Headlines

“அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில், இன்று (16) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் அதுல்லாஹ் மஹ்ரூப், மேலும் கூறியதாவது, “சமூகம்சார் அரசியல் நலன்களை முன்னெடுக்கும் சிறுபான்மைத் தலைவர்களை, ராஜபக்ஷக்களின்…

Read More

“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முஸ்தீபு; சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதே இலக்கு” – ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்கான நிகழ்ச்சி நிரல்கள் தற்போது அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், அவரை இன்னும் சில தினங்களில் கைது செய்வதற்கான முயற்சிகள் மும்முரமாக இடம்பெறுவதாகவும் மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான  அமீர் அலி தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (13) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலத்திலே…

Read More

“எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது” – முதன்மை வேட்பாளர் அமீர் அலி!

எதிர்வரும் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு அரசியலில் பயணிக்க வேண்டிய தேவைப்பாடு, தற்கால அரசியலைப் பொறுத்தவரையில் இருக்கின்றது என மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், கல்குடா அமைப்பாளர் எம்.எப்.ஜௌபர் தலைமையில், இளைஞர்களுக்கான T shirt வழங்கும் நிகழ்வு மற்றும் பிரச்சாரக் கூட்டம் வாழைச்சேனையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். தொடர்ந்து…

Read More

முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் தொடர்பான மனு செப்டெம்பரில் விசாரணைக்கு!

கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதன் மூலம், அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட ஆகியோர் உள்ளடங்கிய நீதியரசர்கள்…

Read More

‘குண்டுதாரி இன்ஷாபின் கொலொசஸ் நிறுவனத்துக்கு செம்பு வழங்குமாறு எழுத்துமூல வேண்டுகோள் விடுத்தவர்களையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும்’ – மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் (IDB) குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டின் கொலொஸஸ் தனியார் நிறுவனத்துக்கு செம்பு  வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கடி விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைக்கின்றனர். ஆனால், குண்டுதாரி இன்ஷாப் அஹமதுக்கு சகாய விலையிலும் அதிகளவிலும் செம்பு  வழங்குமாறு வேண்டுகோள் கடிதம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவின் பொதுசன தொடர்பு அதிகாரி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரின் மேலதிக செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்…

Read More

கால்நூற்றாண்டுகால கஷ்டங்களுக்கு கரம் கொடுத்தவர்..!

சொந்தமண் இழப்பு… சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ்ந்த நாம் துரத்தப்பட்டோம். அதனால் சுகம் இழந்தோம். சுதந்திரம் இழந்தோம், வீடுவாசல், விளைச்சல் நிலங்களை இழந்தோம். தொழிலையும் தொழில் சார்ந்த உபகரணங்களையும் இழந்தோம். நமது உயிராக அமைந்திருந்த கல்வியையும் இழந்தோம். அகதிகளானோம், பஞ்சைகளாய், பாதசாரிகளாய் பொடிநடையில் புத்தளம் வந்தோம். அங்கே எமக்கு ஆறுதல் கிடைத்தது. அத்தனை குடும்பங்களுக்கும் வாழ்விடம் போதாது. மரநிழலில், மக்கள் இல்லாத வீடுகள், மண்டபங்கள் நமக்கான குடிமனையாகின. கால்நூற்றாண்டு காலம் நாதியற்ற வாழ்வு. துன்பங்களும் துயரங்களும் தொடர்கதையாகின….

Read More

சம்மாந்துறையின் பிரதிநிதித்துவ காப்பிற்கு மாஹிரே பொருத்தமான தெரிவு..!

சம்மாந்துறை என்பது 45 000 இற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட ஒரு பிரதேசம். இதில் 7000 தமிழ் மக்களது வாக்குகள் உள்ளன. முஸ்லிம் வாக்குகள் 38,000 உள்ளன. இத்தனை பெரும் வாக்கு வங்கியை கொண்ட சம்மாந்துறை மண் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழப்பதென்பது மிகவும் கவலையான விடயம். எமது வேட்பாளர்கள் ஒன்றும் ஏனைய ஊர் வேட்பாளர்களுக்கு எதிலும் சளைத்தவர்களுமல்ல. இம் முறை அ.இ.ம.கா குறைந்தது ஒரு ஆசனத்தையாவது பெறக் கூடிய வாய்ப்புள்ளது. அந்த ஆசனத்தை நோக்கி நாம் காய்…

Read More

புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் – தோப்பு வீழ்ந்து தோழமையானது..! – சுஐப் எம்.காசிம் –

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல் அம்பாரை மாவட்டத்தில் எட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திலிருந்துதான் இந்த இணக்க அரசியல் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை எந்தக் கட்சிகளிலிருந்தாவது இங்கு முஸ்லிம்கள் தெரிவாகச் சந்தர்ப்பம் இருந்ததால், புத்தளம் மாவட்டம் இணக்க அரசியலுக்கான மையமாகப் பார்க்கப்பட்டுள்ளதாக இம்முயற்சியை நோக்குவோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் புத்தளம் நான்காம் இடத்திலுள்ளதே, இங்கு…

Read More

“இனவாதத்தை கிளப்பி தெற்கில் படம்காட்டி வாக்குச் சேகரிக்க முற்படுகின்றனர்” – முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!

தெற்கில் படம் காட்டி இன துவேசத்தை கிளப்பி வாக்குகளை சேகரிக்க முற்படுகிறார்கள் என மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி எட்டுக்கும் குறையாத ஆசனங்களை பெறுகின்ற போது, கவனத்தை ஈர்க்கும். ஆகஸ்ட் ஆறாம் திகதிக்குப்…

Read More

“எவரையும் தோற்கடிப்பது எமது நோக்கல்ல; மக்கள் சேவையே எம் இலக்கு” – வேட்பாளர் அஷ்ரப் தாஹிர்!

“எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் கூறினார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் “நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்று முறை இருந்து,…

Read More

“பிரதம வேட்பாளர்களின் வியூகங்கள் கூட புத்தளத்தில் கேள்விக்குறியாகியுள்ளன” – வேட்பாளர் ஆப்தீன் எஹியா தெரிவிப்பு!

பிரதம வேட்பாளர்களின் வியூகங்கள் கூட புத்தளம் தொகுதியில் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் தராசுக் கூட்டணி சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெறும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஒன்றுக்கான முயற்ச்சி இரட்டிப்பாக மாறலாம் எனவும் பாராளுமன்ற வேட்பாளர் ஆப்தீன் எஹியா நம்பிக்கை தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், தராசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பொதுவான காரியாலயம் (09) புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் மாகாண…

Read More

“பொய் வாக்குறுதிகளை கூறி வாக்குக் கேட்பவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும்” – முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ்.ஹமீட்!

தேர்தலுக்காக பொய் மூட்டைகளுடனும் பண மூட்டைகளுடனும் வருகின்றவர்களை புறக்கணித்து, தகுதியானவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் எனவும், பொய் வாக்குறுதிகளை கூறி வாக்குக் கேட்பவர்களுக்கு இம்முறை தகுந்த பதிலடி கிடைக்கும் என்றும் முதன்மை வேட்பாளர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். அம்பாறை, மாளிகைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் மேலும் கூறியதாவது, “நீங்கள் என்ன சேவையை செய்தீர்கள். இப்போது வாக்கு கேட்டு வருகிறீர்கள்? என்று சிலர்…

Read More