Main News
பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைவு!
சுதந்திரக் கூட்டணியின் மே தின கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறுமுகம் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரபா கணேசன் ஆகியோர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச்…
கீதா, சாலிய பதவி நீக்கம் – 11 பேருக்கு புதிய பதவிகள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு, கம்பஹா மாவட்ட அமைப்பாளர் –…
அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி
– ஏ.பி.மதன் – நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினைக் கவிழ்க்கும் மாற்றுச் சக்திகளின் கனவு, ஒருபோதும் நனவாகாது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் ஊடகங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (27) புதன்கிழமை சந்தித்து நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குப் பற்றி விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யோஷித தொடர்பில் கடற்படை விசாரணை
பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்குப் பின்னர், யோஷித ராஜபக்ஷ தொடர்பில், கடற்படையினரின் விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் அதுவரையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் படைத்தரப்பு அறிவித்துள்ளது. கடற்படையின் கெடெட் அதிகாரியாக அவர் சேர்வதற்கான தகுதிகள் இருந்தனவா? அவை தொடர்பில் படைத்தரப்பு ஆய்வு செய்துள்ளதா? மற்றும் அவரது கடவுச்சீட்டு ஆகியன தொடர்பிலேயே, கடற்படையினர் விசாரணை நடத்தவுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல், கடற்படையிலிருந்து யோஷித ராஜபக்ஷ, பணிநீக்கம்…
மஹிந்தவிற்கு இடமில்லை! டிலான் பெரேரா
எதிர்காலத்தில் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு போட்டியிடக்கூடிய சந்தர்ப்பம் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மஹிந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை. 19ம் திருத்தச் சட்டத்திற்கு மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவும் கை உயர்த்தி சம்மதம் தெரிவித்துள்ளார். நேற்று (27) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மோசடி செய்யும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை.!
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பணத்தினை மோசடி செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அநுராதபுரம் சி.டி.சி. வரவேற்பு மண்டபத்தில் போக்குவரத்துச் சபை ஊழியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம்: அரசாங்கம்
– எம்.எம்.மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாவார். தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச…
நாட்டை கூறுபோட இடமளியோம் : ஜனாதிபதி
இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் – தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறைமையே அவசியம் என்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இந்தக் கேள்வி தொடர்பில்…
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்?
ஒலிம்பிக் அல்லது பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பதா? இல்லையா? என்பது குறித்தான முகாமைத்துவக் குழுவின் பரிந்தரைகளை சர்வதேச கிரிக்கட் பேரவை திங்களன்று ஆராய்ந்தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச ஒலிம்பிக் குழுவினர், பொதுநலவாய விளையாட்டுத்துறை சமமேளன உறுப்பினர்கள் ஆகியோருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் பேரவையின் நிருவாக சபை தீர்மானித்தது. சீனாவில் கிரிக்கெட் விளையாட்டுத்துறை வியாபித்து வருவது தொடர்பான அறிக்கை ஒன்று சர்வதேச…
எவரையும் வீழ்த்தி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் எமக்கில்லை
– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் உள்ளடக்கும் வகையில் அந்த சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி பொருத்தமான அரசியல் திட்ட வரைபொன்றை உருவாக்குவதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எண்ணமாகுமென்று அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று மாலை தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ள அரசியல் திட்ட வரைவை மேலும் மெருகூட்டி அதனை முழுமைப்படுத்துவதற்காக முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் அரசியல் மறுசீரமைப்பு ஆலோசனைக்குழு நடத்திய…
கபீர் ஹாஷிம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம், தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று(27) அழைப்பாணை விடுத்தது. அது , அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதாகும். குறித்த மனு மீதான விசாரணை மீண்டும்…
ரணில் – சம்பந்தன் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று (27) புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, கிளிநொச்சியில் மக்கள் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில், பிரதமரிடம் அவர் முறையிட்டுள்ளார்.
