Headlines

சிறிதுகாலம் பொறுத்திருங்கள் – ரவி கருணாநாயக்க

நல்லாட்சியை  வழங்கிய மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த  வசந்த காலம் வரும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்போது பேசுகையிலேயே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு…

Read More

எரிவாயு கசிவால் வீடு முற்றாக எரிந்து நாசம்

ராஜகிரிய – நாவல பகுதியில் எரிவாயு கசிவு காரணமான வீடு தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் பரவிய தீயை கோட்டை மாநகர சபையின் தீயனைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ காரணமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

முஸ்லிம் நாடுகளுடன் ரணில் ஒப்பந்தம்

சீன விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை,  நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நடத்திய…

Read More

எனது பாதுகாப்பிற்கு ஒரு இராணுவ வீரரையேனும் பயன்படுத்தவில்லை

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவ பாதுகாப்பை வழங்கியுள்ளேன் ஆனால் நாட்டின் ஜனாதிபதியான எனது பாதுகாப்பிற்கு ஒரு இராணுவ வீரரையேனும் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக் ஷ இரண்டு வருடங்களிற்கு முன்னதாக தேர்தலை நடத்தினார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிபிலை நகரில் சனிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி சம்மேளனத்தில் உரையாற்றும் போதே…

Read More

மஹிந்த கலந்து கொள்வார்

பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்வார் என மஹிந்த ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எமது அணியைச் சேர்ந்த எவரும் அரசுடன் இணையப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் இம்முறை கிருலப்பனை மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேதின ஊர்வலம் நாரஹேன்பிட்டி, சாலிகா மைதானத்திலிருந்து ஆரம்பமாகி கிருலப்பனை மைதானத்தை வந்தடைந்து மாலை 3.00 மணிக்கு பொதுக்கூட்டம்…

Read More

ஓகஸ்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளமையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஓகஸ்ட் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினம் அறிவிக்கப்படலாம் என, தெரிவிக்கப்படுகிறது.

Read More

இன்று ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் இன்றுடன் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்கின்றார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக என்.கே. இளங்கக்கோன் கடமையாற்றி வந்தார். 1980ஆம் ஆண்டு புதிய துணை பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இளங்கக்கோன் 1982ஆம் ஆண்டில் திறமை அடிப்படையில் துணை பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியிருந்தார். நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ள என்.கே. இளங்கக்கோன் பல பொலிஸ் பிரிவுகளின் பணிப்பாளராகவும்…

Read More

புதிய பொலிஸ் மா அதிபர்..?

புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவுக்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மூவருடைய பெயர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகிய மூவருமே இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களாவர்.

Read More

நாடளாவிய ரீதியில் “கூகுல் லூன்” இணைய வசதி..!

இலங்கையில் இணைய வசதியினை விஸ்தரிப்பதற்காக நாடுபூராகவும் கூகுல் இணைய பலூன் வசதியினை ஏறபடுத்தவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதோடு இலகு இணைய தரவிறக்கம் மற்றும் அதிவேக இணைய வசதியினை ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

இலங்கையில் மின்சார ரயில்..!

மின்சாரத்தின் உதவியால் பயணிக்கக் கூடிய ரயில் சேவையை இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாணந்துறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடு திரும்பினார் பிரதமர்.!

சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

150,000 ரூபா போனஸ் வழங்கினால் 1,400 மில்லியன் நட்டம்

சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக அதிகாரசபை தொழிற்சங்கங்கள் கோரும் 150,000ரூபா போனஸ்தொகை வழங்கப்பட்டால் துறைமுக அதிகார சபைக்கு 1,400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று மேற்படி அதிகார சபையின் நிர்வாக பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார்.

Read More