Headlines

தொடர்பாடல் அதிகாரிகள் நியமனம்

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத்  பதியுதீன் இந்த நியமனக்கடிதங் களை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க்க அண்டனும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார்…

Read More

புத்தளம் குவைத் வைத்தியசாலையில் இலவச கண் சிகி்ச்சை முகாம்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18 வது முறையாக ஏற்பாடு செய்த இலவச கண் சிகி்ச்சை முகாம் புத்தளம் குவைத் வைத்தியசாலையில் 3 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம் பெறுகின்றது. இம்முறை 500 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை மற்றும் கண்ணில் வெள்ளை படலத் திரையினை அகற்றுதல் என்பன இடம் பெறுகின்றது.நாடு தழுவிய முறையில் இந்த கண் சிகிச்சை முகாம் இடம் பெறுவதாக ஜமிய்யத் சபாப் நிறுவனத்தின் உதவி…

Read More

திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ராஜித சேனாரத்ன,வாசுதேவ நாணயக்கார எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுகாதார கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.நாடு தழுவிய முறையில் தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.கைத்தொழில்,வணிகத துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள கூட்டுறவு சங்க செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது….

Read More

ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள்

ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள் இன்றும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடை பெற்றது.மோட்டார் சைக்கிள்,குதிரை,மற்றும் ரேஸ் கரத்தைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன. பிரதம அதிதியாக கைத்தொழில்,வணித் துறை அமைச்சர் றிசத் பதியுதீன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி,வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர்,முன்னாள் உறுப்பினர் எஹியா ஆப்தீன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் வழங்கியுள்ள ஹஜ்ஜூப் பெருநாள் வாழத்துச் செய்தி

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரிமிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் இஸ்லாம் மார்க்கம் மனித சமூகத்தின் விமோசனத்திற்கும்,உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் படியும் எமக்கு போதித்துவருவவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்றைய தியாமிகு திருநாளில் நாம் விட்டுக்கொடுப்புக்களுடன் செயற்படும் வகையில் எமது வாழ்வின் பணிகளை அமைத்துக்கொள்ளுமாறு பெருநாள் வாழத்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பொருநாளையிட்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இந்த பெருநாள்…

Read More

எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் – றிஷாத் பதியுதீன்

– இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் – நாம் மட்டும் கற்றுவிட்டோம் என்று நினைக்காமல் எதிர்காலத்திற்கும் எமது பங்களிப்புக்களை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வறுமையினை காரணம் காட்டி கல்விக்கு முடிச்சு போடவோமெனில் எமது சமூகம் 3 ஆம் தரத்திற்கு தள்ளப்பட்டுவிடும் என்று எச்சரிக்கையினையும் விடுத்தார். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 15 வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு கல்வி மற்றும் சமூக நலன் மேம்பாட்டுக்கான…

Read More

அமான் அஸ்ரப் தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் (Photo)

– அஸ்ரப் ஏ சமத் – மறைந்த தலைவா்  எம். எச்.எம் அஸ்ரபின் 15வது வருட வபாத்த தினமான நேற்று இரவு  கொழும்பு  திம்பிரிகாசாயாவில் உள்ள அமான் அஸ்ரப் இல்லத்தில்  தனது தந்தைக்காக துஆ பிராத்தனையில் ஈடுபட்டாா்.  இந் நிகழ்வின் போது அமைச்சா் றிஷாதும் கலந்து கொண்டாா்.

Read More

மாதாந்த சம்பளத்தை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கிய அமைச்சர் றிஷாத்

– எஸ்.எச்.எம்.வாஜித் – மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 16வது வருட ஞாபகார்த்த நாளான இன்று (16)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதில் 130 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசிலும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். தலைவரின் ஞாபகார்த்த நாளில் ஆரம்பித்து வைக்கபட்ட இந்த சமூக பணி தொடர்ந்தும் நடை முறைப்படுத்தப்படும் என்றும் இதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் மாதாந்த சம்பளத்தை வழங்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார். இவ்வாறான சதகத்துல்…

Read More

அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் – அமீர் அலி

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ஏற்கனவே தான் மூன்று முறை பிரதி அமைசை்சர் பதவியினை வகித்து மக்களுக்கு பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வு கொழும்பு புஞ்சி பொரள்ளயில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத்…

Read More

கட்சி சின்னத்தை வைத்து நான் அரசியல் செய்யவில்லை – அமைச்சா் றிஷாத்

– எம்.ரீ.எம்.பாரிஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்துபாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம் கடந்தவெள்ளிக்கிழமை11.09.2015 அன்று மாலை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில்இடம் பெற்றது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன்ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க வளாகத்தில் இடம் பெற்றபொதுக்கூட்டத்தில் இவ்வாறுஉரையாற்றினார். ‘இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி மக்கள் ஒரு செய்தியைசொல்லி இருக்கின்றீர்கள். கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்மாத்திரம் தான்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி கடமைகளை இன்று பெறுப்பேற்பு

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணயின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன்மையாக தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றதையடுத்து அவர் நாளை திங்கட்கிழமை தமது கடமையினை ஆரம்பிக்கவுள்ளார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த நிகழ்வு புன்சி பொரள்ளையில் அமைந்துள்ள அமைச்சில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

றிஷாத் பதியுதீன் குழுவினர் அட்டாளைச்சேனைக்கு விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர். நேற்று சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜி அவர்களின்…

Read More