Main News
தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்
அட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 2 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 2 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வாகன நெரிசலுக்கான தீர்வு : மக்களிடம் வேண்டுகோள்
புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் 08ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையிலும் பின்னர் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலும் பிரதான நுழைவாயில்களுக்குப் பதிலாக மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்களிடம் நெடுஞ்சாலைகள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
எமது அடையாளத்தை இல்லாதொழிக்கும் திட்டத்தை கைவிடுங்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்
சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பது இப்பிரதேசத்தின் பூர்வீக குடி மக்கள் என்ற அடிப்படையில் எமது வாழ்வாதாரத்தையும் இயல்வு வாழ்வையும் தமது அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். எனவே சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர். மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் நேற்று 7ஆம் திகதி சந்தோஷபுரம் சிவசக்தி…
சீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு!
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார். இந்த உயர்மட்ட குழு 03 பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என பிரதமர் இதன் போது சீன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்…
புத்தாண்டு போக்குவரத்துச் சேவையில் 6,000 பஸ்கள்!
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, விசேட பஸ் போக்குவரத்துச் சேவையொன்றை நடத்த, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்காக 6 ஆயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. இதற்கு மேலதிகமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காகவும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு மேலும் கூறியது.
மஹிந்தவின் பாதுகாப்புக்கு மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்(ASP) நியமனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால், டப்ளியூ. திலகரட்ன, பீ.ஜீ.எஸ். குணதிலக, பீ.எம்.பீ. பெரேரா ஆகிய மூன்று உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட இடமளிக்கப் போவதில்லை
அரச ஊழியர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 2500 கிராம அலுவலர்களுக்கு சமாதான நீதிவான் நியமனம் வழங்குவதற்காக நேற்று (07) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற வைபவத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்களை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தான் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல்வாதியும் அரச உத்தியோகத்தரும் தனது கடமை தொடர்பில் நேர்மையாக பணியாற்ற வேண்டுமென குறிப்பிட்டார். இரண்டு ஆண்டுகாலம் கிராம…
பொருளாதார மையமாக மாற்றப்படும் ஹம்பாந்தோட்டை
ஹம்பாந்தோட்டையை ஒரு பொருளாதார மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நடவடிக்கைக்கு சீன அரசாங்கம் முதலீடுகளை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சீன அரசாங்கம் பொலன்னறுவை பகுதியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சீனாவின் 21ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப்பாதை இந்திய மற்றும் இலங்கைக்கான பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சீனாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.!
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று (7) ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தம், வர்த்தக மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறுநீரக நோய் பரிசோதனை தொடர்பான ஒப்பந்தம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் பாகத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் ஆகியன உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று முதல் விசேட பஸ் சேவைகள்!
தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதிவேக வீதிகளிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.
மின்சார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் முயற்சி
திட்டமிட்டு நீர் மட்டத்தைக் குறைத்து நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி நிலையை ஏற்படுத்த மின்சார சபையில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையைக் குழப்பி மின் நெருக்கடியை தோற்றுவிக்க மின்சார சபையில் உள்ள சிலர்…
பனாமா ஆவணக்கசிவில் இலங்கையர் தொடர்பு குறித்து விசாரணை
பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து…
