Main News
நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்ள புதிய மொபைல் அப்ளிகேசன்
நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காக மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றின் நடவடிக்கைகள் பற்றி இந்த மொபைல் அப்ளிகேசன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த உத்தியோகபூர்வ அப்ளிகேசனை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (7) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இலகுவில் மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இந்த மொபைல் அப்ளிகேசன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சீன உயர்மட்ட குழு இலங்கை வருகிறது
சீன வர்த்தக அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான தினைக்களத்தின் பணிப்பாளர் யங் வியுகுன் தலைமையிலான சீன அரசாங்கத்தின் உயர் மட்ட குழு இன்று இலங்கை வருகின்றது. இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்த குழு ஹம்பந்தொட்டை துறைமுகம், கொழும்பு- கண்டி அதிவேக வீதி மற்றும் போர்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளது. இலங்கையில் கடந்த அரசாங்கத்தினால் சீன நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பல பாரிய திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் ஸ்தம்பிதம் அடைந்துள்ள…
நல்லாட்சியை முன்னெடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பின் ஒரு வருட பூர்த்தியை தேசிய அரசாங்கமானது நாளை மறுதினம் கொண்டாடவுள்ள நிலையில் நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய ஒன்றினைந்த சிவில் அமைப்புக்கள் நல்லாட்சியை மலரச் செய்வதற்காக மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து பயணிக்குமாறு வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது. மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக செயற்படுகின்றமை, ஊழல் வாதிகளுக்கு எதிராக அரசின் மந்தமான விசாரனைகள், தனிப்பட்ட கட்சிகளின் தேவைகளுக்கு ஜனநாயக தேர்தல்களை…
இலங்கை பொருளாதார மாநாடு 2016
இலங்கை பொருளாதார மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த பொருளாதார மாநாட்டில் சர்வதேச மட்டத்திலான முதலீட்டாளர்கள், பொருளியல் துறையில் நோபல் பரிசு வென்ற கலாநிதி ஜோசப் ஸ்டீல்கிலிட்ஸ் உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலய நாடுகளிடையேயான அபிவிருத்தி, போட்டித்தன்மை மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள்…
வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவர் கட்டணம்
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகளை (செனலிங்) மேற்கொள்ளும் வைத்திய நிபுணர்களின் கட்டணத்தை ரூபா 2000 ஆக வரையறுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நோயாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தற்கமைய விசேட வைத்திய நிபுணர்களின் சேவையை பெற்றுக் கொள்ளும் நோயாளர்களிடமிருந்து வைத்தியர் கட்டணமாக 250 ரூபா தொடக்கம் ரூபா 2000 வரை அறவிடப்படலாம். விசேட வைத்திய நிபுணர் கட்டணம் உட்பட அதற்குரிய வைத்தியசாலை கட்டணமாக ரூபா 100…
இரவு நேரங்களில் நரித்தனமான செயற்படும் சிங்களே அமைப்பினர்
சிங்களே என்று சொல்லிக் கொண்டு இரவு நேரங்களில் நரித் தனமாக செயல்படும் சிலரால் சிங்கள இனத்துக்கே அவமானமாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று (6) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ‘சிங்களே என்ற ஓர் இனம் தெரியாத குழுவொன்று தற்பொது நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது…
ஒன்றுபடுவதன் மூலமே நமது இலட்சியத்தை அடைய முடியும் -றிஷாத் பதியுதீன்
புத்தளம் வாழ் முஸ்லிம்கள் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றுமைப்படுவதன் மூலம் புத்தளத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொள்ள முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் மொஹிதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஏற்பாட்டில் பழைய குத்பா பள்ளி கலாசாரமண்டபத்தில் இடம்பெற்ற மீலாத் விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது,சிறு சிறு வேறுபாடுகள் காரணமாக புத்தளம் மக்கள் இன்று பிரிந்து செயல்படுகின்றனர். என்னதான் கட்சிக்கொள்கைகள் இருந்தாலும் சமூகம் என்று வரும்போது நாம் ஒன்றுபடுவதன்…
ஜனாதிபதிக்கு தெரிவிக்க -1919
இலங்கை நாட்டில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. “ஜனாதிபதிக்கு தெரிவிக்க” எனும் பெயரிலான இந்தச் சேவை எதிர்வரும் 8ம் திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. இந்த சேவையூடாக பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தேவைகள் மற்றும் யோசனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு…
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் சாதாரண உடையில் பங்கேற்ற ஜனாதிபதி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார். இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார். அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்களிலிருந்தே பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும்…
ஜனாதிபதியின் அறிவிப்புக்களை ஆலோசனையாகவே எடுக்கவேண்டும்
அரசியலமைப்பு 19 ஆவது தடவையாகவும் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் கணிசமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதனால் ஜனாதிபதியின் கூற்றுக்களை ஆலோசனைகளாக மாத்திரமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதோடு பிரதமரின் கருத்துக்களையே நடைமுறைக்கு சாத்தியப்படும் விடயங்களாக கருத வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் அவசரம் காட்டாது என்ற ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்…
இலங்கை கடற்படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிப்போம் : நவாஸ்
இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம். அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…
மூன்று ஆசனங்கள் கொண்ட பேருந்துகளை தடை செய்யக் கோரிக்கை
கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேருந்துகள் தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பேருந்துளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும்…
