Headlines

மின் தடைகளை அறிவிப்பதற்கு புதிய அவசர இலக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின்போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாகாணக் கட்டுப்பாட்டு நிலையத்தின் அவசரத் தொலைபேசி இலக்கமான 026-2054444 ற்கு உடனடி அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் துரிதமான பலன்களை மின்பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின்பொறியியலாளர் திருமதி பி.அனிதா மின்பாவனையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

Read More

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் தாயும் குழந்தையும் பலி

பசறை பிபிலேகம பகுதியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக இரவு 8.00 மணியளவில் பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்துள்ளது. கற்பாறை சரிந்து வீழ்ந்தபோது வீட்டுக்குள் இருந்த 2 பெண்களும், 8 மாத குழந்தையும் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 54 வயதான பெண்ணும், 8 மாத குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுடன், 22 வயது பெண் தொடர்ந்தும் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில்…

Read More

வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் நாளையும்

கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் எமது நாட்டின் ஊடகத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான முறையினை உருவாக்கும் நோக்கிலும் வெகுசன ஊடகச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய மாநாடு இன்றும் (13) நாளையும் (14) கொழும்பு சிறிலங்கா பவுன்டேஸன் இன்சிரியுற்றில் (Sri Lanka Foundation Institute) இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டினை வெகுசன ஊடாக அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், சர்வதேச ஊடக ஒத்துழைப்பு (IMF) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டின் இறுதி அமர்வு நாளை 14…

Read More

கையும் களவுமாக பிடிபட்ட அதிபர் இறுதியில் உண்மையை ஒத்துக் கொண்டார்

பிள்ளையை பாடசாலையில் சேர்த்து கொள்வதற்காக அவருடைய அம்மாவிடம் பாலியலை இலஞ்சமாக கேட்டேன் என்ற குற்றச்சாட்டை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து, அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அயிராங்கனி பெரேரா முன்னிலையில், தனது குற்றத்தை ஏற்றுக்கொண்ட அதிபருக்கு எதிரான வழக்குக்கு தீர்ப்பு வழங்குவதற்காக, நீதிபதி அந்த வழக்கை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்த தாய், தன்னுடைய பிள்ளையை பாடசாலையில் சேர்த்துகொள்வதற்காக கொட்டாவை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சென்றுள்ளார். அச்சந்தர்ப்பத்தில், தன்னுடன் ஹோட்டலுக்கு வருவதற்கு…

Read More

இலங்கை அதிபர் சேவை தரம் III போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் செயலமர்வு -கண்டி

இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் வகுப்பில் நிலவும் 4431 வெற்றிடங்களை நிரப்புவதற்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை நாட்டின் சகல பாகங்களிலும் யூலை மாதம் நடைபெறவுள்ளது. கிரகித்தல், பாடசாலை நிருவாகம் மற்றும் பொதுஅறிவு, (நூண்ணறிவு உற்ட்பட) ஆகிய 3 பாடங்களில் 5 மணித்தியாலங்கள்  நடைபெறும் இப்பரீட்சைக்காக  ஆசிரியர்களைத் தயார் படுத்தும்  நோக்கில் தலைசிறந்த வளவாளர்களைக் கொண்டு பரீட்சை வழிகாட்டி செயலமர்வுகளை “Young Friends” அமைப்பு  ஏற்பாடு  செய்துள்ளது. ஒரு சமூக சேவை அமைப்பாகச் செயற்படும் “Young Friends” இலங்கை நிர்வாக…

Read More

அம்பியூலன்ஸ் வண்டிக்கு ஏற்பட்ட விபரீதம்

இன்று காலை தெரணியகல வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்பியூலன்ஸ் வாகனமொன்றை பின்னால் எடுக்க முற்பட்ட போது நடந்த விபரீதம்.

Read More

லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட – லுனுவல பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வல்லபட்டை கொண்டு சென்ற ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது அவரிடம் 2000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஓப்பனாயக்க பொலிஸ் நிலைய சார்ஜன் இன்று பலாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Read More

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இடியுடன்மழை!

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (11) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் நாட்டின் பல்வேறு கரையோரங்களிலும் காற்றுடன் கூடிய மழைக்கு சாத்தியம் காணப்படுகிறது.  மேலும் வடக்கு மற்றும் கிழக்கு  கடலோரங்களில் காலையில்  மழைக்கான சாத்தியம் நிலவும் குறிப்பாக புத்தளம் மாத்தறை கொழும்பு ஊடாக காலி முதலான கடலோரங்களில் காலையில் மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய…

Read More

வீட்டிலிருந்து நகை பணம் திருட்டு

அப்துல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகல்லாறு முதலாம் குறிச்சியில் வீடொன்றிலிருந்து (08) நேற்று 10 பவுண் நகைகளும், பத்தாயிரம் ரூபா ரொக்கமும் திருடப்பட்டுள்ளதான முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுப்பிரமணியம் சுகந்தி என்பவரின் வீட்டில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. அடுக்களைப் பக்கத்தினூடாக வீட்டிற்குள் பிரவேசித்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகளும் பணமும் திருடப்பட்டுள்ளதாக சுகந்தி தெரிவித்தார். தாம் நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது திருட்டு இடம்பெற்றுள்ளதாகவும் தூக்கத்திலிருந்து வழமைபோன்று காலை ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தவுடன் மேற்படி திருட்டு…

Read More

வத்தளை – ஹெந்தலை சந்தியில் முஸ்லிம் பெண்ணை வெட்டிக் கொன்ற காதலன்! (video)

– ரிமாஸ் –  வத்தளை – ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07) இரவு கடைக்குள் சென்ற நபர் யுவதியை வெட்டிக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை – ஹுனுபிட்டி பராக்கிரம மாவத்தையில் வசிக்கும் 19 வயது முஸ்லிம் யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை புரிந்த இளைஞன் கத்தியால் கழுத்தை வெட்டிக் கொண்டு…

Read More

நீர்கொழும்பு கடற்கரையில், அபூர்வமான கடல் உயிரினம்

நீர்கொழும்பு கடற்கரையில் இப்படியான அபூர்வமான கடல் வாழ் உயிரினம் ஒன்று மீனவர்களுக்கு கிடைத்தது. மீனை போன்று இருக்கும் இந்த உயிரினத்தின் மேல் பகுதியில் மானுக்கு இருப்பதை போன்ற புள்ளிகள் காணப்படுகின்றன.

Read More

தேசத்திற்கு மகுடம் 2013ல் அபிவிருத்தியின் நிதி தொடர்பில்:இலஞ்ச ஆணையாளரிடம் முறைப்பாடு

அஸ்ரப் ஏ சமத் 2013ல் அம்பாறையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தியின்போது 3 பஸ் நிலையங்களை அமைப்பதாக சொல்லி முன்பு கடமையில் இருந்த அரசாங்க அதிபர் நில் தி அல்விஸ் கோட்டாப ராஜபக்சவின் தணிப்பட்ட கணக்குக்கு 13 கோடி ருபாவுக்கான காசோலையை வழங்கியிருந்தார். மேற்படி விடயமாக அம்பாறை ஜே.வி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் எல்.பி வசந்த பியதிஸ்ச கொழும்பு இலஞ்ச ஆணையாளரிடம் நேற்று முறைப்பாடு செய்தனர். இவ் நிதிமோசடி சம்பந்தமாக உடனடியாக கோட்டாபாய ராஜபக்ச, அம்பாறையில் கடமையில்…

Read More