Main News
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் கல்பிட்டி, புதுக்குடியிருப்பு அல்/நுஹ்மா பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்பிட்டி, புதுக்குடியிருப்பு அல்/நுஹ்மா பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் சிபாரிசின் பேரில், அமைச்சரினால் ரூபாய் 78,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட இந்த நிதியிலிருந்து பாலர் பாடசாலையின் மின்சுற்று வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மின் விசிறிகளும் வழங்கப்பட்டுள்ளமை…
பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்துப் பேச்சு!
அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் நீண்ட நேரம் கருத்துப்பரிமாற்றம்… -ஊடகப்பிரிவு- கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக்காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள், மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு, இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை – மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் அவர்களை இன்று காலை (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்த…
குருநாகலில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வுகள்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, 03வது முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில், புது வருட நிகழ்வுகள் நேற்று முன்தினம் (23)மல்கடுவாவ மாநகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், குருணாகல் மாநகர சபை உறுப்பினருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில், பிரதம அதிதியாக வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க மற்றும் குருணாகல் மாநகரசபை முதல்வர் துஷார…
“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன் யுன்னான் மாநிலமும் அதேபோன்று சீனாவும் சாதகமான நவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும், யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் ( Gao Shuxun ) தெரிவித்தார். யுன்னான் மாநில அரசாங்கத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களில் ஒருவரும், யுன்னான் அரசின் ஆலோசகர்களில் ஒருவருமான அவர், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, அவரது அமைச்சில் நேற்று (23) சந்தித்துப்…
“கட்சி பேதமின்றி அனைவருக்கும் பிரதேச சபையின் சேவை சென்றடைய வேண்டும்” தவிசாளர் தாஹிர்!
-முர்ஷித்- நிந்தவூரை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காணச்செய்யும் நோக்கில், ஒவ்வொரு நிந்தவூர் மகனுக்கும் கட்சி பேதமின்றி நமது பிரதேச சபையின் சேவை சென்றடைய, நாம் அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார் நிந்தவூரின் வட்டாரங்களை மையப்படுத்தியதான அபிவிருத்தித் திட்டங்களை பரிந்துரைக்கும் வகையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடனான, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வட்டாரங்கள் வாரியான ஆலோசனை குழுக்களை அமைக்கும் நோக்கில்,…
35 – 45 வயதுக்கிடைப்பட்ட பட்டதாரிகளின் நியமனம் வழங்கல் தொடர்பில் பிரதமருடன் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி சந்திப்பு!
-ஊடகப்பிரிவு- தற்போது நாட்டில் பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துகொள்வதற்கான நேர்முகப்பரீட்சை நடைபெற்று வருகிறது. இந்த நியமணம் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கவுள்ள நிலையில், 35 – 45 வயதுக்கிடைப்பட்ட பாட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். பிரதமருக்கும், அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பிக்கும் இடையில், அலரிமாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற சந்திப்பின் போதே, இது குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அதற்குப்…
சீன தூதுக்குழுவினர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்துப் பேச்சு!
-ஊடகப்பிரிவு- இலங்கை வந்துள்ள சீனாவின் யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் (Gao Shuxun) தலைமையிலான உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர், கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நேற்று (23) அமைச்சில் சந்தித்துப் பேசினர். 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சீன தென்னாசிய எக்ஸ்போ மற்றும் யுனனில் இடம்பெறவுள்ள 25 வது சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகக் கண்காட்சி தொடர்பில் அமைச்சருக்கும் தூதுக்குழுவுக்குமிடையில் பரஸ்பர கலந்துரையாடல் நடைபெற்றது.
“பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலினை நாம் வழங்கியுள்ளோம்” அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- ‘நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்கு மிகுந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒரு உகந்த சூழலினை வழங்கியுள்ளோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டத்தொடருக்கு (CHOGM) இணையாக இடம்பெற்ற பொதுநலவாய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இவ்…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை
ஊடகப்பிரிவு ஜிஹானி வீரசிங்க என்ற பெண்மணியை லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு கைத்தொழில் வரத்தக அமைச்சு அழைத்துச் செல்லவில்லை எனவும் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் போலி இணையத்தளங்களிலும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை தொடர்புபடுத்தி வெளிவந்த அனைத்து செய்திகளும் அப்பட்டமான, திட்டமிட்டு பரப்பிய பொய் என்றும் அமைச்சரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி, அங்கு வாழும் இலங்கையர்களை சந்தித்து…
ஜூம்ஆவுக்கான விசேட லீவு வசதியை கண்டிப்பாக அமுல்செய்ய நடவடிக்கை
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கு சாதகமான பதில் -ஊடகப்பிரிவு- வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் தமது ஜூம்ஆ கடமைகளை மேற்கொள்வதற்கு 2மணிநேரம் அனுமதி வழங்குவதென்று ஏற்கனவே அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை கண்டிப்பாக அமுல்படுத்துமாறு அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபன பணிப்பாளர் நாயகம் மீண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெப்ரவரி மாதம் 21ம் திகதி எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த போதே,…
மக்கள் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் இர்பான் தாஹிர்!
-ஊடகப்பிரிவு- தொழிலதிபர் இர்பான் தாஹிர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும், அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நேற்று (22) இடம்பெற்ற போதே, இர்பான் தாஹிர் மக்கள் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும், சதொச பிரதித்தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான…
தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும், சிறுகைத்தொழில் நிறுவனத்தில் தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் ஆறிகாமம், தும்மலசூரிய யகம்வெல முஸ்லிம் மாகாவித்தியாலயத்தில் நேற்று (21) இடம்பெற்றது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான என்.எம் நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம…
