ACMC News
சிறுபான்மையினருக்கு ஜனாதிபதி தேர்தல் ஒரு பலப்பரீட்சை வாக்குகளை சரியாக பயன்படுத்துங்கள் என்கிறார் அமைச்சர் றிஷாட்!
எமது சிறுபான்மை சமூகம் இந்த தேர்தலை தமது வாழ்வின் உயிர் மூச்சாக கருத வேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் நமது வாக்குகளை சமூகத்தினை பாதுகாக்கும் ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் செவ்வாய்க்கிழமை இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி தலைமையில் இடம்…
முரண்பட்ட பாதையில் செல்வோரும் சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டும் நுரைச்சோலையில் அமைச்சர் றிஷாட் அழைப்பு..
சிறுபான்மை சமூகத்தின் பெரும்பாலானோர் ஒன்று பட்டு, ஓரணியில் இருக்கும்போது,நம்மில் சிலர் எதிரணியில் பயணிக்காமல் சமூகத்தை முன்னிறுத்தி, எதிர்கால விமோசனத்திற்காக சஜித்தை ஆதரிக்க முன்வரவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் புத்தளம் நுரைச்சோலையில் நேற்று மாலை (12) இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.. மக்கள் காங்கிரசின் நுரைச்சோலை அமைப்பாளர் ஹஸீப் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளில் 90சதவீதமானவை…
கோட்டா ஒருபோதுமே வெல்லமாட்டார் அக்குரணையில் அமைச்சர் றிஷாட்.
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டா ஒருபோதுமே வெல்லமாட்டார் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அக்குரணையில் இன்று (12) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார். கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் ஹலீம் ஆகியோரும் உரையாற்றினர். அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது, இனவாத,மதவாத கொள்கையோடு நாட்டை ஆளத்துடிக்கும் வேட்பாளர் ஒருவருக்கு பெரும்பான்மை இன…
முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்பது எமது தார்மீக கடமை நிந்தவூரில் அமைச்சர் றிசாட்!!!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான பைசால் காசிம் தலைமையில் சனிக்கிழமை (9) மாலை நிந்தவூரில்…
தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமையை நிலைப்படுத்த சஜித்தை வெல்லச் செய்வோம் கல்குடா கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்
சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழும் சூழலை உறுதிப்படுத்த முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித்தை ஆதரித்து ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றபிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ரோஹித்த போகொல்லாகம, மற்றும் முன்னாள்…
மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்!!!
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை (08) மன்னார் ஆயர் இல்லம்,திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியவற்றுக்கு விஜயம் மேற்கொண்டார். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் அமைந்தது. ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து பேசினார்.சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.சஜித் பிரேமதாசவுக்கு மன்னார் ஆயர்,ஆசி வழங்கினார். இதன் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு…
சஜித்தை வெல்லச் செய்வதன் மூலமே அடக்குமுறையை தகர்த்தெறியமுடியும். அக்கரைப் பற்றில் றிஷாட் !!!
சிறுபான்மைச் சமூகத்தினை அடக்கி, அதன் பொருளாதாரத்தினை ஒடுக்கி, நமது சமூகத்தின் குரலை நசுக்கி, எம்மை அடிமைப்படுத்துவதற்காக சில தீய சக்திகள் பாடுபட்டு வருகின்றன. இச்செயற்பாட்டினை முறியடித்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை வெற்றி பெறச் செய்வதன் மூலம் எமது சிறுபான்மைச் சமூகத்திற்கு விடிவு கிட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு….
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து விளாவெட்டுவானில் காரியாலயம் திறப்பு விழா கஜேந்திரன் தலைமையில் (06.11.2019) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் , ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மூர்த்தியும் கலந்து கொண்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் தலைமையில் இன்று (06) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கெளரவ அதிதிகளாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பிரதியமைச்சர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், அனோமா கமகே,…
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச மகளிர் மாநாடு..
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்வெற்றிக்கான மகளிர் மாநாடு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றது. குறித்த மகளிர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாநகர சபை முதல்வருமான ரோஸி சேனநாயக்க, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் பாரியார், மற்றும் கல்வி…
பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது, ஏப்ரல் சம்பவத்தின் பின் விமர்சனம் செய்தவர்கள்.இன்று அம்மக்களிடம் வாக்கு கேட்பது வேடிக்கையானது. அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
இலங்கையில் எந்தவொரு காலத்திலும் பிரிவினைவாத்தை விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் மீது,கடந்த ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின் கடுமையான சித்திரவதைகளை செய்தவர்கள்.இன்று இம்மக்களிடத்தில் வந்து வாக்கு கேட்பது வேடிக்கையானதாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன தெரிவித்தார். கொழும்பு மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சஜித் ஆதரவு கூட்டம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்,கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான முஹம்மத் பாயிஸ் தலைமையில் செவ்வாய்க்கிழ வெல்லம்பிட்டியில் இடம்…
இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு!!!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து நாவற்குடா பாஸ்டர் லோகநாதன் அவர்களின் இணைப்பாளர் சதீஸ் தலைமையில் இன்று 06.11.2019 இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஜெளபர் ஹான், ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் றமனி, விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
