Main News
14 நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி, இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக் குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் அவ்வாறு அறிவிக்காத பட்சத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது தேர்தல் திகதி தொடர்பில் கேள்வி எழுப்புவோம். கடந்த ஜனவரி எட்டாம் திகதி…
மைத்திரி – மஹிந்த இணைய சாத்தியமில்லை : விக்ரமபாகு
மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
‘நான் பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவன்’
அரசன் அரசனைப் போல் உணவருந்த வேண்டும். ஜனாதிபதி தன் சிறப்புரிமைகளை அனுபவிக்க வேண்டும். அதைவிடுத்து கிராம சேவகரைப் போல் செயல்படக்கூடாது என என்னை விமர்சித்துள்ளார். ஆனால், நான் இதற்கு தயாரில்லை. அனைவருக்கும் சம அந்தஸ்து என்ற பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவன் நான் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
”மைத்திரியும் பொறுப்பு”
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றது எனவும் அந்த அனைத்து குற்றங்களையும் மஹிந்த ராஜபக்ஸ தனித்து செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த கால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அப்போதைய அமைச்சரவையில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேனவும்அதற்கான பொறுப்பினை…
மஹிந்தவின் தோல்விக்கு யார் காரணம்?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை பஷில் ராஜபக் ஷ, கோதாபய ராஜபக் ஷ ஆகியோர் ஒதுக்கித்தள்ளியதோடு தம்மை முதன்மைப்படுத்தினர். இறுதியில் இதற்கான விலையை மஹிந்த ராஜபக் ஷ கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
மின்சாரக்கதிரை என்ற சொல் இன்று அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளது
மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் (28) நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம…
பழிவாங்கலாலேயே ஜனாதிபதியானேன்
‘அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமையின் பயனாகவே, இறுதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். ‘இதேவேளை, அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்ற அரச நிர்வாகச் சேவையின் 33ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள்…
ஜெனீவா செல்லும் கூட்டு எதிர்க்கட்சி
– லியோ நிரோஷ தர்ஷன் – நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்யவே கூட்டு எதிர்க்கட்சி ஜெனீவா செல்லவுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதயகம்பில ஆகியோர் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜெனீவா பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தண்டனையை நெருங்கும் ஞானசார
ஞானசார தேரரை செப்ரம்பர் 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை விடுத்தள்ளது. மாலபே பிரதேசத்தில் கிருஸ்தவ தேவாலயமொன்றை தாக்கி சேதப்படுத்திய வழக்கு தொடர்பிலேயே இவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட இன்னும் சில பிக்குகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கே ஞானசார தேரவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ் வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பொதுபலசேனா பிக்குகள் நிரபராதிகள் என…
‘இலங்கைக்கு ஆதரவளித்தமை சரியே’
இலங்கையின் சிவில் யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், இலங்கைக்கு ஆதரவான போக்கை போக்கை வெளிப்படுத்தியமையை, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட் நியாயப்படுத்தியுள்ளார். இலங்கைக்கெதிராக உலக வல்லரசு நாடுகள் பல ஒன்றாகக் கூடியபோது, அந்தக் கூட்டணியில் இணைவதிலிருந்து அவுஸ்திரேலியா தள்ளியிருந்ததோடு, இலங்கையோடு நெருங்கிச் செயற்பட்டிருந்தது. அப்போது, அவுஸ்திரேலியாவின் பிரதமராக டொனி அபொட்டே செயற்பட்டிருந்தார். இந்நிலையில், அவுஸ்திரேலிய ஊடகமொன்றில் பத்தியொன்றை எழுதியுள்ள டொனி அபொட், ‘இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் எடுக்கப்பட்ட கடுமையான, ஆனால் அனேகமாகத் தவிர்க்க…
‘நான் தனியாகச் செய்யவில்லை’
‘அன்று அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், எதிர்க்கட்சியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றையும் நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது’ என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியலில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தப் பொறுப்புகளிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காக, எதிர்க்கட்சியின் மீது குற்றஞ்சாட்டவும் கூடாது’…
தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும்!
தீவிரவாதத்தை ஒழிக்க தெற்காசிய வலயம் ஒன்றிணைய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார். இராணுவத்தினருக்கு மேலாக தாய் நாட்டை கௌரவத்துடன் பாதுகாக்க புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையோடு செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதலில் 70 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
