Main News
வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த பழங்கள் விற்பனை
வவுனியா வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் சிலவற்றில் பழுதடைந்த பழங்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது பழுதாகிய மற்றும் அழுகிய நிலையில் உள்ள சில பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சிறுவர்கள் கூட பழுதாகியமை தெரியாது பழங்களை வாங்கி கழுவிவிட்டு உண்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் பொது…
மக்கள் கருத்தறியும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்றுடன் (29) நிறைவு செய்யப்படவுள்ளது. மாவட்ட ரீதியில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ள்ளார். அதற்கமைய இன்றைய தினம் அம்பாறை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி…
கொழும்பில் கோல்வ் விளையாடிய நியூஸிலாந்து பிரதமர்
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ, கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோல்வ் கழகத்தில் கோல்வ் விளையாடினார்.
யோஷிதவின் வழக்கு ஒத்திவைப்பு
யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் ஒரே மேடையில் சந்திக்க மக்கள் விருப்பம் கொண்டிருப்பது தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது, அது குறித்து பதிலளித்த மஹிந்த, அனைவரிடமும் பல ஆசைகள் உள்ளன. அவற்றை பற்றி பின்பு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 26 புதிய மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைப்பாளர்களுக்கு நியமனம் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.
யோஷித இடைநீக்கம்
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் லெப்டினன் யோசித ராஜபக்ச, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கப்பட்டள்ளார். சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு, அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றில் பிரசன்னமானார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார். யோஷித ராஜபக்சவின் பிணை மனுக் கோரிக்கை தொடர்பான மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்கும் நோக்கிலே அவர் இவ்வாறு நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார். ஊழல் மோசடிகள் மற்றும் நிதிச் சலவை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யோசித உள்ளிட்ட ஐந்து பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு இடமில்லை
தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கின்றோம் என்பதற்காக தேசியப் பாதுகாப்பில் சந்தேகம் கொள்ளத் தேவையும் இல்லை. தேசியப் பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை. அதேபோல் இப்போதிருக்கும் நிலைமையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, எந்த சந்தர்பத்திலும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலமாக எமது இராணுவத்தை…
இரத்தக் கறை படிந்தவர்கள் தேங்காய் உடைப்பது சாபக்கேடு
‘நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக இன்று சிலர், சிதறு தேங்காய் உடைக்கின்றனர். நேர்மையானவர்களே சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். மாறாக இரத்தக்கறை படிந்தவர்கள் தேங்காய்களை உடைப்பதால் எதுவும் நடந்துவிடுவதில்லை’ என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாவலப்பிட்டியவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், ‘பல ஊடகவியலாளர்களின் கொலைக்கு காரணமானவர்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவை சிறையில் தள்ளியவர்கள் தேங்காய்களை உடைப்பதால்…
அரசியல் கைதிகளை விடுதலை செய்: ஜே.வி.பி
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கையொன்றை முன்வைத்தது. வெவ்வேறான இனக்குழுமங்கள் பங்குபெறும் ஒவ்வொரு விழாவிலும், தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றைக் கொண்டுவருமாறும் அம்முன்னணி கோரியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியான சோசலிஷ இளைஞர் ஒன்றியத்தின் 3ஆவது தேசிய மாநாடு கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு வெளியிடப்பட்ட தேசிய இளைஞர் கொள்கையூடாகவே, இந்தக்…
வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கணிப்புக்கு அனுமதி
– எஸ்.ரவிசான் – தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் கருத்துக்கள் உட்பட யோசனைகளை பெறுவதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்தது. வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை காணொளி அழைப்பு மூலமாக பெற்றுகொள்வதற்கு போதுமான வசதி எம்மிடம் காணப்படாத நிலையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.
பொதுபல சேனா ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்
அரசாங்கம் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை எதிர்த்தும் பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜரொன்றினைக் கையளித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயினால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் சமய ரீதியிலான வங்கி முறையொன்றினை அரசு…
