Headlines

மஸ்கெலியாவில் பிரதமர் ரணில்

மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள்ளும் நிகழ்வு 28.08.2016 அன்று அட்டன் நகரில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க இதில் கலந்துகொண்டார். இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.கவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.  அட்டன் விஜிதா திரையரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், இராஐhங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

நாமல் எம்.பி. கோரிக்கை

இலங்கை வரும் ஐக்­கிய நாடுகளின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆறு வரு­டங்­களில் வடக்கு கிழக்கு உட்­பட நாட­ள­ாவிய ரீதியில் மேற்­கொண்­டுள்ள அபி­வி­ருத்தி பணி­க­ளையும் கருத்தில் கொள்­ள ­வேண்டும் என்று அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ கோரிக்கை விடுத்­துள்ளார். ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்­வரும் 31ஆம் திகதி உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்­கைக்கு வருகை…

Read More

கூட்டமைப்புடனான பான் கீ மூனின் சந்திப்பு மிகவும் முக்கியமானது

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கை விஜயம் அரசாங்கத்திற்கு சாதகமானது. ஜெனிவா நெருக்கடிகளில் இருந்து நாம் பூரணமாக விடுபட அவரது விஜயம் சாதகமாக அமையும் என அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடனான ஐ.நா செயலாளர் நாயகத்தின் சந்திப்பு அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 31ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் அவரது…

Read More

ஒன்றிணைந்த எதிரணியின் 12 பேருக்கு சட்டப் பிரச்சினை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலகுவதில், சட்டப் பிரச்சினை உள்ளதால், தான் உள்ளிட்ட 12 பேர், அக்கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக முடியாதுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். இப்பிரச்சினை தொடர்பில், சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகக் கூறிய மஹிந்தானந்த எம்.பி, எதிர்காலத்தில், ஒருமித்த முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், கட்சியின் அமைப்பாளர் பதவிகளிலிருந்து தங்களது விருப்பத்தின் பேரில் விலகுபவர்களது கட்சி உறுப்புரிமையும் நீக்கப்படும் தீர்மானமொன்றும் நடைமுறைக்கு வரும்…

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியில் வைத்து கடந்த வாரம் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் மொஹம் சகீம் சுலைமானின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று வரையில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தை, கோட்டே, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளின் சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளும் சோதனையிடப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த…

Read More

எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தி

தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவில் மீளாய்வு செய்யப்பட்ட தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம் பற்றிய விபரங்ளை வர்த்தமானியில் அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சில தொகுதிகள் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக, உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அசோக பீரிஸ் தலைமையில் குழுவொன்றை நிறுவியிருந்தார். எல்லை நிர்ணயம் தொடர்பில்…

Read More

மஹிந்தவின் பின்னால் சென்று பயனில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்காணப்படும் போது மஹிந்தவின் பின்னால் செல்வதில் பயன் இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கட்சியின் கொள்கைக்கு அமைய மஹிந்த கட்சியின் தலைமைத்துவத்தை மைத்திரியிடம் ஒப்படைத்துள்ளார். எனவே நாம் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபாலவிற்கு கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்பட்ட பின்னரும் அவருக்குஎதிராக சூழ்ச்சிகளை செய்வது, அவரது கால்களைப் பற்றி இழுப்பது என்பவற்றை செய்ய கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்….

Read More

80 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் நன்கொடை

உலக சுகாதார நிறுவனத்தால் நான்கு நடமாடும் வைத்தியசாலைகள் உட்பட 80 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் சுகாதார அமைச்சிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி அவசர அனர்த்த நிலைமைகளை சமாளிக்க தேவையான வகையில் நடமாடும் வைத்தியாலை மற்றும் வைத்திய உபகரணங்களுமே இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது – ஜனாதிபதி

முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் தரப்பு பிரதானி ஒருவர் புர்காவை தடை செய்ய வேண்டுமென யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். எனினும் இந்த யோசனைக்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட தீவிரவாத செயற்பாடுகளினால் நிலவும் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உண்டா என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பாவின்…

Read More

கலவரங்களின் பின்னணியில் செயற்பட்ட அரசு

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களின்போது அப்போது இருந்த அரசாங்கங்கள் அதனை தடுக்காமல் அதற்கு பின்னணியாக இருந்து செயற்பட்டுள்ளன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பினூடாக அனைவருக்கும் சமஉரிமை வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு அளுத்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக புத்திஜீவிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

இலங்கை அணி மீது தாக்குதல் : 4 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் இன்று அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ரஹ்மான், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் சுபைர் அலைஸ் நைக் முகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர். லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்ற போட்டியின் போது இந்த தாக்குதல்…

Read More

புதிய அரசியலமைப்புக்கான பிரேரணை

பல்லின, பல சமய, பல கலாசாரத்தை அடையாளமாக கொண்டுள்ள இலங்கை மக்களின் தேவைகளை உணர்ந்து அரசியலமைப்பு உருவாக்கப்படாமையே கடந்த இரு குடியரசு அரசியலமைப்புகளும் தோல்வியடைந்தமைக்கு காரணமாக அமைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அதே தவறை மீண்டும் செய்யாது நாம் அனைவரும் ஒருமித்து வாழ்வதற்கான அடிப்படைகளை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மேலும் புதிய அரசியலமைப்புக்கான பிரேரணையை 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கு நடைபெறுவதற்கு முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அதற்கான…

Read More