Main News
கடற்தொழிலாளர்களுக்கு மீன் மற்றும் நண்டு வலைகள் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கிவைப்பு!!!
இன்றைய தினம் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கான மீன் மற்றும் நண்டு வலைகளை பிரமான அடிப்படையிலான நன்கொடையாக தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்து மீனவர்களிடம் கையளித்தார் சவேரியார்புரம், மாளிகைப்பிட்டி , பேசலை , தலைமன்னார் பியர் ,தாழ்வுபாடு , வங்காலை போன்ற கிராமங்களில் உள்ள பல மீனவர்களுக்கு இந்த நன்கொடை…
பாவனையாளர் அதிகாரசபையினால் 75 வர்த்தக நிலையங்கள் சுற்றி வளைப்பு
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்பின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நேற்று (6) 75 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்பை நடாத்தினர். இந்த சுற்றிவளைப்பின் போது 21 வர்த்தக நிலையங்களில் அரிசியை அதிக விலைக்கு விற்ற வியாபாரிகள் அகப்பட்டனர். மார்ச் மாதத்தில் இற்றைவரையில் 238 வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 156 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். அரிசியை எழுந்தமானமாக அதிகரித்து விற்றதை அடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை…
கிழக்கில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வெற்றியே வடக்கிலும், தெற்கிலும் அவர்களை தலை நிமிர்ந்து வாழவைக்கும் – மட்டுவில் அமைச்சர் ரிஷாட்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் எமக்குக் கிடைக்கும் வெற்றிதான் வடக்கில் மண்ணுக்காக போராடும் முஸ்லிம் மக்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைவதுடன் தென்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை விடயங்களும் வெற்றிபெறும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு அண்மையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததார்….
கனரக வாகன பயிற்சி நெறி முடிந்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி!!!
கனரக வாகன பயிற்சி நெறி முடிந்த இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 06.03.2017 ஆம் திகதி அலுத்வலையில் இடம்பெற்றது இலங்கை தொழிற்பயிற்சி அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கனகர வாகன பயிற்சி பாடசாலை அலுத்வலையில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் விதானங்க தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிங்கள தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்று…
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர்!!!
மக்கள் விடுதலை முன்னனி கட்சியின் காரியாலயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீன், தவிசாளர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் நவவி, செயலாளர் நாயகம் சுபைதீன், சட்டத்தரணி சஹீட், முன்னாள் பிரதி அமைச்சர் ஹூஸைன் பைலா, மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் , கலாநிதி மரைக்கார் ஆகியோர் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
பொலன்னறுவை நெற்களஞ்சியங்களிலுள்ள நெல்லில் 30 ஆயிரம் மெடரிக் தொன் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
பொலன்னறுவை நெற்களஞ்சியங்களிலுள்ள நெல்லில் 30 ஆயிரம் மெடரிக் தொன் நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சந்தையில் அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக நெற் சந்தைப்படுத்தும் சபையின் வசமுள்ள அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நெற் களஞ்சியங்கள் உள்ளன. இவற்றிலுள்ள நெல் அரிசியாக மாற்றுவதற்காக 197ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 31 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் நெல் ஆலை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக…
நிர்வாக மாவட்டமாக ஒலுவிலைப் பிரகடனப்படுத்துக… பிரதியமைச்சர் அமீர் அலி கோரிக்கை…..
இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுடன் 26 ஆவது நிர்வாக மாவட்டமாக ஒலுவில் மாவட்டத்தை பிரகடனப்படுத்துமாறு அரசிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அம்பாறையின் சமூக பொருளாதார அரசியல் தொடர்பான கலந்துறையாடல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றபோதே அவர் இதனைக்கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல்வேறு பரிந்துரை களை அரசிடம் முன்வைத்துள்ளது. அவற்றில்…
அருங்கலைப் பேரவை கல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களுக்கு கைவினைப் பயிற்சி!!!
அமைச்சரின் ஊடகப் பிரிவு கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைப் பேரவை கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ ஆகியவற்றுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு கைவினைப் பொருட்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை இன்று காலை (2017.03.06) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பேரவையின் தலைவி ஹேஸானி போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் ஆகியோர் பங்கேற்றனர். கடந்த வருடம் அருங்கலைகள் பேரவை நடைமுறைப்படுத்திய முதல் கட்ட வேலைத்திட்டத்தில்…
அம்பாறை முஸ்லிம்களின் பிழையான முடிவுகளே ஆணவத் தலைமைக்கு வழிவகுத்தது.
சுஐப் எம்.காசிம் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மேற்கொண்ட தவறான அரசியல் முடிவுகளினால்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் ஆணவத்துக்கும் அப்பாவி முஸ்லிம்கள் சமூக பொருளாதார மற்றும் ரீதியில் நலிவடைவதற்கு பிரதான காரணமென்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான விடயங்கள் தொடர்பில் மட்டக்களப்பு ஈஸ்ட் லெகூன் ஹோட்டலில் இடம்பெற்ற விசேட செயலமர்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்துகொண்டார். முன்னாள் உப வேந்தரும் கட்சியின் முக்கியஸ்தருமான கலாநிதி…
வாக்குகளை மையமாக கொண்டு மக்கள் காங்கிரஸ் அரசியல் நடத்தவில்லை… அம்பாறை முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் றிஷாட்.
சுஐப்.எம்.காசிம். வாக்குகளை எதிர்பார்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் மக்களின் நலனை மையமாக வைத்தே தமது கட்சி பணிபுரிந்து வருவதாகவும் அக்கட்சியின் தலைவர்- அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெளிவு படக்கூறினார். அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளின் கட்சியின் முக்கியஸ்தர்கள் , ஆதரவாளர்களுடனான சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார் கட்சியின் தவிசாளர் ,பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட…
ஒரு இலட்சம் மெட்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அமைச்சர் றிஷாட் அறிவிப்பு
-அமைச்சரின் ஊடகப்பிரிவு அரிசித்தட்டுப்பாடு எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை வழங்குயுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் அரிசியானது களஞ்சியப்படுத்தப்பட்டு தேவையேற்படும்பட்சத்திலே சந்தைக்கு விடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் புத்தாண்டில் எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவி;த்த அமைச்சர், பாவனையாளர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் பொருட்களின் விலைகளை எழுந்தமானமாக கூட்டி விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்….
“சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இறக்குமதியை குறைப்போம்” பெல்வத்த கரும்பு அறுவடை விழாவில் அமைச்சர் றிஷாத்
-சுஐப் காசிம்- நாட்டின் கரும்புச்செய்கையில் தன்னிறைவுபெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள கரும்பினை அறுவடை செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) காலை 7 மணியளவில்இடம்பெற்றது. அமைச்சர் றிஷாத் கரும்பு அறுவடையினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார். லங்கா சீனிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நவீன் அதிகார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, ஊவா மாகாண சபை உறுப்பினர் தர்மசேன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பௌசர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதே எமது…
