Headlines

பாடசாலை என்பது நல்ல மனிதர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – பாடசாலை என்பது நல்ல மனிதர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும். நல்ல ஒழுக்கமுள்ள,பண்புள்ள சிறந்த பரம்மரையினரை உருவாக்குவதில் பாடசாலையின் பங்களிப்பு அளப்பெரியது, எனவே கல்வியில் நீங்கள் காட்டும், ஆர்வத்தைப்போலவே ஒழுக்க விழுமியங்களை பேணுகின்ற விடயத்திலும் ஆர்வத்துடன் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கோறளைப்பற்று மேற்கு…

Read More

இலங்கை வருகிறார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. tm

Read More

‘ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாது’

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படுவதன் பின்னர், தற்போது செயற்பாட்டிலுள்ள இலங்கை பத்திரிகைச் சபை மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகிய இரண்டும் செயலிழக்கச் செய்யப்படும் என, நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான, நேற்றுப் புதன்கிழமை (07) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அந்தச் செய்தியாளர் மாநாட்டின் போது, தொடர்ந்து உரையாற்றிய…

Read More

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு யோசனை சமர்ப்பிப்பு!

வரவு செலவுத் திட்டத்துடனேயே வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை சமர்ப்பிக்கப்படவுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்துடன் சமர்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 11 வீதமாகக் காணப்படும் வற் வரியை 15 வீதமாக உயர்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.எனினும், உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது. அமைச்சரவையின் அனுமதியின்றி சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து புதிய வற்…

Read More

தந்தையின் தீர்ப்பு இன்று ; ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றிற்கு சற்றுமுன்னர்  வருகைத்துந்துள்ளார். ஹிருணிகாவின் தந்தை பாரதலக்ஷ்மன் பிரேமச்சறந்திரவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதால் இவர் நீதிமன்றுக்கு சமுகமளித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

துபாய் விமான தீவிபத்துக்கு விமானத்தின் சக்கரங்கள் தரை இறங்கும்போது செயல்படாததே காரணம்

துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் நிறுவன விமானம் தரைஇறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. பயணிகள் அவசரகால வழிகளில் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர். மீட்புப்பணியில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலியானார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி துபாய் விமான போக்குவரத்து ஆணையத்தின்…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை  கொழும்பு கம்பெல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது . அனைத்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஐhதிக சேவக ஊழியர்கள் சங்கம் மகா நாடு தொடர்பாக தெரிவிக்கையில் 30ற்கும் மேற்பட்ட தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மகா நாட்டில கலந்து கொள்ள உள்ள விருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

Read More

மலேரியா அற்ற நாடாக இலங்கை பிரகடனம்

இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது கொழும்பில் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் வருடாந்த மாநாட்டில் இதற்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பணிப்பாளர் நாயகம் மார்க்ரெட் சென் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று கையளித்தார்.

Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சமிந்த பெரேரா ஆகிய இருவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீதிக்கப்பட்டுள்ளது. பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடரபுடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவ்விருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,…

Read More

2017ஆம் ஆண்டு தேர்தல் – பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த மாதம் 15ஆம் திகதியுடன் எல்லைநிர்ணயங்கள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017இல் நடைபெறும் என்று இறுதியான முடிவை அறிவித்தார்.

Read More

‘தேர்தல் பிற்போட்டமைக்கு மக்களே பொறுப்பு’

-பாநூ கார்த்திகேசு – ‘தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்’ என, தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ‘தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில்…

Read More