Headlines

தீர்க்கமான பாதையை தீர்மானிக்க வேண்டிய தருணம் இது – றிஷாத் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காஸிம் – மாநாடுகளைக் கூட்டி, மக்களைக் காட்டி அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எமது கட்சிக்கு ஒரு போதும் கிடையாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மூதூரில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, தேர்தலுக்கு முதல் ஒரு கதையும், தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு கதையும் கூறுபவர்கள் நாங்கள் அல்ல. திருமலை மாவட்டத்தில், தேர்தல் காலத்தில் நாம் வழங்கிய வாக்குகளை நிறைவேற்றித் தருவோம். மர்ஹூம் அஷ்ரப்…

Read More

18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அ.இ.ம.காவுடன் இணைவு

குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர். கிண்ணியா,…

Read More

படுகாயமடைந்த மௌலவி பலி

காத்தான்குடி பிராதன வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் மௌலவி ஒருவர் பலியாகியுள்ளார். இவ் விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மிக வேகமாக ஆரையம்பதியிலிருந்து இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடு வீதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த இருவரில் ஒருவர் பலத்த காயாங்களுடன் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபின்னர் மரணமானார். இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த…

Read More

இந்திய பிரஜைகள் 12 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 இந்திய பிரஜைகள் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று   வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

வெளிச்ச வீட்டில் ஏறி பார்வையிடுவதற்கு தடை

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு வெளிச்ச வீட்டில் (லைட் ஹவுஸில்) சுற்றுலா பயணிகள், பொது மக்கள் ஏறி பார்வையிடுவதற்கு மட்டக்களப்பு மாநகர சபையினால் சுமார் கடந்த ஒரு வருடங்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் கடந்ந காலங்களில் மேற்படி வெளிச்ச வீட்டில் ஏறும் பொது மக்களில் சிலரும், இளைஞர்களும் வெளிச்ச வீட்டு உச்சியில் ஏறி கொண்டு தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டுவதாகவும், சிலர் குடிபோதையில் வெளிச்ச வீட்டில் ஏறி…

Read More

மூதூரில் பசுமைக் குழு தோற்றம்

– மூதூர் முறாசில் – மூதூரில் பசுமைக் குழு( Green Committee) என்னும் புதிய அமைப்பு தோற்றம் பெற்றுள்ளது. மூதூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்படவுள்ள அனல்மின்சார நிலையத்தை நிறுத்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதை முதன்மையான நோக்கமாகக்கொண்டே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மூதூர் பீஸ் ஹோம் அமைப்பின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை(15) அரபா நகர் ஜும்ஆப்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற சமூக மற்றும் சன்மார்க்க அமைப்புகளின் ஒன்றுகூடலின் போதே இப்புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்களை உள்ளடக்கும் வகையில்…

Read More

“கல்முனை மாநகரம்” அறிமுக விழா 18ம்திகதி

– எம்.வை.அமீர் – கல்முனை மாநகர சபை உறுப்பினரும் வரலாற்று ஆய்வாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய “கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” நூல் அறிமுக விழா எதிர்வரும் 2016.03.18ம்திகதி வெள்ளிக்கிழமை கட்டாரில் இடம்பெறவுள்ளது. கட்டார் டோஹா நகரிலுள்ள பிரண்ட்ஸ் கல்சரல் சென்டர் – அல் ஹிலால் என்னும் இடத்தில் மாலை 5.00 மணிக்கு இவ்வறிமுகவிழா இடம்பெறவுள்ளது. கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம் (GFK- கட்டார்) இந்நூல் அறிமுக விழாவை ஏற்பாடு செய்துள்ளது. நூல் அறிமுகவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நூலாசிரியரான…

Read More

அம்பாறை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க ACMC ஏற்பாடு

அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகள் மற்றும் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். கட்சித் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் அனுசரணையுடன் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சாய்ந்தமருது பிரதேசத்திற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

மின்தடையால் ஏற்பட்ட வினை

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (13) நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் வசிக்கும் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த கட்டில், அலுமாரி,…

Read More

மட்டக்களப்பு மாணவி புதிய கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார். என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் பலருக்கு உள்ள எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்துள்ளார். இந்த இயந்திரமானது வீட்டில் உள்ள பாவனைக்கு உதவாத கழிவு பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியின் போது இரண்டாம் இடத்தினையும், மட்டக்களப்பு மட்டத்தில்…

Read More

மட்டக்களப்பில் குடியிருப்போர் விவரங்களைக் கோரும் போலிசார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு போலிஸார் கோரியுள்ளனர். மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது போலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் என வகைப்படுத்தப்பட்டு விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் போலிஸாரால் கோரப்பட்டுள்ளன. வீட்டு உதவியாளர்கள் உட்பட தற்காலிமாக குடியிருப்போர் பற்றிய விபரங்களில் நிரந்தர வதிவிடம் , உறவு முறை, தங்குவதற்கான காரணம் மற்றும்…

Read More

நீதி அமசை்சர் மட்டு.மாவட்டத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாணத்தில் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைளை கண்காணிப்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடதொகுதிக்கு வருகைதந்த நீதி அமைச்சர் மாவட்டத்தின் நீதி நிருவாக நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சவபாதம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாலில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிபதிகள் உட்பட பல நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் நீதிமன்றங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க…

Read More