Main News
மஹிந்தவிற்கு வயதாகிவிட்டது – அமைச்சர் ராஜித
70 வயதான மஹிந்த ராஜபக்ச, இன்னும் பல வயதானவர்களை வைத்து க்கொண்டு புதிய கட்சி ஒன்றை அமைக்க முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளையில் (29) நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இந்தக் கருத்தை வெளியிட்டார். மஹிந்த தரப்பினர், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையப்படுத்தி புதிய கட்சியை அமைக்க திட்டமிடுகின்றனர். எனினும் அது சாத்தியமாகாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மஹிந்தவுக்கும் வயதாகிவிட்ட நிலையில் அவருடன் இணைந்திருப்பவர்களும் அரசியலில் வங்குரோத்து நிலையை…
ஐஸ்கிறீமுக்கு இரண்டு காலவதி திகதிகள்
– எம்.றொசாந்த் இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். வர்த்தகர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் இணையத்தளம் முடக்கம்: மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப உத்தரவு!
ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவரை நன்னடத்தைக்கு அனுப்ப கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் கடுகண்ணாவ பகுதியில் வைத்து நேற்று (29) கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் மொரட்டுவையில் கைதுசெய்யப்பட்ட 27 வயதானவரை செப்டம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த இணைத்தளம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மும்மன்ன முஸ்லிம் வித்தியாலய விவகாரம்: அதிபருக்கு இடமாற்றம்
மும்மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்துக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் பெரும்பான்மை சமூகத்தினால் உரிமை கொண்டாடப்படும் நிலையில் அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்டு வந்த வித்தியாலயத்தின் அதிபர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மும்மன்ன முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் மொஹமட் சனூன் சுஹைப் என்பவரே இவ்வாறு கிரி/ அதார ஆரம்ப பாடசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2016.08.24 ஆம் திகதியிட்ட இடமாற்றக் கடிதம் நேற்று திங்கட்கிழமையே அதிபரைச் சென்றடைந்துள்ளது. அதிபர் இடமாற்றம்…
ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய இரண்டாவது சந்தேக நபர் கைது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்தை ஊடுறுவியதாக கூறப்படும் இரண்டாவது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதான மொரட்டுவை பகுதியினைச் சேர்ந்தவரென குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்தனர். குறித்த கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று (30) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
மக்கள் காங்கிரஸின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு இறுதிக்கட்டத்தில்
-சுஐப் எம்.காசிம் – அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிராஸ் நேற்று மாலை (29/08/2016) கொழும்பில் கூடி, தீர்க்கமாக ஆராய்ந்து இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்ற இறுதிக்கட்டக் கலந்துரையாடலில் சட்டத்துறை, அரசியல்துறை சார்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டு, அது தொடர்பில், மிக முக்கியமான தலைப்புக்களில் ஆராய்ந்து காத்திரமான முடிவுகளை மேற்கொண்டனர். கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து பெற்ற தகவல்கள்,…
இந்தோனேசியாவில் உலகிலேயே வயதான மனிதர்: 145 வயது என ஆவணங்களில் தகவல்
இந்தோனேசியாவில்தான் உலகிலேயே வயதான நபர் வாழ்ந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் மபஹ் கோதோ. வயது 145. இவர் அங்குள்ள மத்திய ஜாவாவில் சிராகன் என்ற இடத்தில் வசிக்கிறார். ஆவணங்களின்படி அவரது பிறந்த தேதி 1870-ம் ஆண்டு, டிசம்பர் 31 ஆகும். இது உண்மையானால், உலகிலேயே வயதான நபர் என்ற பெயரை மபஹ் தட்டிச்செல்கிறார். உலகளவில் பிரான்சை சேர்ந்த ஜென்னி கால்மென்ட்தான் வயதான நபர் என கூறப்பட்டு வந்தது. இவருக்கு வயது 122. மபஹ்,…
மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!
கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சிறப்பாகச் சித்தியெய்திய 12 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்குவதென சிங்கர் நிறுவனம் தெரிவித்தி ருந்தது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கணனிகளை வழங்கிவைத்தார். இலங்கை மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதே தமது நோக்கம் என்று கூறிய சிங்கர் நிறுவன அதிகாரிகள், போட்டிகள் நிறைந்த இன்றைய நிலையில் இந்தக் கணனிகள் மாணவா்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று…
தனித்து போட்டி – சவால் விடுத்த நாணயக்கார
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் விரைவான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இதுவரையில் தெளிவு படுத்தப்படவில்லை என்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்ப்பில் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இவ்வளவு அவசரமாக சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணம் என்னவென அவர் கேள்வியெழுப்பினார். இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த சட்ட மூலமானது முன்கூட்டியே விவாதித்துள்ளதுடன் சட்ட மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அவசியத்தை அரசாங்கம் வெளிப்படுத்த…
சுதந்திரம் பறிபோய்விட்டது – மஹிந்த
நாட்டுக்குள் நிலைகொண்டிருந்த சுதந்திரம், படிப்படியாக வரையறுக்கப்பட்டு வருகின்றது என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். திம்புலாகல தேரர் தொடர்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ‘நாடாளுமன்றத்துக்குள்ளும், சுதந்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில், பெயர் மற்றும் ஊர்கள் குறிப்பிடப்பட்டு, நேரடியாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டும் வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் அழைக்கப்பட்டு, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன’ என்றும் குறிப்பிட்டார். அத்துடன், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களையே, நல்லாட்சி அரசாங்கம் திறந்து வைத்து வருகின்றது…
சர்ச்சைக்குரிய மும்மன்ன பிரதேசத்திற்கு அமைச்சர் றிஷாத் விஜயம்!
-சுஐப் எம் காசிம் – மும்மன்ன பிரதேசத்திற்கு நேற்று முன்தினம் (27) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை குறித்தும் சிங்கள -முஸ்லிம் மக்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பரஸ்பர நம்பிக்கையீனங்கள் தொடர்பிலும் உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார். மும்மன்ன ஜும்மா பள்ளிவாசலில் ஊர்பபொதுமக்களை சந்தித்து அவர்களின் மனக்குறைகளை அவர் அறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் பங்கேற்ற பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், பாடசாலை அதிபர், சமூக நல இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் மைதான பிரச்சினையின் பின்னர் இந்த ஊரில்…
கொழும்பில் முஸ்லிம்கள் பேரணி
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்கியிருக்கும் போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலான அமைதிப் பேரணியொன்று ஐ.நா.காரியாலயத்தின் முன்பாக நடாத்தப்படவுள்ளது. வடக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவது போன்று கிழக்கிற்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கேட்டறிய வேண்டும் என அமைதிப்பேரணியில் வலியறுத்தப்படவுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தை கிழக்கிற்கும் அழைத்துச்…
