Main News
பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்குப் பதவி உயர்வு
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என்போர் உள்ளடங்கியுள்ளனர். முன்னைய அரசாங்கத்தின் பழிவாங்கல் போக்கு காரணமாக பொலிஸ் அத்தியட்சகர்கள் சீ.ஏ. பிரேமசாந்த மற்றும் எச். எச். சூலசிறி ஆகியோருக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறைrifkas rikasadminயீட்டை அடுத்து தற்போது அவர்களுக்கான பதவி…
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, புதிய இடத்தில் காணி
– பரீல் – நான்கு வருட காலமாக பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு மாற்றீடாக தம்புள்ளையில் அடுத்த மாதம் புதிய காணி வழங்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை நகரத்துக்கு அண்மையில் சுமார் 150 மீற்றர் தூரத்தில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கான காணியொன்றினை இனங் கண்டுள்ளதாகவும், எதிர்வரும் மே மாதத்தில் இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகுமெனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவித்தார். தம்புள்ளையில் பள்ளிவாசலை தற்போது…
மே 2 ஆம் திகதி விடுமுறை
மே தினத்தை முன்னிட்டு சகல அரச நிறுவனங்களுக்கும் மே 2 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு.!
புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று இன்று (29) காலை சாலியபுரம் பகுதியில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவி
இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் ஓர் நிலையான நிதி நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு ஒருமித்த கருத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த காலத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், நாணய நிதியம் தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.
சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதில் வெற்றிகண்ட றிஷாத்
– சுஐப் எம்.காசிம் – வடமாகாணத்தின் முக்கிய தொழிற்சாலைகளான காங்கேசந்துறை, சீமெந்து கூட்டுத்தாபனம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு – குறிஞ்சாக்கேணி உப்பளம் ஆகியவை யுத்தத்தின் கோரத்தினால் சீர்குலைந்து கிடக்கின்றன. ஆனையிறவு உப்பளத்தின் ஒரு பகுதி சமாதானம் ஏற்பட்ட பின்னர் செய்கை பண்ணப்பட்டு வருகின்றபோதும், பெரும்பாலான உப்பு வாய்க்கால்கள் கைவிடப்பட்டே காணப்படுகின்றன. அமைச்சர் றிசாத் பதியுதீன், தனது கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இந்தத் தொழிற்சாலைகளை சுமார் 08 மாதங்களுக்கு முன்பே பொறுப்பேற்றார். இந்தத் தொழிற்சாலைகளை…
இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒபாமா
இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தொடர்ச்சியான வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும்…
மே தினக் கூட்ட பாதுகாப்பிற்கு 5000 பொலிஸார் கடமையில்!
மே தினக் கூட்ட பாதுகாப்பு பணிகளில் 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மே தினக் கூட்டங்கள் மற்றும் மே தின பேரணிகள் போன்றவற்றுக்கான பாதுகாப்பிற்காக இவ்வாறு 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைபெறும் மே தினக் கூட்டங்களுக்காக 3100 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மோட்டார் போக்குவரத்து கடமைகளுக்காக 1900 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மே தினக் கூட்டங்களின்…
தம்மாலோக தேரர் விவகாரம் – விசாரணைகள் நிறைவு
உடுவே தம்மாலோக தேரர் அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை தன்னகத்தே வைத்திருந்தமை தொடர்பிலான, விசாரணை நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர். இன்று குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கூறியுள்ளனர். மேலும், விசாரணை குறித்த அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அவர்கள், சட்ட மா அதிபரின் அறிவுரை கிடைக்கப்பெற்றதும், உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் நீதிமன்றத்தில்…
‘ஒன்றிணைந்த எதிரிணியென அழைக்கவேண்டாம்’
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சார்பான அணியினரை, ஒன்றிணைந்த எதிரணி என அழைக்கவேண்டாமெனவும், அவர்கள், உண்மையான எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளது. tm
ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரன் அமைப்பாளராக நியமனம்
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவராகவே ஜே.ஆரின் பேரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்து முப்படை தலைமை அதிகாரி – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!
தாய்லாந்து ரோயல் ஆயுதப்படைகளுக்கான பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை நேற்று (27) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார். ஜெனரல் சொம்மை காவ்டிரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வெவ்வேறு சந்திப்புகளின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு…
