Main News
நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் – பைஸர் முஸ்தபா
– எம்.ஆர்.எம்.வஸீம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆதரிப்பவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தையும் ஆதரிக்க வேண்டும். மக்கள் அபிப்பிராயத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தனியாக ஆட்சி நடத்த முடியாமல் உள்ளது என மாகாண கபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். பண்டாரவளையில் நேற்று (22) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம்களை சந்தேகம்கொண்டு பார்க்க முடியாது : பாதுகாப்பு அமைச்சு
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை இராணுவத்தின் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படமாட்டாது.. தேசிய பாதுகாப்பில் வடக்கு கிழக்கும் உள்ளடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் இலங்கைக்கு இருந்த போதிலும் இலங்கை முஸ்லிம்கள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்…
இலங்கையர்களுக்கு வாய்ப்பு!
வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய முகாமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும். இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும். இந்த முகாம் இரவு 7.00…
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பதவி இழக்கக்கூடிய சாத்தியம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பத்து தொகுதி அமைப்பாளர்கள் பதவி இழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மீளமைப்பு திட்டங்களின் அடிப்படையில் பத்து தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… மத்துகம, ஹொரண, தம்புள்ள, நாவலப்பிட்டி உள்ளிட்ட பத்து தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் பதவிகளக்கு எதிர்வரும் நாட்களில் புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்….
ஆசிய கிரிக்கட் சபையின் தலைமையகம் கொழும்பில்
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறீ ஜயசேகரவால் ஆசிய கிரிக்கட் சபையின் தலைமையகம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 07 மெயிட்லாண்ட் கிரிசென்ட் வீதியில் கடந்த 20ந் திகதி ஆசிய கிரிக்கட் சபை தமது தலைமையகத்தை திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கிரிக்கட் சரித்திரத்தில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். குறித்த அலுவலகத் திறப்பு விழா வைபவத்தின் பிரதம அதிதியாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க சமூகமளித்திருந்தார்.
பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை
பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்குமாறுகோரி அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். தொற்றா நோய்களை கட்டுபடுத்துவதற்கு புகையிலை மற்றும் பாக்கு பாவனையை தடைசெய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். இதனால் பாக்கு சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு எதிர்காலத்தில் தடைவிதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மோசடிகளை தடுத்தால் நிதி சேகரிக்க முடியும்
சுகாதார துறைக்குள் இடம்பெறும் மோசடிகளை இந்த வருடத்திற்குள் தடுத்தால் 2000 மில்லியனுக்கு அதிகமான நிதியினை சேமிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்து கொள்வனவு போன்ற விடயங்களில் அதிகமான பங்கு பணங்கள் கைமாறப்படுவதாகவும், குறித்த பங்குப் பணங்கள் அரச அதிகாரிகளுக்கு கிடைப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் புற்றுநோயாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக இரண்டு இலட்சத்துக்கு அதிகம் பெறுமதியான மருந்துகள் கிடைத்துள்ளதாகவும், மேலதிகமான மருந்துகளுக்காக ரஸ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மருந்தினை கொள்வனவு செய்வதன் பொருட்டு நிதி சேகரிப்பதின்…
தேசிய உணவு பாதுகாப்பு வாரம்
தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று திங்கட்கிழமை(22) முதல் 29ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்குள், உணவுகளை பரிசோதனைக்கு உட்படுத்தல், உணவகங்களை சோதனைகளுக்கு உட்படுத்தல் மற்றும் பாடசாலைகளின் சிற்றுண்டிசாலைகளை சோதனைக்கு உட்படுத்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீனியின் மட்டத்தை குறிக்கும் அட்டவணை வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் தேடி ஆராய்ந்து பார்க்கப்படும். தேநீருக்காக சீனியை புறம்பாக வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது குறித்தும் சோதனை செய்யப்படும்.
ஜக்கிய நாடுகள் அமையத்தின் சர்வதேச மாநாடு
-அஷ்ரப் ஏ சமத் – ஜக்கிய நாடுகள் அமையத்தின் இளைஞா் அமைப்பின் தேசிய இளைஞா் அமைப்பின் 2 நாட்கள் கொண்ட சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று (20) பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இம் மாநாடு இளைஞா் அமைப்பின் செயலாளா் நாயகம் இன்சாப் பாக்கீா் மாக்காா் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இம்மாநாட்டிற்கு ஜக்கிய நாடுகள் உறுப்புரிமை நாடுகளின் இளைஞா் பிரநிதிகள் உட்பட 200 இளைஞா்கள் கலந்து கொள்கின்றனா். ஆரம்ப வைபத்தில் உயா்கல்வி இராஜாங்க அமைச்சா்…
2017 ஆம் ஆண்டிக்கான வரவு செலவுத்திட்டம்
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். குறித்த திட்டத்தின் மீதான விவாதம் டிசெம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.பி.க்களுக்கான ஒழுக்கக் கோவை!
தேசிய நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஒழுக்கக் கோவை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த ஒழுக்கக்கோவை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். ஒழுக்கக்கோவையை அமுல்படுத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த வாரம் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த ஒழுக்கக்கோவையில் சில திருத்தங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதனை…
இலங்கை வரும் பான் கீ மூன்
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியுடன், ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், பான் கீ மூன் சிறிலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை, அடுத்த மாதம் மேற்கொள்ளவிருக்கிறார். செப்ரெம்பர் 3ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார். இதன் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பலரையும், எதிர்க்கட்சித் தலைவர்…
