Headlines

“சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது”- எருக்கலம்பிட்டியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருப்பதால், பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழுந்து, வாக்குகளை நாசமாக்கி விட வேண்டாமென மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். மன்னார், எருக்கலம்பிட்டியில் நேற்று மாலை (18) இடம்பெற்ற தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “சிறுபான்மைத் தலைமைகளை பாதுகாக்கும் தேவை இப்போதைய காலகட்டத்தில் இருக்கின்றது. அடுத்த பாராளுமன்றுக்கு பேசாமடந்தைகளும் பொம்மைகளுமே…

Read More

“சரணாகதி அரசியலுக்கு அடிபணியோம்” – வஃபா பாறுக்!

கொழும்பில் வர்த்தக சங்கமொன்றுக்கு தலைவராகுவதும், சிறந்த வர்த்தகருக்கான ஜனாதிபதி விருதை பெறுவதும் அவ்வளவு இலேசான விடையங்களல்ல. அரச நிறுவனங்களுடன் இருக்கும் வர்த்தக ரீதியான தொடர்பு சாதாரணமானது. தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன், அரசின் உச்ச அதிகாரங்களை அணுகுவார்கள். அவர்கள் அமைச்சர்களாகவும், அமைச்சின் செயலாளர்களாகவும், அதைவிட அதிகாரம் கூடியோராகவும் இருக்கலாம். தனியார் வர்த்தகத்தை மேம்படுத்துமுகமாக, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் அமைச்சர்கள், செயலாளர்கள் உதவுவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நாம் உதவி செய்வோர், எந்தக் நிமிடம் தற்கொலை…

Read More

எமது மக்கள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியதற்கு பதிலாக. இன்று அவர்கள் எம்மை தாக்குகின்றனர்”- வேட்பாளர் அலி சப்ரி!

புத்தளம் மாவட்ட, சிறுபான்மை சமூகம் இழந்துள்ள பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக, தராசுச் சின்னத்தில் கூட்டணியாக நாங்கள் போட்டியிடுவதாக தெரிவித்த வேட்பாளர் அலி சப்ரி ரஹீம், கடந்த காலங்களில் எமது மக்கள் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பாராளுமன்றம் அனுப்பியதற்கு பதிலாக இன்று எம்மை அவர்கள் தாக்குகின்றனர் என்றும் கூறினார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசுக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் அலி சப்ரியை ஆதரித்து, புத்தளம், நுஹ்மான் மண்டபத்தில் நேற்று மாலை (17 ) இடம்பெற்ற இளைஞர்…

Read More

சில்லறை சலுகைகளுக்கு சிறுபான்மை சமூகம் சோரம் போகாது..!

நமது மண் மனம் திறக்கிறது…   எதிர்வரும் தேர்தல் எதிர்பார்ப்புக்களை வெல்வதற்காக எமக்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சலுகைகளுக்கு சோரம் போகாத சமூகமான தமிழர்களை சில்லறை விலைகளுக்கு வாங்கிட, எமது மண்ணில் சிலர் களமிறங்கியுள்ளனர். காட்டிக்கொடுக்கப்பட்டதால் நாமடைந்த நெருக்குவாரங்களிலிருந்து இன்னும் முழுமையாக எமது மண் மீளவில்லை. இவ்வாறு எம்மை நெருக்கும், நெருடும் அதிகார சக்திகளை இன்னும் பலப்படுத்தவே, இந்தச் சிலர் எமது மண்ணில் ஊடுருவியுள்ளனர்.   நமது பலவீனங்களைப் பலப்படுத்தி தமிழர், முஸ்லிம்கள்…

Read More

‘முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனவாத அச்சுறுத்தலை போக்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – திகாமடுல்ல வேட்பாளர் ஜவாத்!

ஜனாதிபதி, இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் பொதுத் தலைவராக இருந்தால், ஏன் இந்த நாட்டில் தலைதூக்கியிருக்கின்ற இனவாதத்தை ஒழிக்க முன்வரக்கூடாது? என்ற கேள்வியை முன்வைப்பதுடன், இவ்விடயம் தொடர்பில் பேசுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் தரவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்)வேண்டுகோள் விடுத்துள்ளார். மருதமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே. அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது, “இந்த…

Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்..!

கைதுக்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், நேற்று (16) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோரூடாக இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள…

Read More

இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு, நேற்று மாலை (16) ஓட்டமாவடியில் இடம்பெற்றது. அமைப்பாளர் ஜெளபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி கலந்துகொண்டு Tshirt களை வழங்கிவைத்து உரையாற்றினார். பெருந்திரளான இளைஞர் பட்டாளம் ஒன்றுகூடிய குறித்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஆசிரியர், நெளபர், சட்டத்தரணி ராசிக், வட்டாரக் குழு…

Read More

மூதூர் தொகுதிக்கான பிரதான தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூபினால், மூதூர் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் நேற்று (16) திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, மு.கா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால ஆதரவாளர்கள் சிலர், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் வெற்றியின் பங்காளர்களாக, அவரின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக கட்சியில் இணைந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் விசேட கூட்டத்தில், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் மாகாண…

Read More

கற்பிட்டியில் இன்று என்ன நடந்தது..? – வேட்பாளர் ஆப்தீன் எஹியா விளக்கம்!

புத்தளத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கௌரவமாக பெற்றுக்கொடுக்க, என்ன சவால்கள் வந்தாலும் அதற்கு எதிராக வீதியில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக தராசுக் கூட்டணி வேட்பாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி பிராந்திய அமைப்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். கற்பிட்டியில் இன்று பிற்பகல் (16) தராசுக் கூட்டணி வேட்பாளர் ஆப்தீன் எஹியா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில், முகநூல் ஊடாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இதுதொடர்பில் விளக்கமளித்த அவர்…

Read More

சேதாரம் இல்லாத மாற்றத்துக்கு கை கோர்ப்போம்..!

திகாமடுல்ல மாவட்டத்தில் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையால் தவிர்க்க முடியாத ஒரு ஆபத்து எப்போதுமே இருக்கும். மாவட்டத்தின் பல்லின மக்கள் விகிதாசாரத்துக்கு சமனான பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்வதில் சங்கடங்களுண்டு. 1989ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் இந்த சவாலை எதிர்கொள்ளவே, வாக்குகளை ஓரணியில் திரட்ட மர்ஹூம் அஷ்ரஃப் முயற்சி செய்தார்.  மர்ஹூம்களான A.R.மன்சூர், B.A.மஜீத் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல் தலைமைகள், போட்டியிடாமல் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்று வியூகம் வகுத்தார். என்றாலும், அந்த வியூகத்தையும் மீறி, தேர்தல் முடிவு எதிர்பார்ப்புக்கு மாற்றமாக வெளியானது….

Read More

‘கல்முனை பிரச்சினை; தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல’ – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

“கல்முனை பிரச்சினை என்பது தீர்க்கப்பட முடியாத ஒன்றல்ல. தமிழ் தரப்பு மக்கள், அரசியல்வாதிகளுக்கும் இதன் உண்மை நிலையை உணர்த்துவதற்கு அதிகாரத்திலிருந்தவர்கள் முயற்சிக்கவில்லை. அதனால்தான் தேர்தல்கால பிரச்சாரத்திற்காக இதனை எல்லோரும் பயன்படுத்துகின்றார்கள்” என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டமுதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். கல்முனையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் பங்கேற்று உரையாற்றிய வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறியதாவது, “கல்முனை விடயத்தில் பூரணமாக அறிவில்லாத போது, அதுசார்ந்த வரலாறு தெரிந்தவர்களுடன் கலந்தாலோசித்து, ஆகக்குறைந்த அறிவுடனாவது குறித்த விடயத்தில், அதிகாரத்தில் இருந்த…

Read More

அட்டாளைச்சேனை; உங்கள் வாக்கு அம்பாறை மாவட்டத்துக்கு வரமாக அமையுமா அல்லது சாபமாக அமையுமா..?

எமது வாக்குகள் மிகப் பெறுமதியானவை. எமது வாக்குகளை நாம் சரியான முறையில் பயன்படுத்த தவறினால், மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடும். இத்தனை நாளும் எப்படி வாக்களித்தோம் என்பது பற்றி சிந்தித்து பயனில்லை. இனி யாருக்கு வாக்களிக்க போகிறோம் என்பது சிந்தித்தேயாக வேண்டும். எமது சமூகம் மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் உள்ளது. அட்டாளைச்சேனையில் மு.காவில் நஸீரும், தே.காவில் பழீல் பீ.ஏயும், அ.இ.ம.காவின் சட்டக் கலாநிதி கபூரும் போட்டியிடுகிறார்கள். நான் அட்டாளைச்சேனை வேட்பாளர்களை இங்கே விழித்துள்ள முறையே,…

Read More