ACMC News
அஷ்ரப் கண்ட கனவு இன்று றிஷாத் பதியுதீன் ஊடாக நனவாகவுள்ளது -இஸ்மாயில்
எம்.சி.அன்சார் நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அந்த மாற்றத்தினை முஸ்லிம் மக்களால் முழுமையாக சுவைக்க முடியவில்லை. குறுகிய அரசியல் வட்டத்துக்குள் கட்டண்டு மீள முடியாமல் தவிக்கின்றனர். அவற்றிலிருந்து சமூகத்தை விடுவிப்பதே எனது முதற்பணியாகும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். முஸ்லிம் சமூகம் தனித்துவமாக இருந்து…
வெஸ்டர் றியாஸ் அ.இ.ம.கா. வில் இணைவு
-எம்.வை.அமீர்- ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினராகாவும் கட்சியின் உயர் பதவிகளிலும் இருந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அக்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். மாகாணசபை உறுப்பினரின் செயற்பாடுகளில் திருப்திகொண்ட அமைச்சர் றிசாத் பதியூதீன், அவரது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைத்து ஜெமீலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியதுடன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தேசியப்பட்டியலில் அவரது பெயரை…
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு அடித்தளமிட்டவர் அமைச்சர் றிஷாத்
– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முசலி மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை வெற்றி பெற களமிறங்குவதாக முசலி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மத் காமில் தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிடும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வெற்றி தொடர்பில் பாலக்குளி பிரதேச இளைஞர்கள் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில் :– இன்று வடபுலத்து முஸ்லிம்கள் கௌரமானதொரு மீள்குடியேற்றத்தை…
வன்னியில் 3 பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெறுவோம் – றிஷாத் பதியுதீன்
எமது மக்களுக்கு இந்த அரசியல் அதிகாரங்களை கொண்டே அனைத்தையும் செய்ய முடிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் (யானைச் சின்னத்தில் போட்டியிடும்) அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வேட்பு மனுத்தக்கல் செய்த பின்னர் வவுனியாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது மேற்கண்டவாறு கூறினார். வன்னி மாவட்டத்தில் நாம் புதிய அரசியல் காலாசாரத்தை தோற்றுவித்து செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் சில அரசியல் வாதிகள் அந்த கலாசாரத்தை அகற்ற முனகைின்றனர்.அது அவர்களது கனவு என்பதை சொல்லிக்கொள்ள…
மனித நேயம் கொண்ட ஒரு தலமையின் கீழ் போட்டியிடுவதையிட்டு பெருமையடைகின்றோம்
அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று அம்பாரை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். பிரமான்டமான வாகனத் தொடர் அணியாகச் சென்று அக்கட்சியன் பிரதம வேட்பாளராகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகருமான அப்துல் மஜீட் மற்றும் வேட்பாளர்களான முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் ஆகியோர் அம்பாரை…
அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை உள்ளது -S.M.M.இஸ்மாயில்
எம்.சி.அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று முஸ்லிம் அரசியலில் முன்னோக்கி காலடி எடுத்து வைத்திக்கின்றது. அதிலும் முஸ்லிம்கள் செரிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை. அதற்காகத்தான் முதற்தடவையாக அம்பாறை மாவட்டத்தில் தகுதியான பலம்வாய்ந்த அணியின் மூலம் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் எமது கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்றும். என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்….
அன்வர் இஸ்மாயில் எனும் சிங்கத்தின் இழப்பை ஈடுசெய்வோம்
அஸ்லம் எஸ்.மௌலானா இன்று இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாச்சாரம் தோன்றியுள்ளது, நல்லாட்சியின் அத்தனை சிறப்புக்களையும் சுவைக்கின்ற தாய் நாடாக இலங்கை எதிர்காலத்தில் பயணிக்க தயாராகி விட்டது. ஆனால் நமது பிராந்தியத்தில் மாத்திரம் இதன் பெறுபேறுகளை காண முடியாத துர்ப்பாக்கிய நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை எமது சமூகம் உணர்ந்து மாறாத வரை நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இவ்வாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அல்ஹாஜ் எம்.எம்.முஹம்மது இஸ்மாயில் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்…
விஷேட துஆ பிரார்த்தனை
அகமட் எஸ். முகைடீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்ட இவ்துஆப் பிரார்த்தனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், சிரேஷ்ட பொலிஸ் அத்திகட்சகர் அப்துல் மஜீட், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில்…
றிஷாதின் அம்பாறை வருகை! கதிகலங்கிய மு.கா.
நஸீர் -அட்டாளைச்சேனை அ.இ.ம.காவுக்கம் அதன் தேசியத் தவைலருமான றிஷாத் பதியுதீனுக்கும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியல் இருக்கும் செல்வாக்கை இல்லாதொழிக்கும் – வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சதித் திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தை வந்தடைந்துள்ளது. பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருக்கும் அ.இ.ம.காவின் வேட்பு மனுவை இரத்துச் செய்வதற்கு இன்று எடுக்கப்பட்ட முயற்சியின் மூலம் அந்த சதித் திட்டம் அம்பாறை நகரிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் அமைச்சர் ரிசாதினால் உருவாக்கப்பட்ட ஹூனைஸ் பாறுக் – இனவாதிகளோடும் இனவாத…
றிஷாதை வரவேற்ற ஆயிர கணக்கான இளைஞர்கள்
வவுனியா விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் றிஷாதை வரவேற்ற ஆயிர கணக்கான இளைளுர்கள்.
அமைச்சர் றிஷாத் வேட்பு மனுவை சமர்ப்பித்தார்
சற்று முன் வவுனியா கச்சேரியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் வேட்பு மனுவை சமர்ப்பித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமானறிஷாத் பதியுதீன் வவுனியா மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருடன் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் யஹ்யாபாய் மற்றும் ஜெயதிலக ஆகியோர் றிஷாத் பதியுதீனுடன் வருகை தந்த போது பிடிக்கப்பட்ட புகைப்படம்
சிராஸ் மீராசாஹிப் வேட்பு மனுவில் கையொப்பம்
கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார். கடந்த காலங்களில் ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புரிந்த சிராஸ் மீராசாஹிப் மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளார்.
