Headlines

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்

யாழ் பல்கலைக்கழக தொழுகையறை தாக்குதலுக்கு மக்கள் காங்கிரஸ் கண்டனம்.. . யாழ்ப்பாண பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் தொழுகை அறை தாக்கப்பட்டமை வருத்தத்துக்குரியது எனவும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் யாழ் பல்கலைக்கழக நிருவாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் கல்விப்பிரிவுப் பணிப்பாளர் டாக்டர். ஷாபி ஸிஹாப்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் மீண்டும் துளிர்விட்டு வரும் இனநல்லுறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில், இனந்தெரியாதோர்…

Read More

மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

மலேசியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, மலேசிய தமிழர்களால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதுமாத்திரமின்றி மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்…

Read More

முன்னாள் இராணுவ பேச்சாளரின் கோரிக்கை நிராகரிப்பு

முன்னாள் இராணுவ பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவின் வெளிநாடு செல்வதற்கான கோரிக்கையை கோட்டை நீதிமன்றம் இன்று (06) நிராகரித்துள்ளது.

Read More

இப்றாஹீம் அன்சாரின் தொலைபேசியை திருடிச்சென்ற கொள்ளையர் கூட்டம்

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாஹீம் அன்சாரைத் தாக்கிய கொள்ளையர் கூட்டம் அவரது கையடக்கத் தெலைபேசியையும் திருடிச் சென்றுள்ளது. என்பதை நவமணி பத்திரிகையின் ஆசிரியர் என்.எம்.அமீன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More

மர்­மங்­கள் வெளிவர கனடாவுக்கு போன, தாஜுத்தீனின் படு­கொலை காட்­சிகளில் ஏமாற்றம்

-விடிவெள்ளி MFM.Fazeer- பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்பில் மர்­மங்­களைத் துலக்­கலாம் என எதிர்­பார்க்­கப்­பட்டு கன­டா­வுக்கு மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக அனுப்­பப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்­சிகள் ஊடாக தெளி­வான எந்த முடி­வுக்கும் வர­மு­டி­யாது என பிரிடிஷ் கொலம்­பியா ஆய்வு நிறு­வனம் கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறி­வித்­துள்­ளது. குறித்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் பயணிக்கும் வாகனங்களின் இலக்கங்களையோ அல்லது அதனுள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அல்லது நபர்கள் யார் என்பதையோ தெளிவாகக் கண்டறிய…

Read More

உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல்! மலேசிய அரசாங்கம் வருத்தம்!

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது கடந்த 4ஆம் திகதியன்று உயர்ஸ்தானிகர் அன்சார் தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார். இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கவலை கொள்வதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர்தெரிவித்துள்ளார். அத்துடன் குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை இலங்கை உயர்ஸ்தானிகரத்துடன் இணைந்து உறுதிப்படுத்தவுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்….

Read More

எக்னெலிகொடவின் வழக்கு விசாரணை இன்று

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (6) மீண்டும் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 8 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போயிருந்தார். பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி வழங்கிய முறைபாட்டிற்கு அமையவே குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Read More

உயர்ஸ்தானிகரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (5) கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த…

Read More

யால தேசிய பூங்காவால் 6000 இலட்சங்கள் வருமானம்!

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை ருஹுனு யால தேசிய பூங்காவின் வருமானம் மாத்திரம் 6000 இலட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிகமான உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால பூங்காவை பார்வையிட வருவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தின் ஒரு நாளில் மாத்திரம் இதன் வருமானம் 45 இலட்சமாக காணப்பட்டதாகவும்,ஏனைய நாட்கள் வழமைப் போலவே 25 இலட்ச வருமானங்களை பெற்றதாகவும் அவர் மேலும்…

Read More

ஐ.தே.க.வுக்கு 70 ஆண்டுகள் பூர்த்தி!

ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. இந்த நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் ஐக்கிய தேசியக் கட்சியானது மிதவாத கொள்கைகளைப் பின் பற்றி பல தடவைகள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பங்காளிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு…

Read More

அன்சார் மீது தாக்குதல் நடத்தியோருக்கு உரிய தண்டனை வழங்குங்கள்

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று மாலை(06/09/2016) மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத் அவர்களை, அமைச்சர் றிசாத் சந்தித்து தனது கடுமையான கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்துவார். மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அங்கு…

Read More

சுகாதார அமைச்சர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு விஜயம்

எல்பிட்டடிய அரச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை  வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது . சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சமீபத்தில் இந்த வைத்தியசாலைக்கு விஜயம் செயது இது தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்தத கோரிக்கை;கு அமைவாக வைத்தியசாலைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

Read More