Headlines

நாமலுக்கு விளக்கமறியல்

இன்று (15) காலை நிதி மோசடி  விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளிக்க ஆஜரான நாமல் ராஜபக்ஷவை நிதி மோசடி  விசாரணைப்பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜபடுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நாமல்  நிதி மோசடி  விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ்த் தலைமைகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் அஸ்மின்: மௌலவி சுபியான் குற்றச்சாட்டு

-சுஐப் – தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசும் சர்வதேசமும் ஈடுபாடு காட்டிவரும் இந்தக் காலகட்டத்தில் “வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஓர் அரசியல் ரீதியான விடயமாக நோக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ள கூற்றை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் தலைவர் மௌலவி பி.ஏ.சுபியான் வெகுவாகக் கண்டித்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் மூலம் அக்கட்சியினால் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்…

Read More

கடைகளை மூடுவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது!

கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக்கொடுப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையாடுவதன் மூலமே என்றும்அவர் தெரிவித்துள்ளார். அதைவிடுத்து கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கைகைளையும்,சுற்றுநிருபங்களையும் வெளியிடுவதன் மூலம் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதுஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்,விலச்சி மற்றும் கொக்கிச்சி பிரதேச மக்களை சந்தித்த போதே அமைச்சர்ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்குள்ள விவாசாயிகளை…

Read More

மாலபே வைத்திய கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு

மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய கல்லூரியை விடுமாறும் இந்த சங்கத்தின்…

Read More

புத்தெழுச்சி பெற்றுள்ள நோர்வே இலங்கைக்கிடையிலான உறவு

நோர்வே பிரதமர் எர்னா சோல்பெக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தினூடாக இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு புத்தெழுச்சி பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோர்வே பிரதமர் இலங்கைக்கு வந்ததன் மூலம் இரண்டு நாடுகளும் தமது உறவை மேலும் வலுப்படுத்தவும் மீள்உருவாக்கம் செய்யவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. விசேடமாக இரண்டு நாடுகளினதும் அர்ப்பணிப்பு புத்தொழுச்சி பெற்றுள்ளது. நோர்வே பிரதமர் எர்னா சொல்பெக் ஐ.நா. செயலாளர் பான்கீமூனினால் நிரந்தரமான அபிவிருத்தி இலக்கு குழுவின் இணைத்தலைவராகவும்…

Read More

இணைந்து செயற்படத் தயார்!- சந்திரிக்கா

கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்லவும் யாருடன் வேண்டுமென்றாலும் இணைந்து செயற்பட தாம் தயார் என்றும்சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். அத்தனகல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

கைத்தொழில் பேட்டைக்கு சீனா முன்மாதிரி

இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்குள்ள கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

Read More

இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

ஒப்பந்த காலத்துக்கு மேல் சட்ட விரோதமாக பணிபுரிந்த 71 இலங்கை  பணிப்பெண்களை குவைத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Read More

பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வில் சையத் சகில் ஹிசைன்

தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுடனான அரசியல் பொருளாதார காலாசார நகர்வுகளே எமது பிராந்திய எதிர்கால நகர்வுகளை தீர்மானிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத் சகில் ஹிசைன் தெரிவித்தார். பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினமான இன்று (14) கொழும்பில் அமைந்துள்ள பாக்கிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

Read More

அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி – மஹிந்தவுடனும் பேச்சு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவுள்ளார். அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மாண­வ­ருக்­கான பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை

எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஐந்தாம் தரப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற் றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக வகுப்­புக்கள், கருத்­த­ரங்­குகள் நடத்­து­வ­தற்கு தடை­செய்­யப்­பட்­டுள்ளதாக பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 21 ஆம் திகதி புல­மைப்­ப­ரிசில் பரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது. இத­னை­யிட்டே இத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி பரீட்­சார்த்­தி­க­ளுக்கு பிரத்­தி­யேக வகுப்பு, கருத்­த­ரங்கு, விரி­வுரை, பயிற்­சிப்­பட்­டறை, மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிட்டு விநி­யோ­கித்தல் மற்றும் பதா­தைகள் ஒட்­டு­வது, துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வழங்­கு­வது, தொலைக்­காட்சி வானொலி விளம்­ப­ரங்கள் ஆகி­ய­வற்­றுக்கு…

Read More

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் மாயம்

கொழும்பில் இருந்து யாத்திரீகர்கள் சிலருடன் யாத்திரைக்காக சென்ற முதியவர் ஒருவர் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தை ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர என்ற முதியவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More