Main News
ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்
– லியோ நிரோஷ தர்ஷன் – ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன நான்கு நாள் உத்தியோகப்பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்கவிற்கு செல்லவுள்ளளார். பன்னாடுகளின் தலைவர்களின் பங்குப்பற்றலுடன் சூழல் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.
சிறுநீரகம் வழங்கியதை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டனர்
சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள எட்டு பேரில் அறுவர் தாங்கள் சிறுநீரகத்தை வழங்கியதை ஒப்புக் கொண்டுள்ளதாக, நீதிமன்றத்தில், அவர்களது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். சந்தேகநபர்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கு அமையவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், சந்தேகநபர்கள் வசமிருந்து போலி ஆவணங்கள் மற்றும் போலி சீல்கள்…
அஷ்ரபின் குணாதிசயங்களை றிஷாத்தில் காண்கின்றேன்
– சுஐப் எம்.காசிம் – மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடம் கண்ட குணாதிசயங்களை, அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் கண்டதனாலேயே, தான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்துகொண்டதாக, பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று (04/04/2016) தெரிவித்தார். மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, நவவி எம்.பி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல்…
தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி ஓடித்திரியவைத்துள்ளோம் – அமைச்சர் றிஷாத்
– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவிற்குப் பின்னர் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை கணக்கிலெடுக்காது அரசியல் செய்தவர்கள் இப்போது ஓடித்திரிகிறார்கள். மக்கள் காங்கிரஸின் வரவு அவர்களை கொழும்பில் இருக்கவிடாமல் அம்பாறை பிரதேசங்களுக்கு அடிக்கடி வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று (04) மாலை இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு நாளை
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை (05) பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நாளை(05) முதலாவது அமர்வு நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை உருவாக்கி அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கத்தக்க…
நட்ட ஈடு கோரும் சீன நிறுவனம்
கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாவதால், அதற்கான நட்டஈட்டுத் தொகைச் செலுத்துமாறு, இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்படி துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால், குறித்த சீன…
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள சீன விஜயத்தின் போது இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அதுமட்டுமன்றி பல்வேறு உடன்படிக்கைகளும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன. முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு சிறுநீரக நடமாடும் சேவை, விளையாட்டு கூட்டுறவு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், தெற்கு அதிவேக பாதைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தி கம்பஹா அத்தனகல்ல, மினுவங்கொடப் பகுதிகளுக்கான நீர்வழங்கல் கடன் உடன்படிக்கை போன்றன கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் புதன்கிழமை…
இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு உடன்படிக்கை ரத்து?
இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது. ஐவிஆர்சிஎல் என்ற இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையே ரத்துச்செய்யப்படவுள்ளது. இந்த நிறுவனத்தினால் கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் உடைந்து வீழ்ந்து 24 பேர் அதில் பலியாகினர். இதனையடுத்து இலங்கையின் நகர அபிவிருத்தி சபை குறித்து நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யவுள்ளது. குறித்த நிறுவனத்தினால் இலங்கையில் நாலாயிரம் வீடுகள் கட்டப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாபோல நடைபாதையை நான் உடைக்கவில்லை – ஜோன் அமரதுங்க
வத்தளை, மாபோல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த பாதையை உடைத்தவர்களை நானும் தேடி வருகின்றேன். பாதையை உடைத்தவர்கள் பிடிபட்டால் அவர்களைக் கொண்டே பாதையை மீளவு அமைத்துக் கொடுப்பேன். பாதையை உடைக்குமாறு நான் கூறவில்லை. உண்மையில் அந்தப் பகுதியில் பாதையொன்றை அமைக்க நான் திட்டமிட்டிருந்தேன். எனினும், நடைபாதையை…
பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தற்போதைக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்த நிகழ்ச்சி நிரல்கள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் இலங்கை விஜயத்தின் பின்னர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைக்கு பான் கீ மூன்…
தென்பகுதி மீனவர்களுக்குத் தடை
முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் புதிய தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவிலுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். அப்போது வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு கடற்பரப்பில் தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவைச்…
போதைப் பொருள் வலையமைப்பின் உள் நாட்டு முகவர்களைத் தேடி வேட்டை
இலங்கையின் தென் கடல் பிராந்தியத்தில் ஈரான் கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருள் கடத்தலானது இலங்கை – பாகிஸ்தான் போதைப் பொருள் வலையமைப்பொன்றினுடையது என தற்போதைய விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் இந்த சட்ட விரோத வர்த்தகத்தின் இலங்கை முகவர்களைத் தேடி தற்சமயம் இரகசிய விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
