Headlines

இலங்கை சந்தைக்கு BMW இன் புதிய அறிமுகம்

BMW இனது இலங்­கைக்­கான ஏக விநி­யோ­கஸ்­தர்­க­ளான Prestige Automobiles ஆனது, BMW i3 –மற்றும் BMW i8 என்­ப­வற்றை உள்ளூர் சந்­தைக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதற்கு மேல­தி­க­மாக, BMW Group Asia உடன் இணைந்து BMW i சார­தி­க­ளுக்கு 360o ELECTRIC program இனையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.BMW i ஆனது BMW i3 மற்றும் BMW i8 ஊடாக நிலைத்­தி­ருக்­கக்­கூ­டிய புத்­தாக்­க­முள்ள வாக­னங்­க­ளையும் நகர்வுச் சேவை­க­ளையும் உரு­வாக்­கு­வதில் தன்னை அர்ப்­ப­ணித்­துள்­ளது. BMW i3 ஆனது capable of achieving zero…

Read More

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் மீது கல்வீச்சு

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர பொலிஸ் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் எண்ணிக்கை வீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேலதிகமாக தெற்கு அதிவேக வீதிக்கு அண்மித்த பிரதேசங்களிலும் பொலிஸ் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனம் தொடர்பான பதில் பொலிஸ்மா அதிபர் அமரசிரி தெரிவித்துள்ளார். அதிவேக வீதியின் 21 ஆவது மைற்கல்லுக்கு அண்மையில் இருவர் வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களை வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் 6 வாகனங்கள்…

Read More

உதவி பொலிஸ் அத்தியட்சகரை கைது செய்ய உத்தரவு

எம்­பி­லிப்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் டீ.டப்­ளியூ.சி.தர்­ம­ரத்ன மற் றும் எம்­பி­லி­ப்பிட்­டிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.ஆர்.ஜே.டயஸ் ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது­செய்­யு­மாறு நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது. குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு எம்­பி­லி­பி­டிய நீதவான் நீதி­மன்றின் மேல­திக நீதிவான் பிர­சன்ன பெர்­ணான்டோ இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு எம்­பி­லி­பி­டிய பகு­தியில் இடம்­பெற்ற விருந்து நிகழ்­வொன்றின் போது, பொலி­ஸா­ருக்கும் மக்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற மோதலில் படு…

Read More

தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்த போராட்டம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் இன்று (28) காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித். பீ. திலகரத்ன கூறினார். குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தாவிட்டால் மேலும் பரந்தளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

வெலிமடை விபத்தில் ஒருவர் பலி

– க.கிஷாந்தன் – வெலிமடை, பொரலந்தை, என்ட்ருகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி நபர், பொரலந்தை தபால் நிலையத்தில் சேவையாற்றி வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். என்ட்ருகொல்ல பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்செல்ல வந்த லொறியொன்று, வீதியில் சென்றுக்கொண்டிருந்த மேற்படி நபரின் மீது மோதியுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின்…

Read More

பேனாவால் குத்திய ஆசிரியர் : வைத்தியசாலையில் மாணவன்

 – கிஷாந்தன் – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த தரம் 01 முதல் 05 வரையான பாடசாலை ஒன்றில் கணித ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் உள்ள மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் மாணவன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக மாணவனின் பெற்றோர்  லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். 4 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவன் ஒருவனே லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நுவரெலிய…

Read More

பெண்ணின் வயிற்றிலிருந்த எட்டுக்கிலோ கட்டி அகற்றப்பட்டது

டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சாலையில் நேற்று மேற்­கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றில் சாத­னை படைக்கப்பட்டுள்ளது. அக்­க­ரப்­பத்­தனை பிர­தே­சத்தை சேர்ந்த பெண் ஒரு­வ­ருக்கு நான்கு மணி நேரம் மேற்­கொண்ட அறுவை சிகிச்­சையின் மூலம் இந்த சாதனை நிகழ்ந்­துள்­ள­தாக டிக்­கோயா கிளங்கன் வைத்­திய வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன. இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, தனக்கு வயிற்று வலி என நீண்ட கால­மாக அவ­தி­யுற்று வந்த இப்பெண் டிக்­கோயா கிளங்கன் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­கென சென்­றுள்ளார். இவரை பரி­சோ­தித்த வைத்­தி­யர்கள் வயிற்றில் கட்டி ஒன்று இருப்­ப­தாக…

Read More

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு : ஐவர் கைது

– க.கிஷாந்தன் – பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று (25) இரவு வேளையில் ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பகுதியில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு…

Read More

குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் தாயகம் திரும்பினர்

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இன்று (13) காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 80 பெண்களே இவ்வாறு வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டினால், மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இம் மாத இறுதிக்குள் மேலும் சில பணிப் பெண்களை அழைத்து வர…

Read More

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திர காந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27ம்; திகதி வரை (27.1.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார். கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

ரொஹான் வெலிவிட்டவிடம் சி.ஐ.டி 5 மணி நேர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் படங்களுடன் கூடிய 4 ஆயிரம் ஒளிநாடாக்களை அலரிமாளிகையிலிருந்து இரகசியமாக அப்புறப்படுத்தியமை தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட மீது கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் அழைக்கப்பட்டு சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 9ம் திகதி ஆகும் போது இந்த ஒளிநாடாக்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக…

Read More

பௌத்த பிக்குகள் ஜோதிடம் பார்க்கத் தடை

இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத் தடை விதிக்கப்பட உள்ளது. பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும், அது தொடர்பிலான விளம்பரங்களை செய்யவும் தடை விதிக்கும் வகையிலான சட்டங்களை விரைவில் அறிமுகம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. வர்த்தக, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ளல், வாகனம் செலுத்துதல் ஆகியன உத்தேச புதிய சட்டத்தில் தடை செய்யப்படவுள்ளது. புதிய சட்டத்தின் அடிப்படையில் சமூக சேவைகளில் ஈடுபடுதல், சமய மற்றும் கல்வி நடவடிக்கைகளில்…

Read More