ACMC News
“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் ஊடகவியலாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா, ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று (27) இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகளும் மதவாதிகளும், சஹ்ரானின் தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி, எப்படியாவது…
“சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது” – மூதூரில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
தற்போது சரிந்து போயுள்ள வாக்குகளை மீண்டும் தட்டி நிமிர்த்துவதற்கான திட்டமுடனேயே, முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பயங்கரவாதச் செயலுடன் தொடர்புபடுத்தி, பலிக்கடாவாக்கும் முயற்சிகளில் கடும்போக்குவாதிகள் ஈடுபட்டு வருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, நேற்று மாலை (25) மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது, “நமது சமூகத்துக்கு…
‘கட்சி, சின்னங்கள், கோஷங்களுக்காக வாக்களித்த காலம் மாறிவிட்டது; மக்கள் சேவகர்களை பாராளுமன்றுக்கு அனுப்புங்கள்’ – தோப்பூரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
கட்சிகளுக்காகவும், சின்னங்களுக்காகவும், கோஷங்களுக்காகவும் புள்ளடிகள் வழங்கிய காலம் இப்போது இல்லையெனவும், சமூக இருப்பை முன்னிறுத்தி, நிதானமாகச் சிந்தித்து வாக்குகளை வழங்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபை ஆதரித்து, தோப்பூரில் இன்று (25) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று, அவர் உரையாற்றினார். தொடர்ந்து கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் கூறியதாவது, மக்கள் காங்கிரஸின் மீது கொண்டுள்ள அபரிமிதமான…
சமூகத்தின் நிம்மதிக்கு சதா வழிகோலுவோம்!
சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வடமாகாணம் முழுவதிலும் வாழ்ந்த சுமார் ஒரு இலட்சம் முஸ்லிம்கள், வடமாகாணத்தை விட்டே விரட்டியடிக்கப்பட்டார்கள். மாற்றுவதற்கு உடை கூட எடுக்க அனுமதிக்கப்படாமல் உடுத்த உடையோடு வயோதிபத் தாய்மார்களும், தந்தைமார்களும், கர்ப்பிணித் தாய்மார்களும், கைக்குழந்தை தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் உண்ண உணவின்றி, தாகம் தீர்க்க தண்ணீர் இன்றி வீதியோரங்களில் தலைசாய்த்து, களைப்பாறி, பாதங்கள் புண்ணாக நூற்றுக்கணக்கான மைல் தூரத்தை, கொடுவெயிலிலும் கும்மிருட்டிலும் தள்ளாடி தள்ளாடி நடந்த காட்சிகள் இன்னும் எம் நெஞ்சில் இளமையோடுதான் இருக்கின்றன….
“சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பவர்களை தெரிவு செய்யுங்கள்” – முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி!
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில அரசியல்வாதிகள், தங்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே பாராளுமன்றம் செல்லத் துடிக்கிறார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். தன்னை ஆதரித்து, ஓட்டமாவடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், “வரவுள்ள பாராளுமன்றம் சுகமான பாராளுமன்றமாக இருக்கும் என்றெண்ணி, பாராளுமன்றம் செல்ல சிலர் ஆசைப்படுகின்றனர். அது சுமையான பாராளுமன்றம் என்பதை…
‘சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்’ – மன்னாரில் ஹுனைஸ் பாரூக்!
முஸ்லிம்களின் “ஜனாஸாக்களை” எரித்த போது, “ஜனஸாக்கள்” போலக் கிடந்தவர்கள், இப்போது மக்களிடம் வந்து வாக்குக் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார். நீங்கள் போடுகின்ற புள்ளடிகள்தான், மையத்துக்கள் எரிக்கப்பட வேண்டுமா அல்லது அடக்கம் செய்யப்பட வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமையவுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், உப்புக்குளத்தில் நேற்று மாலை (23) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று,…
“போராட்டங்களே என் அரசியல் வாழ்வாக மாறிவிட்டது” – மன்னார், உப்புக்குளத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!
‘போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது’ என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார், உப்புக்குளத்தில் நேற்று மாலை (23) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட்,…
பதூரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் முதன்மை வேட்பாளர் அமீர் அலிக்கு ஆதரவு!
மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலிக்கு, பதுரியா, மாஞ்சோலை, அல் இஹ்ஸான் விளையாட்டுக் கழகம் பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. கழகத் தலைவர் சாஜஹான் ஏகமனதாக இந்த அறிவிப்பை விடுத்தார். அத்துடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமது கழகம் பூரணமான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்கள் பங்கேற்று உரையாற்றியதுடன், பிரதேச சபை உறுப்பினர் நெளபர், செயலாளர்…
“சிறுபான்மை கட்சிகளின் ஒன்றிணைவால் சமூக அபிலாஷைகளை வெல்ல முடியும்”– முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான், எங்களுக்குள் ஒரு புல்லுருவி கோடாரிக் காம்பு இருந்தமை தெரியவந்தது என்றும் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு இவரே காரணம் எனவும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா, ரஹ்மானியா பகுதியில், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “விகிதாசார…
“சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பேரினவாதத்தின் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்”– வேட்பாளர் அஷ்ரப் தாஹிர்!
நமது சமூகத்தின் குரல், மக்கள் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் சமூகத்தின் குரலாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால், இந்த அரசினதும், பேரினவாதத்தினதும் நெருக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார் என மக்கள் காங்கிரஸின், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் கூறினார். நிந்தவூர், வன்னியார் வட்டாரத்தில் நடைபெற்ற. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். வேட்பாளர் அஷ்ரப் தாஹிரை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டம், பிரதேச சபை பட்டியல் வேட்பாளர் கே.எல்.றபீக்…
“சமூக இருப்புக்கான தேர்தல் இது” – சிந்தித்து வாக்களிக்குமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!
சமூகத்துக்கான தேவைகளை ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து பெறும் நிலைமையை மாற்றி, எமது காலடிக்குக் கொண்டுவரும் சமூகப் பலத்தை அதிகரிக்க ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பொதுத்தேர்தல் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, நமுவாவ கிராமத்தில் நேற்று மாலை (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்,…
“தேர்தலுக்கு முன்னர் என்னை சிறையில் அடைக்க முயற்சி” – அடக்குமுறை அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
பயங்கரவாதச் செயற்பாடுகள் எவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாத என்னை, சஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுடன் கோர்த்து, தேர்தலுக்கு முன்னர் சிறையில் அடைக்க முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும், மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, குருநாகல், பொத்துஹெரவில் இன்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது, “குருநாகல் மாவட்டத்துக்கு இன்று வருவேனா என்பது, நேற்றுமாலை…
