Main News
மஹிந்தவை மீண்டும் வீழ்த்திய மைத்திரி!
இலங்கையில் அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் கடும் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகளுக்கு இடையில் பேஸ்புக்கில் தமது ஆதிக்கத்தை செலுத்துவதில் பாரிய போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்கள் வரை பிரதான சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆதிக்கம் செலுத்திய மஹிந்தவை பின்தள்ளி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இலங்கையில் அதிகமான மக்கள் விரும்பம் வெளியிட்டுள்ள…
தேசிய இனப்பிரச்சினைக்கு 70 ஆண்டுகாலமாக தீர்வில்லை – ஐ.தே.க.மேடையில் ஜனாதிபதி
தேசிய இனப்பிரச்சினைக்கு 70 அண்டுகாலமாக தீர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று (10) இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த 70 ஆண்டுகாலமாக கடந்த அரசாங்கங்கள் தோல்வியுற்றுள்ளன. கடந்த காலத்தில் இருந்த…
பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ; சாரதிகளுக்கு ஓர் அறிவுறுத்தல்
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று பேஸ்லைன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தெமட்டக்கொட மேம்பாலத்திலிருந்து பொரளை சந்திவரை பாதை மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை ஆண்டு நிறைவு விழா இடம்பெறும் கெம்பல் பார்க் மைதானத்திற்கு செல்லும் புஞ்சி பொரளை மற்றும் ஓவல் மைதானத்திற்கு அருகிலுள்ள வீதிகளும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதிகள் ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா நிறைவுபெறும் வரை குறித்த…
ஐ.தே.க. மேடையில் ஜனாதிபதி மைத்திரி, சந்திரிகா
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டுள்ளார். இவர் சற்றுமுன்னர் கெம்பல் பாரக் மைதானத்திற்கு வருகைத்தந்துள்ளதுடன், அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார். இந்நிலையில் குறித்த ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய அரசாங்கம் தொடர்பில் விசாரிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!
தேசிய அரசாங்கம் தொடர்பிலான மனுவை விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று பரிசீலனை செய்யப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் வாதிடுகையில், தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்…
பலி கொடுக்கப்படவே புத்தளம் சிறுவன் பாதிர் கடத்தப்பட்டான்
இன்று புத்தளம் வான் வீதிப்பகுதியில் கடத்தப்பட்ட முஸ்லிம் சிறுவன் பாதிர் , பலி கொடுக்கப்படவே கடத்தப்பட்டுள்ளது. புதையலுக்காக ஓர் உயிரைப் பலியிடும் நோக்கிலே இக்குழந்தை கடத்தப்பட்டுள்ளது, இக்கடத்தல் விவகாரத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட ஐவர் கொண்ட குழுவொன்று இதுவரை பொலிஸாரினால் பிடிபட்டுள்ளனர், இவ்வனைத்தையும் இக்குழந்தை தனது வாக்குமூலத்தின் மூலம் தெளவுபடுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். உறுதி செய்யப்பட்ட தகவல் By: அ(z)ஸ்ஹான் ஹனீபா புத்தளம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை
மனிதக்கொலை தொடர்பில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (09) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவினை நுவரெலியா மெல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க பிறப்பித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு தலவாக்கலை டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை வெட்டிக்கொலை செய்தமை தொடர்பில் குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 முறைப்பாடுகள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவை கைது செய்யுமாறு…
நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பினால் பதற்றம்
இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு, இன்று வெள்ளிக்கிழமை (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி, அங்கிருந்து உலங்கு வானூர்தியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தைச் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் நடைபெறும், போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கின்றார்.
வழமைபோன்று செயற்படும் கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் எந்தவித இடையூறுகளும் இன்றி இடம்பெறுவதாக விமான நிலைய செயற்பாட்டு அதிகாரி கூறினார். வழமை போன்று நாளாந்த விமான போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார். இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் மேலதிக வேலைகளில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்கள். விமானிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான விசாரணை சாதாரண முறையில் இடம்பெறக் கூடியதல்ல என்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் அமைப்பு கூறியுள்ளது. அவர்களின்…
இஸ்ரேல் பிரதமருக்கு, கைகுலுக்க மறுத்த நெதர்லாந்து MP (வீடியோ)
பாலஸ்தீன் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நெதர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நெதன்யாஹுவுக்கு கை குலுக்கி வரவேற்றனர். அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கை குலுக்க மறுத்துவிட்டார். மேலும் அவரது சட்டையில் பாலஸ்தீன் கொடியையும் பொறுத்திருந்தார். பெஞ்சமின் நெதன்யாஹு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து மக்கள் பாலஸ்தீன கொடியை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
