Headlines

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்

-சுஐப் எம்.காசிம் – அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21) நியமித்தார். அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அமபாறை நெசவுத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விளக்கியதன் பிரதிபலனாக நேற்று மாலை நிதியமைச்சர ரவி கருணாநாயக்க தனது அமைச்சுக் கட்டிடத்தொகுதியில் அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட…

Read More

அம்பாறை கரும்பு உற்பத்தியாளர்கள் பிரச்சினைகள் ஆராய்வு!

-சுஐப் எம் காசிம் – அம்பாறை மாவட்ட கரும்புச் செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (28) நிதியமைச்சில் மீண்டும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவின் தலைமையில் இன்று (21) மாலை 9நிதியமைச்சுக்கட்டிடத் தொகுதியில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், தயாகமகே பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் கரும்பு உற்பத்தியாளர்கள் ஹிங்குரான சீனிக்கூட்டுத்தாபனத்தை நிர்வகிக்கும் கல்லோயா பெருந்தோட்டக் கம்பனியினர் தமக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் குறித்தும் கரும்புப்பயயிர்செய்கையில் தாங்கள்…

Read More

மகன்மார் கைது செய்யப்படும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

அரசை கவிழ்க்க தெரிந்தால் தனது மகன்மார் கைது செய்யப்படும்வரை ஏன் காத்திருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று (13) மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே இம்ரான் மஹரூப் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசை கவிழ்ப்பதாக கூறிக்கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினர் மக்கள் முன் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் எங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் அமைச்சர்களாக…

Read More

முஸ்லிம்கள் முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாகும் – ரண்முத்தகல சங்கரத்ன தேரர்

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் (12.07.2016 செவ்வாய்கிழமை) அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல்(பிலால் ஹாஹி) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஒற்றுமைக்கான நோன்பு பொருநாள் இரவு நேர ஒன்று கூடல் மற்றும் இராப்போசன நிகழ்வு மட்டக்களப்பு ரெஸ்ட்-இன் ஹோட்டலில் இடம் பெற்றது. மதத் தலைவர்களை மதிக்கின்ற தன்மை மனிதர்களிடையே உருவாக வேண்டும் என கல்முனை சுபாத்ரா ராம விகாராதி பதி ரண்முத்தகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.; மத்தலைவர்கள் மூலம்தான் அந்தந்த இனத்தவர் தங்கள் மத விடயங்களை…

Read More

றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களும், நெசவுத்தொழிலில் ஈடுபடுவோரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் வகையில் அவர்களை, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அமைச்சரவையின் உபகுழுக் கூட்டம் இன்று காலை (12/07/2016) நடைபெற்றபோது அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹகீம், தயாகமகே ஆகியோரின் வேண்டுகோளை ஏற்றே, இந்த சந்திப்பை அவர் நடத்தவுள்ளார். இந்த மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை அமைச்சர்கள், நிதி அமைச்சர் ரவியிடம் எடுத்துரைத்தனர்….

Read More

தென்கிழக்குப் பல்கலை பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்

-கலாபூசணம் – மீரா.எஸ்.இஸ்ஸடீன் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 96/97 கல்வி ஆண்டில் கல்வி கற்று 2002ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலை,கலாசார பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களின் குடும்பத்துடனான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 2016.07.16ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00மணி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில்; பல்கலைக்கழக பழைய மாணவர் சங்க உத்தியோக பூர்வ அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற உள்ளது. இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப்…

Read More

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் என்பதுடன், மாகாணத்தில் காணப்படும்  கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,134 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படவுள்ளதாக  கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார். மட்டக்களப்பு, ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற விஞ்ஞானத் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளின் அனைத்துப் பிரச்சினைகளையும், தேவைகளையும் ஒரே…

Read More

‘சிறையில் நான் இங்குதான் இருந்தேனா’ (Video)

1971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில்  தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலை கூண்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (10) பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோ…

Read More

ஜனாதிபதி இன்று மட்டக்களப்பில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது விளையாட்டுத் துறை அமைச்சின் 17 கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நகர…

Read More

மட்டக்களப்பில் 251 ஹெக்டேயரில் சோளம் பயிர்ச்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் 16 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் இம்முறை சுமார் 251 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இராசரெத்தினம் கோகுலதாசன் தெரிவித்தார். மாற்றுப் பயிர்ச் செய்கைத் திட்டத்தின் கீழ் கரடியனாறு, வாகரை, வாழைச்சேனை, வந்தாறுமூலை, கிரான், ஏறாவூர், ஆயித்தியமலை, மண்டபத்தடி, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், மண்டூர், வெல்லாவெளி, தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளன. மேலும், சோளம் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 50…

Read More

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவைகள்

தற்போது மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்தில் உள்ள வட்டிக்குளம் வாவியில்  வெளிநாட்டுப் பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பறவைகள் இந்தோனேஷியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக அப்பிரதேச வாசியொருவர் தெரிவித்துள்ளார்.

Read More

தற்போதய அரசில் கல்வி அபிவிருத்திக்காக பெருமளவு நிதி!

தற்போதய அரசாங்கத்தில் கல்வி அபிவிருத்திக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் 83 பில்லியன் ரூபாக்களை கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கியிருக்கின்றமையானது பாடசாலை, கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கியிருப்பது இலங்கையின் வரலாற்றிலே இதுவே முதல் தடவையாகும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் வி.ராதாகிருஸ்ணன் இன்று வியாழக்கிழமை (30) காலை மட்டக்களப்பிலுள்ள அரசினர் ஆசிரிய கலாசாலைக்கு வருகை தந்து அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டதுடன் கலாசாலை முதல்வர் மற்றும் கல்வியியலாளர்கள் ஆசிரிய பயிலுனர்களுடனும்…

Read More