Headlines

சம்மாந்துறையில் பிரமாண்டமான பொழுதுபோக்கு வலயம்

நீண்ட கால­மாக சம்­மாந்­துறை பிர­தே­சத்தில் ஒரு பொழு­து­போக்கு வலயம் இல்­லாத குறையை நிவர்த்­திக்கும் முக­மாக அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழுத் தலை­வ­ரு­மான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்­ச­ராக இருந்த போது பிர­மாண்­ட­மான பொழு­து­போக்கு வலயம் அமைப்­ப­தற்­கான காணிகள் அடை­யாளம் காணப்­பட்டு இருந்­த­துடன் அதற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. தற்­போது பிர­மாண்­ட­மான பொழு­து­போக்கு வலயம் அமைப்­ப­தற்­கான அடை­யாளம் காணப்­பட்ட காணி­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான ஆலோ­சனைக் கூட்­ட­மா­னது சம்­மாந்­துறை பிர­தேச செய­ல­கத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்…

Read More

கல்­மு­னையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ சோனியாவா?- அப்றாவா?

கல்­மு­னையில் கடந்­த­வாரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 16வயது சிறு­மி­ கே­சா­னியா? அப்­றாவா? என்­ப­து­ தொ­டர்பில் கல்­மு­னை­ நீதி­மன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஆழிப்­பே­ர­லையின் போது ­ஆறு வயதில் காணா­மல்­போ­ன­ கே­சா­னி­ த­ன­து ­கு­ழந்­தை தான் எனக்­கோ­ரி­ வ­ழக்­குத்­தாக்கல் செய்­த­தா­க­ கல்­மு­னை­யைச் ­சேர்ந்த எஸ்.ஜெய­ரா­சா ­தெ­ரி­வித்தார். கல்­மு­னைப் ­பொ­லிஸார் கண்­டு­பி­டித்த இச்­சி­று­மி­ சி­று­வர் ­நன்­ன­டத்­தைப்­ பி­ரி­வி­னூ­டா­க­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் பாது­காப்­பு­ புக­லி­டத்­திற்­கு ­அ­னுப்­பி­ வைக்­கப்­பட்டார். தற்­ச­மயம் 16 வயது நிரம்­பிய இச்­சி­று­மி­ அம்­பா­றை­யி­லுள்­ள ­சி­றுவர் புக­லி­டத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இச்­சி­று­மிக்­கு ­உ­ரி­மை ­கோரி…

Read More

பெண்கள் வெறுமனே பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை – அமீர் அலி

– அபூ செய்னப் – பெண்கள் வெறுமனே பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை,அவர்கள் வினைத்திறன் மிக்கவரகள்,நேர்த்தியான சமூக கட்டமைப்பினை உறுவாக்குவதில் முன்நிறபவர்கள் என கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். தேசிய விளையாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டுத் துறை  அமைச்சும் கோறளைப்பற்று மேற்கு ஒட்டமாவடி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய  விளையாட்டு மற்றும்  உடல்  ஆரோக்கிய விருத்தி வாரம் மற்றும் விசேட தின நிகழ்வில் பிரதம அதிதியாக  பிரதி அமைச்சர் அமீர் அலி…

Read More

சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள சம்பூர் பாலகனின் மரணம்

சம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூலமோ அல்லது விசாரணை அறிக்கைகள் மூலமோ முழுமைக் கண்டு பிடிக்கப்பட முடியாத நிலையில் பல்வேறு சந்தேகங்கள், ஊகங்கள் எழுந்துள்ளன. இதேவேளை சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்துடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூற முடியும் என திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ…

Read More

நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம் – அமைச்சர் றிஷாத்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும் மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம் வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட…

Read More

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா  உத்தரவிட்டார். கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

கடைகளில் கொள்ளை

– ஜவ்பர்கான் – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் இன்று (26) அதிகாலை இரண்டு பலசரக்கு விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி மத்திய வீதியிலுள்ள பலசரக்கு விற்பனை நிலையமும் காத்தான்குடி அரபிக்கலாசாலை வீதியிலுள்ள பலசரக்கு விற்பணை நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து, காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார்…

Read More

கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு

திருகோணமலை – சம்பூர் 7 கிராமத்திலுள்ள கிணற்றில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் மாணவனொருனின் சடலம் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 6 வயதுடைய மாணவனுடையது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்  சம்பூர்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

வகுப்­ப­றை­களில் தொலை­பே­சி பாவ­னைக்குத் தடை

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமது கடமை நேரத்தில் வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவிக்கக் கூடாதென்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், சகல வலையக் கல்விப் பணிப்பாளர்கள் மூலமாக, பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தமது கடமை நேரங்களில் வகுப்பறைகளில் வைத்து கையடக்கத் தொலைபேசிகளை பாவித்தமை மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு, கண்டிப்பான உத்தரவை கிழக்கு…

Read More

கல்முனையில் வாகனங்கள் மீது தீ வைப்பு

கல்முனை – சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

புறாவைக் காணவில்லை : குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து

மகன் வளர்த்த புறாவைக் காண­வில்லை என தேடிச்­சென்ற தந்தை ஒரு­வர்­மீது பக்­கத்து வீட்­டுக்­காரப் பெண் கத்­தியால் குத்­தி­யுள்ளார். படு­கா­ய­ம­டைந்த அவர் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் கடந்த திங்கட்கிழமை இடம்­பெற்­றுள்­ளது. பிறைந்­து­ரைச்­சேனை முகைதீன் பள்­ளி­வீ­தியில் வசிக்கும் 50 வயது நிரம்­பிய குடும்­பஸ்­தரே இவ்­வாறு கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நப­ராவார். சம்­பவ தின­மான அன்று குறித்த தந்­தையின் மகன் தான் வளர்த்த புறாவைக் காண­வில்லை என்றும் இறு­தி­யாக பக்­கத்து வீட்டின் கூரையில்…

Read More

வீதிகளில் தனிமையில் செல்லும் பொதுமக்கள் மிக அவதானம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலங்களாக வீதியோரத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் வீதிகளில் தனிமையாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள சன நடமாட்டம் குறைவாக உள்ள உள்வீதிகளினால் பொதுமக்கள் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வருபவர்கள் தங்க ஆபரணங்களை அபகரித்துச்செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்துக்  காணப்படுகின்றது. இதனை தவிர்த்துக்கொள்வதற்காக வேண்டி குறிப்பாக பெண்கள்…

Read More