Main News
பிரதியமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார உதவிகள்.
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களான ஊத்துச்சேனை மற்றும் வடமுனை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வழிகாட்டலில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை இரு கிராமங்களிலும் இடம்பெற்றது. இதனடிப்படையில் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்…
அரசியல் என்றால் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பது இது இந்த காலகட்டத்தில் ஒரு கடினமான பணி
முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் அரசியல் என்றால் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பது. ஆனால் இது இந்த காலகட்டத்தில் ஒரு கடினமான பணியாகும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக்களை புனரமைப்பு செய்யும் பொருட்டு அட்டாளைச்சேனை பல நோக்கு…
றிஷாத்தின் பாராளுமன்ற உரை சமூக உணர்வும் சதி திட்டமும் !
முஸ்லீம் சமூக விடயங்களில் தமிழ் கூட்டமைப்பு நியாயமாக நடக்கவில்லை. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாண சபை அணுவளவு உதவிகளையும் புரியவில்லை.வடக்கும் கிழக்கும் இணையவே கூடாது. வடக்கு முஸ்லீம் அகதிகள் விடயத்தில் அரசு, குருடர்களாகவும் செவிடர்களாகவும் உள்ளது.ஜனாதிபதி முறை ஒழிக்கப்படக்கூடாது.52 அமைச்சு செயலாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.25 மாவட்டங்களுக்கும் அரச அதிபர்கள் உள்ளபோதும் அதில் ஒருவர் கூட முஸ்லிம் அரச அதிபர் இல்லை. 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் மகபூல் என்ற ஒருவர் முஸ்லிம்…
கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா பிரதம அதிதியாக நவவி எம்.பி
தில்லையடி ரத்மல்யாய பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்க்கான அடிக்கல்நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 15 இலட்சம் ரூபாய் செலவில் இம்மைதானம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“புதிய தேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம்” பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் ஆணித்தரமாகத் தெரிவிப்பு…
சிறுபான்மை சமூகங்களான மலையக முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த மக்களுக்கு விமோசனம் தரும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதனையும் எதிர்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் மாலை (08/ 11/ 2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கும், கிழக்கும் தனித்தனி மாவட்டங்களாக இருக்க வேண்டுமெனவும், எந்தவொரு கட்டத்திலும் இவ்விரண்டு மாகாணங்களும் இணைக்கப்படக் கூடாதெனவும், அகில இலங்கை மக்கள்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிர் பிரிவினால் விதவைப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
மினுவாங்கொடை – கல்லொழுவை பிரதேசத்தில் வாழும் வருமானமற்ற ஏழை விதவைப் பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு, (06) திங்கட்கிழமை மாலை, அ.இ.ம.கா. தேசிய மகளிர் அணித் தலைவி டொக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பையின் தலைமையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அ.இ.ம.கா. கம்பஹா மாவட்ட மத்திய குழுத் தலைவரும், மினுவாங்கொடை தொகுதி அமைப்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியின் செயலாளருமான டொக்டர் எம்.எச்.எம். முனாஸிக் உள்ளிட்ட பிரமுகர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து…
தன் கடமைக்கப்பால் சமூக சிந்தனையுடன் சேவை செய்தவர் மறைந்த அக்கறைப்பற்று அஹமட் லெப்பை-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி
சிறந்த கல்விமானும் எனது நண்பருமாகிய அஹமட் லெப்பையின் திடீர் மரணச் செய்தி கேள்வியுற்று மிகவும் கவலையடைந்துள்ளேன் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். அக்கறைப்பற்றைச் சேர்ந்த கல்விமான் அஹமட் லெப்பையின் மரணச் செய்தி தொடர்பாக வெளியிட்டுள்ள மரணச் செய்தியிலே மேல் குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது… மரணம் அடைந்த எனது நண்பர் அஹமட் லெப்பை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த காலத்தில் கல்விப் பொதுத் தராதர…
17 இலட்சம் தேங்காய்களை கொள்வனவு செய்து சதொச ஊடாக 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை
வரும் வாரத்தில் நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் 12 இலட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார். இன்று (08) வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொசத் தலைமையக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். வரட்சி காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாட்டினால் தேங்காயின் விலை திடீரென அதிகரித்தது. இதனை கருத்திற் கொண்டு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய…
புத்தளம் மாவட்டத்தில் வீதி அபிவிருத்திட்டங்களை ஆரம்பித்து வைத்த நவவி எம்.பி
புத்தளம், அக்கரைப்பற்று – பெருக்குவட்டான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹிய அவர்களின் முயற்சியினால் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது.
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சிசார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார். வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று(7) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் அவைக்கு அழைக்கப்பட்டதுடன் அவர் தனது பதவிக்…
வாக்களித்த மக்களுக்கும், அமைச்சர் ரிஷாட்டிற்கும் நன்றி! வட மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப் தெரிவிப்பு.
நன்றி நவிலல் அன்புடையீர், கடந்த 01/10/2017 திகதி தொடக்கம் கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக வணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காங்கிரசின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசின் பேரில் வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். வட மாகாண சபையின் உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நீங்கள் தந்த அன்பிற்கும் அக்கறைக்கும் அயராத உழைப்பிற்கும் என்…
மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவு அக்கரைப்பற்றிலும் கால் பதிக்கின்றது!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவுக் கிளைகள் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி மற்றும் அக்கரைப்பற்றின் தமிழ்ப் பிரதேசமான ஆலையடிவேம்பு ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண வைபவங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் பங்கேற்றிருந்தனர். அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியில் இடம்பெற்ற மகளிர் பிரிவுக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட பெண்கள், அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸின்…
