Main News
பிரதமர் நாடு திரும்பினார்!
சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்றிரவு 11.15 மணியளவில் பிரதமர் நாட்டை வந்தடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி பிரதமர் தலைமையிலான குழுவினர் சீனா நோக்கி பயணித்தனர். அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்த ஆகியோர் பிரதமரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வைத்தியர்கள் திறமையானவர்கள் – ராஜித
ஆட்களை காணாமல் போகச் செய்தவர்கள் யாரென்பது வெளிச்சத்துக்கு வரப்போகின்றது என்ற அச்சம் கொண்டவர்களே காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதை எதிர்க்கின்றனர் என்றும் அரசாங்கம் அறிவித்தது. வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்ட அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது. இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது…
இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை
இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலங்களில் பாதிக்கப்பட்டு தங்களது சொந்த காணிகளை பலர் இழந்துள்ளனர். இதுவரையில் அவர்களுக்கு உரித்தான காணிகளோ அல்லது வேறு ஒரு காணியோ வழங்கப்படவில்லை. இதனை கருத்திற்கொண்டு அவர்களுக்கான தீர்வினை பெற்றுத்தரக்கூடிய தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சந்திரிக்கா – புகுடா சந்திப்பு!
இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர், யசுஒ புகுடா(Yasuo Fukuda), நேற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து உரையாடினார் இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து தீர்க்கமாக ஆராயப்பட்டன. இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு விளக்கங்களை வழங்கினார். இந்தநிலையில் ஜப்பானின் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகளுக்காக தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சந்திரிக்காவுக்கு ஜப்பானின் முன்னாள் பிரதமர் அழைப்பு விடுத்தார். ஜப்பானின்…
ஜனாதிபதிக்கு அஸ்கிரி பீடாதிபதி பாராட்டு!
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி பாராட்டுக்குரியது என அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். பொல்கொல்ல ஸ்ரீ சலவான போதிமலு விஹாரையில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… நல்ல சிங்கள பௌத்தர் ஆகிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமாதான எண்ணங்களுடன் நாட்டின் அனைத்து இன சமூகங்கள் மற்றும் மதங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியதாகும்….
தனியார் நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம்
தனியார் நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதத்தில் மேலும்.. அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக்கொள்ள முடியாத உயர் தரத்தில் சித்தியடைந்தவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்கின்றனர். இவ்வாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும்…
கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது – அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – நாலாண்டுகளின் பின்னர் கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது. கல்குடா மக்களின் வாக்குகளினால் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் கடந்த நான்கு ஆண்டு காலமாக மெளனமாக இருந்து விட்டு, இப்போது இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி கதை அளக்கிறார், இவ்வாறான நயவஞ்சக போக்குடைய,அரசியல் சுயலாபத்திற்காக எதனையும் பேசுகின்றவர்களுக்கு எதிர்கால அரசியல் நிலவரம் மிகச்சரியான பாடத்தினை கற்பிக்கும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை நிவ் ஸ்டார்…
விமானப் பணிப்பெண் நித்தியா கைது!
– எம்.எப்.எம்.பஸீர் – பணச் சலவை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்க்ஷவின் கவர்ஸ் கோப்ரேஷன், என்.ஆர். கன்சல்டன் நிறுவன பணிப்பாளரும் விமானப் பணிப் பெண்ணுமான நித்திய சேனாதி சமரநாயக்க நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
உதவிகளை வழங்க உலக முஸ்லிம் லீக் இணக்கம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை இலங்கை முஸ்லிம்களுக்கு செய்யும் சேவைகளைப் பாராட்டிய உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லா பின் முஹ்சின் அல்துர்க்கி உலமா சபையின் சேவைகளுக்கு முடியுமான உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற உலக முஸ்லிம் லீக்கின் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் அல்துர்க்கி கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்தார். அவரை…
இராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டிசில்வாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இந்த பதவி நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ,குறித்த பதவி நீடிப்பு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியில் இருந்துஅமுலாகும் விதமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
படை வீரர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதியால் கையளிப்பு
யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படைவீரர்களுக்குமாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையர்கள் குறித்து ஆய்வின் முடிவுகள்
இலங்கையர்களில் 80 சதவீதமானோர் ‘நேரமில்லை” என்ற போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று -16- நற்குண முன்னேற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலின் போது குறித்த அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகர உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்…
