Main News
கட்டுநாயக்க விமான நிலையம் பகுதியளவில் மூடப்படும்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பகுதியளவில் மூடப்படவுள்ளது. அவசரமான விஸ்தரிப்பு திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி ஜனவரி மாதம் முதல் முற்பகல் 9 மணிமுதல் 6 மணித்தியாலங்களுக்கு கட்டுநாயக்க விமானநிலையம் பகுதியளவில் மூன்று மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப் பணிகளுக்காக ஏற்கனவே ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலை
தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சீ.டி ஸ்கேன், எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகள் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது 33 ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதியமைச்சரானார் பாலித்த தேவரப்பெரும
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன இன்று (06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக பாலித்த தேவரப்பெருமவும்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக, மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
பிரதமர் சீனா பயணமானார்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 1.30 மணிக்கு சீனாவுக்கு விஜயமானார். சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இவர் அங்கு செல்கிறார். இவருடன் 15 தூதுவர்களும் பயணமாகினர். இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான UL 868 இல் 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர் . இவ்விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிசிலியா கொத்தலாவவின் விளக்கமறியல் நீடிப்பு.!
முன்னாள் செலிங்கோ நிறுவன உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பில்லப்பிட்டிய இன்று உத்தரவிட்டுள்ளார். சிசிலியா கொத்தலாவலவின் உடல் நிலை பற்றிய வைத்திய அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்குமாறும் இதன் போது நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணகளை மேற்கொள்ள கால அவகாசம் தருமாறு குற்றபுலனாய்வு விசாரணைப்பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்டன் கீ நிறுவன சேமிப்பாளர்களின்…
சு.கவின் மே தின கூட்டம் காலியில்
– வி.நிரோஷினி – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாக கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனக்கு எதுவும் கூற முடியாது
– வி.நிரோஷினி – பனாமா இரகசிய வங்கிக் கணக்குகள் தொடர்பில் என்னால் எதுவும் கூற முடியாது. அது தொடர்பில் நாடாளுமன்றத்திலேயே கூடி பேசி தீர்மானிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலகில் இரசிய வங்கிக்கணக்குகள் உள்ள நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஐரிஸ் டைம்ஸ் பத்திரிகை…
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்றங்ளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதனால் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இந்த விளக்கமறியல் நீடிப்பினை வழங்கியுள்ளார். இன்று காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த…
மனுச நாணயக்கார பிரதியமைச்சரானார்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இலங்கைக்கு அவுஸ்திரேலியா பாராட்டு
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலை தடுக்க இலங்கை முன்னெடுத்து வருகிற முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை தளபதியை அவுஸ்திரேலியாவின் ஆட்கடத்தல் குறித்து ஆராயும் ஆணையாளர் சந்தித்த போதே இதனை குறிப்பிட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பொது எதிரணியின் மேதின கூட்டம் நாரஹேன்பிட்டியில்
உழைக்கும் மக்களின் உரிமைகளை வலியுறுத்தியும் , நாட்டிற்கு ஜனநாயக ஆட்சியை கோரியும் கூட்டு எதிர் க்கட்சியின் மே தின கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் நாரஹேன்பிட்டியில் நடைபெறும். ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை சோசலிச நாடாகும் – ரில்வின் சில்வா
சோசலிச நாடாக இலங்கை உருவாக்கப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பாணந்துறை நகர மண்டத்தில் நேற்றைய தினம் (5) நடைபெற்ற ஏப்ரல் வீரர்கள் தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிக்கையில், குடும்ப ஆட்சி மற்றும் கூட்டு ஆட்சியினால் தோல்வியடைந்த நாடாக மாற்றமடைந்துள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிராக ஜே.வி.பி முன்னெடுத்ததனைப் போன்றே சோசலிச நாடு ஒன்றை உருவாக்குவதிலும் பங்களிப்பு வழங்கும். ராஜபக்ச அரசாங்கம் 1000 பில்லியன்…
