Headlines

முன்னாள் தூதுவர் உதயங்கவை கைதுசெய்ய நீதிமன்றில் கோரிக்கை




ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு கொழும்பு கோட்டை நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை  மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *