ACMC News
அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஜெமீல் பதவியேற்பு
– அஸ்ரப் ஏ சமத் – அரச வா்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஜெமீல் நேற்று முன்தினம் (10)ஆம் திகதி கொழும்பு -2 நவம் மாவத்தையில் உள்ள அரச வா்த்தக கூட்டுத்தாபணத்தின் தலைவராக கடமைகளை ஏற்றுக் கொண்டாா். இந் வைபவத்தில் அமைச்சா் றிஷாத், அமைச்சா் பைசா் முஸ்தபா, பிரதியமைச்சா் அமீா் அலி, மற்றும் அமைச்சின் அதிகாரிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். இந் நிறுவனம் பற்றி பொதுமுகாமையாளா் தெரிவிக்கையில்…
தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு அ.இ.ம.கா. ஆதரவு வழங்கும்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா – சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீன் பேசி வந்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும்,முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடத்தில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பல முறை பேசி யுள்ளார். புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடத்திலும் இந்த கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன்,சந்தேகத்தின் பேரில் குற்றங்கள் பதியப்படாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை…
றிஷாத் கொஞ்சம் தாமதித்து செல்லுங்கள்! மைத்திரியின் இரண்டாவது சந்திப்பு!!
– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அதன் தற்போதைய நிலை தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிக்கும் அமைச்சர் றிஷாதுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஒக்டோபர் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, வடமாகாண முஸ்லிம்களின் விடயத்தில், அரசு மாற்றான்தாய் மனப்பாங்கோடு செயற்படுவதாக கடும் தொணியில் ஆக்ரோசமாக றிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டியிருந்தார். இதன் பிற்பாடு ஜனாதிபதி மைத்திரியின் விசேட வேண்டுகோளுக்கு அமைய றிஷாத் பதியுதீனுடனான நேற்றைய சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நேற்று பிற்பகல்…
காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
– பி.எம்.எம்.ஏ.காதர் – கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்துள்ளனர் இது விடயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண மக்களை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் வனவளத்துறை அமைச்சர் யவிக்ரம பெரேராவிடம் எழுத்து மூலமான…
முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக றிஷாத்: ஜனாதிபதி மைத்திரியுடன் நாளை சந்திப்பு
– ஏ.எச்.எம்.பூமுதீன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. கடந்த புதன் கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் அசமந்தமான போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக கண்டித்து…
சோபித தேரர் மறைவு: அமைச்சர் றிஷாத் இரங்கல்
இலங்கையின் அரசியலில் மாற்றமொன்று ஏற்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் அந்தஸ்த்தையும், பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த சோபித தேரரின் இறப்பு, இலங்கையில் தற்போதைய சூழலில் ஈடுசெய்யப்பட முடியாததொன்று என்று அகில .இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மாதுலுவாவ சோபித்த தேரரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது – ஜனவரி 8 ஆம்…
றிஷாத் பதியுதீனுக்கு, ஜனாதிபதி அழைப்பு.
வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி அழைப்பு. 11 ஆம் திகதி புதன்கிழமை இக் கூட்டம் இடம் பெறுகின்றது. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியும்,பிரதமரும்,மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடும் தொனியில் பேசியதையடுத்து இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வியினை உருவாக்குவது எமது கடமை
எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க நாம் அரசியல் என்னும் ஆயுதத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியினை உருவாக்குவது எமது அனைவரினதும் கடமையாகும் என்றும் கூறினார. புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (6) மாலை பாபடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. பாடசாலை அதிபர் மாஹிரா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்…
அம்பாறை மாவட்டத்தில் உற்பத்தியாக்கும் தொழிற்சாலை
– அஸ்ரப் ஏ சமத் – சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப் பாவித்து உரம் உற்பத்தியாக்கும் தொழில் சாலை அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளது. குறிப்பாக கரை யோரப் பகுதிகளில் இன்று வரை தீர்த்து வைக்க முடியாத ஒரு பெரும் பிரச்சினையாக விருந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருள்கள் அகற்றுதல் , இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சீனாவின்…
அதிகாரிகளுக்கான முறைப்பாட்டு பெட்டி வைக்கப்படும்-அமைச்சர் றிஷாத் அறிவிப்பு
– அபூ அஸ்ஜத் – ஏனைய நாட்டு அரசங்க நிறுவனங்களை போன்று எமது நாட்டில் செயன் திறன்மிக்க ஊழியர்கள் உருவாகின்ற போது இலாபம் ஈட்டு நிறுவனங்கள் நஷ்டத்தினை நோக்கி நகராது என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அதிகாரிகள் தமது பிரச்சினைகளையும்,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் வகையில் தமது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் முறைப்பாட்டு பெட்டியொன்றினை ஏற்படுத்தவுள்ளதாகவும் கூறினார். அரசாங்க வணிக கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒரு தொகுதியினரை நிரந்தர சேவையில் இனைத்து கொள்ளும்…
றிஷாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்
– ஏ.எச்.எம்.பூமுதீன் – அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்சேனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் , எதிர்பார்ப்புக்கு கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவியை வழங்கி மு.கா அம்மக்களை ஏமாற்றி விட்டது. பொதுத்தேர்தலின்போது நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கெல்லாம் சென்ற ரவூப் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டி அம்மக்களின் வாக்குகளை சூரையாட பெரும் கைங்கரியங்களை எல்லாம்…
யாழ்.முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள் – அமைச்சர் றிஷாத்
யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யபட்ட முஸ்லிம்கள், தமது தாயகமான அப்பிரதேசத்தில் மீள்குடியேற ஆவலுடன் காத்திருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- “யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள். இருந்தபோதும் அங்கு காணிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. 1990 ஆம் ஆண்டு ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று 2 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். இந்த 25 வருட அகதி வாழ்க்கையானது குடும்ப அங்கத்தவர்களை அதிகரிக்கச் செய்துள்ளது. “இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற…
