Headlines

பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை




பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்குமாறுகோரி அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொற்றா நோய்களை கட்டுபடுத்துவதற்கு புகையிலை மற்றும் பாக்கு பாவனையை தடைசெய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பாக்கு சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு எதிர்காலத்தில் தடைவிதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *