Headlines

தேசிய மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு இரண்டாம் மொழிகற்பிக்கும் நடவடிக்கை

எம்.எஸ்.எம்.ஸப்றாஸ் தேசிய மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு இரண்டாம் மொழிகற்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள நூறு இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள மொழியை ஆறுமாதகாலத்தில் கற்பிக்கும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் அல் – அறபா இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இத்திட்ட அங்குராப்பண நிகழ்வில் நகர சபைத்தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டார். இளைஞர் கழகத்தின் செயலாளர் முகம்மது சஜிர் தலைமையில் நடைபெற்ற…

Read More

பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கையேடு இன்று வெளியீடு

புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். இதுகுறித்த விளம்பர அறிவித்தல் நாளை மற்றும் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியிடப்படும் என அவர் கூறினார். கடந்த உயர் தர பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும். தொழிநுட்ப பிரிவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு…

Read More

சகோ. ஹிதாயதுல்லாவின் அவசர சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்!

 -அனஸ் அப்பாஸ்- யாருக்காகவும் காத்திருக்காமல் நேரமும் உலகும் மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது , நேரத்துடனும் உலக மாற்றங்களுடனும் நாம் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறப் பார்க்கின்றோம்.                            ஆனால் ஒரு பெரும் நோய் எம்மில் வந்து விடும் போது மனச்சோர்வும் குடும்ப சுமையும் சேர்ந்து கொள்ள, ஓட்டத்தின் வேகத்திலிருந்து  தள்ளி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இருப்பினும் இப்படியான நிலையிலும் தைரியத்துடன் சிரித்துப் பேசுபவர்கள் சிலரே.               அப்படியான ஒருவரை நேற்று பெரியதோடம் மூன்றாம்…

Read More

சிறுவனை காணவில்லை..!

க.கிஷாந்தன் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நோனாதோட்டத்தில் 17 வயதுடைய இளைஞன் செல்வராஜ் கிருஸாந்தன் (கிசோ)   கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரின் பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். கடந்த 7நாட்களாக வீடு திரும்பவில்லையென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும் தந்தையின் 071 6298059 என்ற தொலைப்பேசி…

Read More

NVQ (தேசிய தொழில்சார் தகைமை முறைமை) சான்றிதழின் அவசியம்

– கஹட்டோவிட்ட ரிஹ்மி – தேசிய தொழில்சார் தகைமை முறைமை – National Vocational Qualification (NVQ) அதிகமானோர் NVQ பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அறியாதும் இருக்கலாம். இந்த முறைமை ஆனது ஒருவருக்கு தொழில் சார்ந்த தகைமையை கொடுத்து விடும். NVQ சான்றிதழ் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொண்டால் தகுதியான தொழில் ஒன்றைத் தேடிப்பெற்றுக்கொள்வது இலகுவாகி விடும். அண்மைக்காலங்களில் அரச, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் கூட NVQ சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தகவல்…

Read More

பொலிஸார் இடைநிறுத்தம்; நீதவான் அதிரடி

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொலிஸ் பரிசோதகர் சிசேர என்பவரே இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் யாழ். நகரப்பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்….

Read More

அவசரமாக உதவி செய்வோம்..!

அவசரமாக உதவி செய்வோம்..! பணம் மூலம் உதவி செய்ய முடிய விட்டாலும் செய்வதன் மூலம் உதவி செய்யும் கரங்களுக்கு செய்தியை எடுத்துச் செல்வோம். Please help Dear Friend I need your SUPPORT now please ,My son ZAIN who is now 6 years old has to do a urgent RADIATION TREATMENT for a brain tumor, the doctors predicted this last week And my…

Read More

தொழிற்சாலையை விட்டு தப்பி சென்ற அதிகாரிகள் : 450 ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

(K.Kapila) கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

150,000 மெ.தொன் நெல் கொள்வனவுக்கு அரசு 7.2 பில். ரூபா செலவீடு

14/15 ஆண்டில் 150,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 7.2 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- இம்முறை பெரும்போகத்தில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நெல் கொள்வனவுக்கான நிதி மாவட்டச் செயலாளர்களினூடாக வழங்கப்படுகின்றன. உத்தரவாத விலைக்கே…

Read More

அனைத்து நகரங்களுக்கும் வருகிறது வழிப்பாதைச் சட்டம்

நாட்டின் அனைத்து நகரங்களிலும் வழிப்பாதைச் சட்டத்தை அமுல்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பான போக்குவரத்து முகாமைத்துவம் குறித்த கூட்டமொன்று பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் நேற்று வியாழக்கிழமை (23) நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில், மேற்படி வழிப்பாதைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது வெற்றியளித்துள்ளதை அடுத்தே அச்சட்டத்தை நாட்டின் ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக…

Read More

பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்: வாழைச்சேனையில் சம்பவம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்டகாலமாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் அடங்கிய குழுவினரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (22) காலை 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாழைச்சேனை, மீறாவேடை, கிண்ணயடி, மாஞ்சோலை, கறுவாக்கேணி போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம் பெற்று வந்ததையடுத்து வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஓ.எஸ்.விதானகேயின் ஆலோசனையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.திப்புட்டுமுனயின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி…

Read More

வடமாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள தபால் துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர்

மன்னார் நிருபர் தபால்துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் அவர்கள் எதிர்வரும் மே மாதம் 10 ம் திகதி அளவில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்ய உள்ளதோடு வடமாகாண பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், பரிபாலனசபை தர்மகர்த்தாக்கள் மத்ரசா நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும் தபால்துறை முஸ்லிம் கலாசார அமைச்சரின் வடமாகாணத்துக்கான இணைப்பாளரும், வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைவருமான மெளலவி ஏ.எஸ்.எச்.எம். முபாரக் ரஷாதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Read More