Headlines

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்





அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சிசார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்.

வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று(7) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் அவைக்கு அழைக்கப்பட்டதுடன் அவர் தனது பதவிக் கடிதத்தை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்து சபை அமர்வுகளில் கலந்துகொண்டு கன்னியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *