Headlines

செலான் வங்கியின் புதுவருட நிகழ்வுகளில் இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- செலான் வங்கியின் கெக்கிராவ கிளையில் சிங்கள, தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இன்று (16) இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துசிறப்பித்தார். இதேவேளை, செலான் வங்கியின் ஒவ்வொரு பணவைப்புக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Read More

தவிசாளர் முஜாஹிர், பேசாலை கிறிஸ்தவ பாதிரியாரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், இன்று (16) பேசாலை கிறிஸ்தவ பாதிரியார் பெனோ அலெக்ஸ்சாண்டர் சில்வா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார், இதன்போது, மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், இப்பிரதேசத்தின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்வரும் காலங்களில் இப்பிரதேசத்தினை, மாவட்டத்தின் சிறந்த பிரதேசமாக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும், உதவிகளையும் செய்வதாக தவிசாளர் வாக்குறுதியளித்துள்ளார்….

Read More

செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மனி!

-ஊடகப்பிரிவு- வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின. செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை (16)இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின்போது தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவுசெய்யப்பட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் இவருக்குக் கிடைக்கப் பெற்றன. இவரை…

Read More

“தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மேம்பட அருமையான சந்தர்ப்பம்” பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- இலங்கைத் திருநாட்டில் இன்று தமிழ், சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தமிழ், சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன, மத, கட்சி, நிற பேதங்களை ஒதுக்கிவிட்டு எமது நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான தேசிய நிகழ்வு சிங்கள, தமிழ் புத்தாண்டாகும். சூரியனை முதலாகக் கொண்ட இயற்கைக்கு நன்றிக் கடன்…

Read More

பாரம்பரியக் கோட்டைகளைத் தகர்த்து மக்கள் காங்கிரஸ் கோலோச்சுகின்றது!

-சுஐப் எம்.காசிம்- வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு, மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச சபைகளையும் இறக்காமம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளர் பதவியையும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியிருப்பது, அக்கட்சியின் கணிசமான வளர்ச்சியையும், அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆளுமையையுமே புலப்படுத்தி நிற்பதாக கூறப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித்…

Read More

புத்தாண்டு சந்தை நிலவரங்களை கண்காணிக்க புதிய திட்டம்… அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை!

  -ஊடகப்பிரிவு- புத்தாண்டில் பாவனையாளர்கள் நலன்கருதி, நுகர்வோர் பாவனையாளர்கள் அதிகார சபை விசேட கண்காணிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக பாவனையாளர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் இத்திட்டத்தை, புத்தாண்டு காலத்தில் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். புத்தாண்டின் போது விற்பனை ஊக்குவிப்பு என்ற பேரில், பல்வேறு வியாபார நிறுவனங்கள் பருவகால கழிவு விலைப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதை கண்காணிக்கும்…

Read More

சூழ்ச்சிகளைத் தோற்கடித்து மக்கள் ஆணை நிரூபிப்பு! மன்னார் உள்ளூராட்சி சபைகளின் வெற்றியின் பின்னர் அமைச்சர் ரிஷாட்!

 -ஊடகப்பிரிவு- உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற கட்சிகளை அந்தந்த சபைகளில் அதிகாரத்தில் அமர்த்த, கட்சி, இன பேதங்களுக்கு அப்பால் முன்வருமாறு நாம் விடுத்த பகிரங்க அழைப்புக்கு மாற்றமாக, எமது கட்சியான மக்கள் காங்கிரஸை ஆட்சி அதிகாரத்துக்கு வராமல் தடுக்க வேண்டுமென்ற நோக்கில் சிலர் செயற்பட்ட போதும், இறைவனின் உதவியால் அவற்றை முறியடித்து, மன்னார் மாவட்டத்தில் மூன்று சபைகளை கைப்பற்றியுள்ளோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (12) நண்பகல் மன்னார் ஆகாஷ் ஹோட்டலில்…

Read More

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்… தவிசாளராக செல்லத்தம்பு..! பிரதித் தவிசாளர் பதவி சுதந்திரக் கட்சிக்கு..!

-ஊடகப்பிரிவு- மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (12) கைப்பற்றியுள்ளது. சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) 15 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த 01 உறுப்பினரும் செல்லத்தம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். செல்லத்தம்புவை எதிர்த்துப்…

Read More

“முக்கூட்டுக்கும் மேற்பட்ட பொய்க்கூட்டின் சதிகளை முறியடித்து முசலி மண்ணை மீட்டெடுத்த அமைச்சர் ரிஷாட் கண்கலங்கி அழுதார்” எஸ். ஹமீத்!

-எஸ். ஹமீத்- “முசலி” மன்னார் மாவட்டத்தின் ஓர் ஓரமாயுள்ள நிலம். சிலாவத்துறை, கொண்டச்சி, பண்டாரவெளி, மறிச்சுக்கட்டி, அகத்திமுறிப்பு, புதுவெளி, கரடிக்குழி போன்ற கிராமங்களைக் கொண்ட பிரதேசம். இந்தப் பிரதேசத்திலுள்ள வில்பத்து சம்பந்தமான விடயத்தை இனவாதிகள் பூதாகாரமாக்கியதால், இலங்கை முழுதும் முசலி பிரபல்யம் பெற்றுவிட்டது. முன்னம் ஒரு காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவிருந்த முசலிப் பிரதேசம் படிப்படியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் வந்து விட்டிருக்கிறது. தனது சொந்தத் தாய் வீடு போன்று கருதி இந்தப் பிரதேசத்துக்கு…

Read More

முசலி பிரதேசசபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது

தலைவராக சுபியான்.,  பிரதி தவிசாளராக றைசுதீன் ஊடகப்பிரிவு மன்னார் முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத்  சுபியான் 9 வாக்குகளைப் பெற்று, முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராகவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஜே. ஈசான் 6 வாக்குகளையும் பெற்றார். தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட சுபியானுக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள்…

Read More

மன்னார் பிரதேச சபையைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரலாறு படைத்தது.

ஊடகப்பிரிவு மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியது. அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத்  தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளைப்பெற்றுக்கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஜாஹிருக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த…

Read More

பொதுநலவாய வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் ரிஷாட் தலைமையில் 50 பேர் லண்டன் பயணம்…

-ஊடகப்பிரிவு- லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழு ஒன்று அடுத்தவாரம் அந்தநாட்டுக்கு பயணமாகின்றது. 1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத வகையில் பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கேற்பதாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “பொதுநலவாய வர்த்தக அமைப்பின் இந்தவருடத்தின் மூலோபாய பங்குதாரராக…

Read More