Main News
பாதயாத்திரையில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றனர்
பாதயாத்திரையில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் நிறைவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் கொழும்பை அடைந்த போது அதில் பதினைந்து இலட்சம் பேர் பங்கேற்றிருந்தனர். இந்த அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதனையே மக்கள் ஒருமித்த குரலில் இவ்வாறு வலியுறுத்துகின்றனர். ஜெனீவாவிற்கு சென்று வெளிவிவகார அமைச்சர் இந்த நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார்….
இரசாயனத் திரவப்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு
சூழல் மாசடைவதைக் குறைத்து, வாகனங்களின் எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்தி, குளிர்ச்சியூட்டும் தன்மையை அதிகரிக்கும் பயோ கார் வீடா (Bio Car- Vita) என்னும் இரசாயனத் திரவப்பொருளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01/08/2016) இடம்பெற்றது. அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அதிதிகளாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், கஹடகஹா கிரபைட் நிறுவனத்தின் தலைவர் மஜீத் உட்பட உயரதிகாரிகள்…
மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூதூர் நீதவான் நீதிமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் (29) திறந்து வைக்கப்பட்டது. மூதூரிற்கு வருகை தந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மூதூர் தேர்தல் தொகுதி மக்கள் தமக்கு பெருமளவு ஆதரவு வழங்கியதாகவும் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதூத்து அவற்றை பலப்படுத்துவதற்கு தேவையான வசதி வாய்ப்பக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் மக்கள் தம்மை ஜனாதிபதியாக்க பல காரணங்கள் இருந்ததாகவும் அவற்றுள் சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாத்து பலப்படுத்துவது…
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்
மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு கால்களில் கொப்பளங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(31) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கி.மீ பிரதேச வீதிகளை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்ச்சித்திட்டம் பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரபுர கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,…
பிரதமர் இன்று இந்தோனேஷியாவுக்கு விஜயம்
பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(01) இந்தோனேசியாவிற்கு புறப்படவுள்ளார். இந்தோனேசிய ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத் தொடர்ந்தே அவரது இவ்விஜயம் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனோசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo), நிதியமைச்சர் சிறி முல்ஜானி இந்திரவதி (Sri Mulyani Indrawati), கடல்வலயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட…
எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது இரு பிரதான கட்சிகளை உள்ளடக்கி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விடுத்து இனவாதத்தை தூண்டி பாதயாத்திரை எனும் பெயரில் கட்சியை பிளவுப்படுத்த நினைக்கும் எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை என மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மேலும் பாதயாத்திரை எனும் பெயரில் மக்களை திசைத்திருப்பி தனிப்பட்ட சில நபர்களுக்காக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி…
மூன்று அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன் அவர்…
மஹிந்த அணியினர்க்கு மைதானம் மறுப்பு
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதிநாளான இன்று பாதயாத்திரை கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுக்கூட்டத்துக்கான மைதானம் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. காலை ஒன்பது மணியளவில் கிரிபத்கொடை நகரில் இருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் கூட்டு எதிர்க்கட்சி முன்னர் தீர்மானித்திருந்தது. அதற்காக வாசுதேவ நாணயக்கார பெயரில் கொழும்பு ஹைட்பார்க் மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் ஹைட்பார்க்…
“பாதயாத்திரையின் நோக்கம் குடும்ப ஆட்சி”
“கூட்டு எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும் இல்லை. இந்த பாதயாத்திரையின் நோக்கம் மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதா? ” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர். ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வீதியில் இறங்கியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்….
உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும்!
-சுஐப் எம்.காசிம் – உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழாவில் பிரதமவிருந்தினராக அமைச்சர் றிசாத் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக அங்கு இடம்பெற்ற கண்காட்சியையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கல்லூரியின் அதிபர் மௌலவி அஷ்ரப் முபாரக் அல் ரஷாதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதிதிகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான…
பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச சொத்ததுக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் பசில் ராஜபக்ஷ கடந்த ஜுலை 18 ஆம் திகதி…
பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்று முதல் பஸ் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின் அதிகரிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பஸ் கட்டண உயர்வுக்கு சிபாரிசு செய்யுமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் பஸ் கட்டணத்தை ஆறு வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதுவரை காலமும் வழக்கத்தில் இருந்த ஆரம்பக் கட்டணமான எட்டு…
