Headlines

“மீரா விளையாட்டுக் கழக” அங்குரார்ப்பண நிகழ்வும், சீருடை அறிமுகமும்!

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, மீராவோடை பகுதியில் இயங்கி வரும் ‘மீரா விளையாட்டுக் கழக’ அங்குரார்ப்பண நிகழ்வும், கழக சீருடை அறிமுகமும், மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் (9) இடம்பெற்றது. கழகத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கழக சீருடை, கழக சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். அத்துடன்,…

Read More

“தமிழ் சமூகம் அனுபவிக்கும் அவலங்கள் முஸ்லிம் சமூகத்துக்கும் நேர்ந்துவிடக் கூடாது” – வன்னி மாவட்ட வேட்பாளர் பகீரதன்!

தமிழ்ச் சமூகம் தலைமையை இழந்து, தவிப்பதைப் போன்று சகோதர முஸ்லிம் சமூகமும் வேதனை படக்கூடாதென்று, வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் த.பகீரதன் தெரிவித்தார். “முஸ்லிம்களாகிய நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். ஒற்றுமையாக பயணியுங்கள். வெவ்வேறு கட்சிகளுக்கு முண்டுகொடுப்பதையும், அரசுக்கு முட்டுக்கொடுப்பதையும் தயவுசெய்து கைவிடுங்கள். சிறிய சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்திக்கொண்டு, மாற்றுக் கட்சிகளுடன் இணைந்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அரசியல் செய்வதை கைவிடுங்கள். அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில், சிறுபான்மை சமூகங்கள் தங்கள் இருப்புக்களை…

Read More

“திகாமடுல்ல வாக்காளப் பெருமக்களே..!” – ஹனீபா மதனியின் மடல்!

உங்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்..! சமூக சேவைகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்த நான், அரசியலுக்குள் நுழைந்து இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில், 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன். இவ்வேளை, இறைவன் எனக்கு சமூக சேவைகளில் ஏற்படுத்தித் தந்த பொன்னான சில சந்தர்ப்பங்களை நினைவு மீட்டிப் பார்க்கிறேன். விடுதலை புலிகளினால் மூதூர் மக்கள் அகதியாக்கப்பட்ட போது, கிழக்கிலங்கை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவராக…

Read More

“நாங்கள் இனவாதிகளோ, பிரதேசவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்லர்; உரிமைகளுக்காகவே ஒன்றுபட்டுள்ளோம்” – வேட்பாளர் ஆப்தீன் எஹியா!

நாங்கள் இனவாதிகளோ,  பிரதேசவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்லர். எம்மிடமிருந்து அதிகாரத்தால்  பறித்தெடுக்கப்பட்ட, நாம் இழந்த எமது உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமைப்பட்டவர்களே என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசுக் கூட்டணியில், இலக்கம் 7 இல் போட்டியிடும் வேட்பாளர் ஆப்தீன் எஹியாவை ஆதரித்து, முதலைப்பாளியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய வேட்பாளர் ஆப்தீன் எஹியா, “30 வருடங்களாக நாம் பெரும்பான்மை…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைமையின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும்” –  முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவதன் மூலம், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுக்க முடியும் என மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரான அப்துல்லாஹ் மஹ்ரூப், நேற்று முன்தினம் (09) கந்தளாயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், எமது உரிமைகளைப் பாதுகாத்து,  வென்றெடுக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமனறம் அனுப்ப…

Read More

“மொட்டுக்குக் கிடைக்கும் பெரும்பான்மை, சிறுபான்மை சமூகத்தின் இருப்பை இல்லாதொழிக்கும்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமாக இருந்தால், சிறுபான்மை சமூகத்தினுடைய இருப்பை இல்லாமல் செய்து விடும் என்று அச்சப்படுகின்றோம் என மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட, முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரித்து, வாழைச்சேனை, கோழிக் கடை வீதியில் (06) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில்…

Read More

“தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இனச் சச்சரவுக்கு வழிகோலக் கூடாது” – மன்னார், அடம்பனில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், மன்னார் – மாந்தை மேற்கு, அடம்பனில், இன்று (10) இடம்பெற்ற கட்சியின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னரான, ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தொல்பொருள்…

Read More

‘பயங்கரவாதத்தின் எந்தச் செயற்பாடுகளுடனும் எமக்கு தொடர்பில்லை’ – 10 மணிநேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஊடகவியலாளரிடம் எடுத்துரைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று காலை (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவித்ததாவது, “நேற்றுக் காலை (08) மன்னாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது….

Read More

கண்டி, பாத்ததும்பரை பிரதேச சபை உறுப்பினராக அஸ்மி ஹசீம் நியமனம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், கண்டி மாவட்ட பாத்ததும்பரை பிரதேச சபையின் உறுப்பினராக நியமனம் பெற்ற அஸ்மி ஹசீம் , இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார். சமாதான நீதவான் அல்ஹாஜ் சஹீத் ரிஸ்மி ( YMMA பேரவையின் பதில்  தேசிய தலைவர்) முன்னிலையில் அவர் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார். பாத்ததும்பரை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.இர்சாத், கட்சித் தலைமையுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் பிரகாரம், தனது பதவியை இரு வருடங்களில்  இராஜினாமா …

Read More

வேட்பாளர் பகீரதனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு!

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் இலக்கம் 2 இல் போட்டியிடும் வேட்பாளர் பகீரதனின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், மக்கள் சந்திப்பும் நேற்று மாலை (08) இடம்பெற்றது. மன்னார், வெள்ளாங்குளத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்று உரையாற்றியதுடன், ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடினார்.

Read More

‘முல்லைதீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில்  மக்கள் காங்கிரஸ் மூலம் பலகோடி அபிவிருத்திகள்; துன்பங்களில் பங்கேற்காதவர்கள் வாக்குகளுக்காக அலைந்து திரிகின்றனர்’- பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன்!

“கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துச் சென்று, பாராளுமன்றத்தினை அலங்கரித்தவர்கள், இன்று மீண்டும் உங்களிடம் வந்து வாக்களிக்குமாறு கேட்கின்றனர். இவர்களிடத்தில் தாங்கள் உழைத்த சொத்துக்களின் விபரங்களைக் கேளுங்கள்” என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் 6 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் பிரதேச சபை தவிசாளருமான மஹாலிங்கம் தயானந்தன், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளுவர்புரத்தில் இடம்பெற்ற தேர்தல்…

Read More

‘சமூகத்தை அடமானம் வைத்து நானோ எனது குடும்பமோ வாழ வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை’ – பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா!

ஒரு சமூகத்தை அடமானம் வைத்துக் கொண்டு அந்த சமூகத்தை பாதாளத்தினுள் தள்ளிவிட்டு நானும் எனது குடும்பமும் வாழ வேண்டும்  என நான் ஒருபோதும் எண்ணியதில்லை.  அவ்வாறு பிழைப்பு நடத்துகின்ற துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டிய நேரமே இதுவாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்  பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான ஆப்தீன் எஹியா தெரிவித்தார். பிராந்திய மக்களுடனான விசேட சந்திப்பு நேற்று (07) நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்;ந்து…

Read More