிம் சக்திக்கான ஆதாராமாக உள்ளது” என்று துருக்கியின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மாநாட்டில் பங்கேற்று மிஷால் குறிப்பிட்டார். “வலுவான துருக்கி என்பது வலுவான ஜரூசலம், வலுவான ஒரு பலஸ்தீனமாகும்” என்று குறிப்பிட்ட அவர் பலஸ்தீன,…
கல்முனையில் மைத்ரிக்காக வெள்ளமாய் அணிதிரண்ட மக்கள் (படங்கள் இணைப்பு)
எஸ்.ஏ. கான் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறி சேனவை ஆதரித்து, கல்முனை பிரபல வர்த்தகரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின் சகோதரருமான ஏ.எம்.பைரூஸின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்ற கூட்டத்தில் வரலாறு காணாத மக்கள் பெரு வெள்ளமாய் அணிதிரண்டிருந்தனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு குழுமியிருந்தனர். இங்கு பிரதம அதிதியாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார். இதேவேளை இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம்…
