ACMC News
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே அமையும் – அமைச்சர் றிஷாத்
மக்கள் எதிர்பார்க்கும் நன்மைகளை வழங்கக் கூடிய புதிய அரசாங்கமொன்றை ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சி அமைக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சரும், வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா சாளம்பைக்குளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி 8ஆம் திகதி பெறப்பட்ட வெற்றியும் அதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நன்மைகளையும் வழங்கக் கூடிய புதிய…
ஹக்கீம் என்னை அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாகும் -.இஸ்மாயில்
வீசி இஸ்மாயில் தேர்தலில் வெற்றி பெற்றால் எனது கதை அறுப்பேன் அவரை பாராளுமன்ற கதிரையில் அமர விட்மாட்டேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அச்சுறுத்தியிருப்பது என்னை கொல்வதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என எனது ஆதரவாளர்கள் அச்சமடைந்துள்ளனர் நானும் அச்சமடைந்துள்ளேன் என தென்கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்தார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை…
கல்முனைக்குடியில் YLS ஹமீட் ஆற்றிய உரை
கூனிக்குருகி வீடுகளுக்குள் முடங்குகின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவமாக இல்லாமல் எமது கட்சி மூலம் கிடைக்கின்ற தேசியப்பட்டியல் கிடைக்கின்ற இந்த கல்முனை பிரதிநிதித்துவம் இன்ஷா அல்லாஹ் மறைந்த தலைவரின் பிறகு மீண்டும் முஸ்லிம்கள் சார்பில் பாராளுமன்றில் முழங்க இருக்கின்ற ஒரு பிரதிநிதித்துவமாக இருக்கும் என்ற வாக்குறுதியை வழங்குகின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கல்முனைக்குடி பிரதான வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர்…
ACMCயின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று மாலை (13-08-2015)சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல்; தலைமையில் நடைபெற்ற இந்த இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடலில் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்அமீர் அலி. முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் சீ.எம்.முபீத் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளீட்ட பெரும் தொகையான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
SLMC உறுப்பினர் ACMCயில் இணைவு
முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆலங்குளம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பி.ரி.கரீம் தனது ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸனி; திகாமடுல்ல மாவட்ட மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய சிராஸ் மீராசாஹிபுடன் இணைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறக்காமம் அமைப்பாளர் எ.பி.முனாஸின் ஏற்பாட்டில் மேற்படி இணைவு நடைபெற்றது
மயிலின் வெற்றி இரட்டிப்பானது ஹக்கீமின் காதறுப்பு விழா இன்று
– ஏ.எச்.எம்.பூமுதீன் – மருதமுனை – மயில் வேட்பாளர் வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி முகா வினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர் குழுவினரால் முகா வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்திற்க்கு…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம்
– அப்துல் அஸீஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதிக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம், இன்று வியாழக்கிழமை மாலை 5.00மணிக்கு கல்முனை கடற்கரை வீதியில் இடம்பெறவுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் 7ஆம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் எம்.எ.கலீல்லூர் ரஹுமானின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இப்பிரச்சாரக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி , கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட்…
அ.இ.ம.கா. இளைஞர் அணி ஒன்று கூடல்
– எம்.வை.அமீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் எதிர்வரும் 13.08.2015 பிற்பகல் 2.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரசன்னத்துடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து இளைஞர் அணி உறுப்பினர்களையும் இவ் அணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்;ள இளைஞர்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்களை 0771896767 ஃ0754366738 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்….
மு.கா வினரால் பொய் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகிறது
– எஸ்.அஷ்ரப்கான் – மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் பயணத்தில் தொடங்கிய எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் பலம் மிக்கவர்களாக மாறவேண்டு மென்றால் எமது வாக்குப் பலத்தை காட்டுவதற்காக எல்லோரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். ஏனெனில் மறைந்த தலைமையின் அடியோட்டிய தலைமை அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே என்பது மக்களுக்கு இன்று விளங்கிவிட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் முஹம்மட் லத்தீப் தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்…
யானை மீது ஏறிக்கொண்டு மரத்தைக் காப்பாத்துமாறு கூறுகின்றனர் – சிராஸ்
– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்போது சாய்ந்தமருது பிரதேச மக்கள் பெரும் ஆதரவுடன் அன்பாக வரவேற்று ஆசீர்வதித்தனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் கருத்துத்தெரிவிக்கையில் பதினைந்து வருடங்கள் அரசியல் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் வைத்திருந்தபோதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இருக்கவில்லை. எதனையும் செய்யாத இவர்கள்…
பொத்துவில் மன்னுக்கு கிடைக்கின்ற வெற்றியில்தான் எதிர்காலமே இருக்கின்றது – SSP மஜீத்
மஜீத் அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பொத்துவில் பாக்கியவத்தையில் நேற்று (10) இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தின் போது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் எஸ்.எஸ்.பீயுமான எம். அப்துல் மஜீத் உரையாற்றுகையில்…. பொத்துவில் மக்களாகிய எங்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இலகுவாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது இச்சந்தர்பத்தை தவர விடாமல் நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்து இந்த ஊர் மன்னை காப்பாற்றுங்கள்….
உணர்ச்சிகரமாக பேசி வாக்குகளை சேகரிக்க முயல்கின்றனர் – அமைச்சர் றிஷாத்
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து சகல சமூகங்களின் தேவைகளை பெற்றக்கொடுக்கும் பணியினை முன்னெடுத்துவந்துள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீன் இதனை தொடர்ந்து முன்னெடுக்க முல்லைத்தீவிலிருந்தும் ஆளும் கட்சிக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் ஒன்றை பெற்றுத்தர வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். நேற்று இரவு முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில்…
