Headlines

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட தொடங்கஸ்லந்த கிளை உருவாக்கம்!




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம். நஸீர் (MA) தலைமையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களின் ஏற்பாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொடங்கஸ்லந்த கிளை இன்று திங்கட்கிழமை (18) உருவாக்கம் பெற்றது.

குருநாகல் மாவட்டம் ரிதீகம பிரதேசசபை தொடங்கஸ்லந்த கிராம உத்தியோகத்தர் பிரிவை மையப்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச அபிவிருத்தி நலனுக்காக இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளரும் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கட்சி ஆதரவாளர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *