Headlines

வெள்ளைவேன் கலாசாரத்தை கொண்டு வந்த கோத்தா மஹிந்தவுக்கு மீண்டும் அதிகாரமா!!!

வெள்ளைவேன் கலாசாரத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை பயங்கரமான சூழ்நிலைக்குள் தள்ளிய கோத்தாபாய,மஹிந்த ராஜபக்சக்களுக்கு மீண்டும் அரசியல் அதிகாரம் தேவையா? என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். திருகோணமலை பகுதியில் இன்று (03) ஞாயிற்றுக் கிழமை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெற்ற பல்வேறு மக்கள் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றுகையில் முப்பது வருட கால யுத்தத்தின் பின் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம்…

Read More

சிறுபான்மையினரின் வாக்குப்பலத்தை செல்லாக்காசாக்க இனவாதிகள் முயற்சி – புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாத்

இனவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரே ஆனால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமனா ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் (04) அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரையாற்றினார். சிறுபான்மையினரில் அதி பெரும்பான்மையானோர் சஜித் பிரேம்தாஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். எனினும், தேர்தலில் பெரமுன வேட்பாளர்…

Read More

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க சஜித்தே சரியான தெரிவு. முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்!

இனவாதிகள் கூட்டுச்  சேர்ந்துள்ள அணியை ஜனாதிபதித்  தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கோரிக்கைவிடுத்தார். சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இன்று காலை (04) முல்லைத்தீவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.அவர் கூறியதாவது, சிறுபான்மை மக்களை “வந்தான் வரத்தான்” எனக்  கருதும் இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் நாம் ஒன்றுபட்டு பாடம்புகட்டுவோம். நமது சமூகம் தன்மானத்துடனும், தலைகுனிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம். கடந்த ஒரு தசாப்தகாலமாக…

Read More

சமூகத்தின் மீது கொண்ட அதீத அக்கறையினாலேயே சஜித்துக்கு ஆதரவளிக்கின்றோம். கிண்ணியாவில் அமைச்சர் றிஷாட்.

முஸ்லிம் தலைமைகள் கொள்கை வேறுபாடு மற்றும் கருத்தியல் ரீதியான இடைவெளிகளை கொண்டுள்ள போதும் சமூகத்தின் பாதுகாப்பையும் எதிர்கால இருப்பையும் கருத்தில்கொண்டே ஓரணியில் செயற்பட்டு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து இடம்பெற்ற பொது கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை எப்படியாவது கபளீகரம் செய்யவேண்டுமென்று…

Read More

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் முற்போக்கு கூட்டணி,முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து…

Read More

அகதி வாழ்வில் 29 வருடங்கள் ; மீள்குடியேற்றம் நிறைவேற்றமடைய பிரார்த்திக்கின்றேன்:  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 

வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து, இழந்து போன நமது சமூகத்தின் உரிமைகளை  பெற்றுக்கொடுப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தன்னை முழுமையாக தொடர்ந்தும் அர்ப்பணிக்குமென  அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். வடபுல அகதிகள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (31) 29 வருடங்கள் நிறைவடையும் நிலையில், இன்னும் சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வரும் மக்கள் துரிதகதியில் மீள்குடியேறவும், மீள்குடியமர்ந்து இன்னும் அடிப்படை வசதிகள் நிறைவுபெறாத வகையில்…

Read More

சிறுபான்மையினரின் வாக்குகளை சின்னாபின்னமாக்க சதி’ ஏமாந்துவிட வேண்டாமென வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,…

Read More

“ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம்”. பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

நாட்டில் நிலையான ஸ்திரமான ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவிற்கே வாக்களிப்போம் கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலின் போது எவ்வாறு மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தோமோ அது போல் கோட்டாவையும் இம் முறை நிராகரிப்போம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (29) இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது புதிய ஜனநாயக முன்னனணியின் ஜனாதிபதி வேட்பாபர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து உரையாற்றிய கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்…

Read More

“சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்”. “ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து”.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஜனாதிபதி தேர்தல் அவதானிப்பு பணிகளில் கண்காணிப்பாளர்களாக ஈடுபட வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆய்வாளர் மாரு பொலாண்ட் தலைமையிலான…

Read More

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாச கிண்ணியாவுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயக முன்னணியின் மூதூர் தொகுதிக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் தலைமையில் நாளை (30) புதன் கிழமை மாலை 2.00 மணிக்கு கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே சஜீத் பிரேமதாச விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெறவுள்ள இம் மாபெரும் பொதுக்கூட்டத்தில்…

Read More

கிண்ணியா உப்பாறு பகுதியில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (24) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது சுமார் 230 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழக கல்லூரி பிரதியமைச்சரின் நீண்ட கால முயற்சியின் பலனாக தற்போது இது நிறைவேறியுள்ளது….

Read More

மூகத்திற்கு பிரச்சினை ஏற்பட்ட போது எட்டியும் பார்க்காதவர்கள் , இனவாதிகளை பலப்படுத்த வீடு வீடாக வீடு வீடாக வாக்கு கேட்டு அலைகின்றார்கள் – கிண்ணியா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும் இன்னல்களும் ஏற்பட்ட போது அவர்களை எட்டியும் பார்க்காதவர்களும் நாசகார சம்பவங்கள் நடைபெற்ற குறிப்பிட்ட  இடங்களுக்கு என்றுமே செல்லாதவர்களும் இன்று மொட்டுக்கட்சியின் ஏஜெண்டுகளாக அலைந்து மக்களிடம் வாக்கு கேட்பதாக அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் தலைவரும்,  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் நேற்று (24) சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறுபாடு செய்ய பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, சமூகத்தைப் பற்றி இதுவரை காலமும் எந்த விதமான…

Read More