ஹெலி விழுந்து விபத்து
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலிகெப்டர், பல்கேபெத்த பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான, ஹெலிகெப்டர், பல்கேபெத்த பகுதியில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரைக் கைது செய்வதற்கு சென்ற பொலிஸார் இருவர் மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வீரகெடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாஜன்ட் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். பிடியாணையுடன் சந்தேக நபரைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற வேளை, சந்தேக நபர் தனது மகனுடன் இணைந்து குறித்த இருவர் மீதும் அவர் தாக்க முற்பட்டுள்ளார். அதனைத் தடுக்க இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் முற்பட்ட வேளை, அங்கு…
போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட 39 யானைகளை இதுவரை வன ஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. ருவன்வெல்ல – அம்திரிகல பிரதேச வீடொன்றிலிருந்து யானை குட்டி ஒன்றை நேற்றிரவு மீட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்ட யானைக் குட்டியை உடவலவை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், போலி ஆவணங்களுடன் வளர்க்கப்பட்டு வரும் மேலும் 6 யானைகளை மீட்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிரோதமாக பராமறிக்கப்பட்டு வரும் யானைகளை மீட்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரும்,…
கொழும்பு புதுக்கடை உச்ச நீதிமன்ற நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் நேற்று (25) பாம்பொன்று காணப்பட்டதனால் பதற்றம் நிலவியுள்ளது. நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அநேகமாக பூர்த்தியாகியிருந்த போதிலும் அலுவலக நடவடிக்ககைள் இடம்பெற்று வந்த போது, திடீரென நீதிமன்றக் கட்டடத்தின் நான்காம் மாடியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. நான்காம் மாடியில் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறைகள் காணப்படுவதனால் அதற்குள் பிரவேசிக்க வெளிநபர்களுக்கு அனுமதியில்லை. நீதவான் ஒருவர் உத்தியோகபூர்வ அறைக்கு…
இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…
– ஆர்.கிறிஷ்ணகாந் – இலங்கையில் பாவனையிலுள்ள சகல தொலைபேசி இணைப்புகளின் உரிமை யாளர்களை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது வேறு ஒருவரின் பெயரில் சிம் இணைப்புகளை பெற்றுக் கொள்வது இத்திட்டத்தினூடாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையிலுள்ள சிம் உரிமையாளர்கள் தொடர்பில் நிலவும் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்ப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு…
பொல்பிட்டியவிலிருந்து கொலனாவை வரையிலான அதிவலுகொண்ட பிரதான மின் கட்டமைப்பை மின்னல் தாக்கியதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை…
– ஆர்.கிறிஷ்ணகாந் – கடுவலை பிரதேசத்தில் நேற்று (25) பிற்பகல் ஐஸ் மழை பெய்துள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் கடும் மழையுடனான காலநிலை நிலவியிருந்தது. பிற்பகல் வேளை இருள் சூழ்ந்தவொரு வானத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதனால் கொழும்பு நகர் பிரதேசம் முழுவதிலும் சற்று இருள் சூழ்ந்திருந்தது. பின்னர் கடும் காற்றுடன் ஆரம்பித்த மழையுடன் கடுவலை பிரதேசத்தில் ஐஸ் மழை பொழிந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது. மேலும் கொழும்பின் ஏனைய…
(25) சற்று முன்னிலிருந்து நாடு பூராகவும் மின்சாரம் தடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் தெரியவரவில்லை.
அவன்கார்ட் நிறுவனத்தின் கணக்காய்வாளரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (25) உத்தரவிட்டுள்ளார். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை மார்ச் முதலாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
ஜாஎல – ஏகல பிரதேசத்தின் குப்பை கொட்டும் இடத்தில் மனித எச்சங்களை ஒத்த எச்சங்கள் சில நேற்று (24) கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏகல பிரதேசத்ததில் குப்பை கொட்டும் இடத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் அதிக துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனயடுத்து குறித்த பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள பெண் ஒருவரால் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர் . நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற…
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தம் நோக்கில் இலங்கையில் பாவனையில் உள்ள அனைத்து கைத்தொலைபேசிகளினதும் சிம் அட்டைகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து தொலைபேசி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிம் அட்டையினைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கமென இந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய நபர்களின் பெயர்களில் சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டு அது பல்வேறு…