Headlines

ad34@hFacMC

அமெரிக்காவின் போரில் 81 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் பலி

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா-பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் மறைந்திருக்கும் போராளிகளை அமெரிக்க ராணுவம் மற்றும் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தி வருகிறது.இந்த தாக்குதல்களில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் தலைமையில் பாகிஸ்தானில் போர் நடைபெற்று வருகிறது. இதில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை அணு ஆயுத போருக்கு எதிரான நோபல் பரிசு பெற்ற…

Read More

பஸ் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவா் உயிரிழப்பு

– க.கிஷாந்தன் – கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் அட்டனிலிருந்து வட்டவளை ரொசல்ல பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வூட்லேண்ட் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா்….

Read More

Top 10 சாதாரண தர சிறந்த பெறுபேறு பெற்றவர்கள் இவர்களால்தான்.. (இம்முறை மாணவன் முதலிடம்)

வெளியாகியுள்ள 2014ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கொழும்பு, நாலந்த கல்லூரியைச் சேர்ந்த எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம், முதல் 10 இடங்களை பெற்றுகொண்ட மாணவர்களின் விவரங்கள்: 1. எல். தரிந்து நிர்மால் விக்கிரமசிங்ஹ – நாலந்த வித்தியாலயம், கொழும்பு 2. டப்ளியு. ஏ. சந்துனி நவன்ஜனா – ஹொலி க்றோஸ் கல்லூரி, கம்பஹா 3….

Read More

இன்று ஆரம்பித்து வைக்கபட்ட இலவச wi-fi இண்டர்நெட்டின் வேக விபரம்

இலவச wi-fi சேவை கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பொது இடங்களில் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிக்கு இணங்கவே இந்த wi-fi சேவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இதேவேளை, ஒகஸ்ட் நிறைவுக்குள் 1,000 பொது இடங்களில் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது….

Read More

முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் தக்கப்பாடம் புகட்டி விடுவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை…..!!

முஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் ரஷ்யாவுக்கு தக்கப்பாடம் புகட்டி விடுவோம் என்று சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு…. சவூதி அரேபியாவில் அரபு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதற்கான காரணம் சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு சிரியாவிலுள்ள முஸ்லிம்களை கொன்று வருகிறது. அதனால் சிரியாவுக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பப்படவில்லை, அரபு கூட்டமைப்பின் இந்த செயலை…

Read More

நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படை – மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை சவுதி அரேபியா வெகுவாக குறைத்து விட்டது அமெரிக்க பத்திரிகை THE WALL STREET JOURNAL அலறல்

நேட்டோ படைகளை மிஞ்சும் ஒரு இஸ்லாமிய படையை சவுதி அரேபியா உருவாக்கியிருப்பதின் மூலம் அமெரிக்காவிர்கு இனி மத்திய கிழக்கில் வேலை இல்லை என்பதை சவுதி மன்னர் சல்மான் சொல்லாமல் சொல்லி சொல்லியிருக்கிறார் என்று அமெரிக்கை பத்திரிகை THE WALL STREET JOURNALதனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது . இராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கவின் நடவடிக்கைகள் எதிர் பார்த்த பயனை தரவில்லை என்பதை அறிந்த பிறகே சவுதி மன்னர் சல்மான் புதிய இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கும் அந்த பத்திரிகை…

Read More

இலங்கை – சுவீடனுக்கிடையில் பொருளாதார வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆர்வம்!

இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு சுவீடன் நம்பிக்கையுடன் காணப்படுவதாக சுவீடனின் பிரதமர் ஸ்டீவன் லொஃப்வென் (Stefan Löfven) தெரிவித்தார். சீனாவின் ஹய்னன் (Hainan) மாகாணத்தில் இடம்பெற்று வரும் ஆசிய வருடாந்த மாநாடு 2015 இற்கான ‘போஆஒ’ மன்றத்தில் (Boao Forum for Asia Annual Conference 2015) வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனேவை நேற்று (29) பிற்பகல் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்காக…

Read More

மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது!

பயணிகளுடன் பங்களாதேஷ் தலைநகர் டாக்கா நோக்கி பயணத்தை ஆரம்பித்த மிஹின் லங்கா விமானம் சிறிது நேரத்தில் கட்டுநாயக்க விமான தளத்தில் தரையிறக்கப்பட்டது. நேற்று முற்பகல் 9.30 மணியளவில் குறித்த விமானம் டாக்கா நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக மீண்டும் 10.20 மணியளவில் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த விமானம் நேற்று பிற்பகல் மீண்டும் டாக்கா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

Read More

சிறுவனை விற்க முயன்றோர் கைது

எட்டு வயதுடைய சிறுவனை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவனின் சிறிய தந்தை உட்பட மூன்றுபேரை கட்டுகஸ் தோட்டை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, அம்ப தென்னை கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரும் அவருடைய சகோதரர் மற்றும் சகோதரியுமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவன், நான்கு பிள்ளைகள்…

Read More

உள்ளக விசாரணை அறிக்கை ஓகஸ்டில்

காணாமற்போனோர் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி விசாரணை அறிக்கையை ஓகஸ்ட் நடுப்பகுதியில் வெளியிடவுள்ளது. இதற்கான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம, இடைக்கால அறிக்கையை கையளிப்பதற்குரிய திகதியை ஜனாதிபதி செயலகம் இன்னும் வழங்கவில்லை என்றும் கூறினார். இடைக்கால அறிக்கை கடந்த 18 ஆம்திகதி வெளியிடப்படவிருந்தது. அன்றைய தினம் ஜனாதிபதிக்கு முக்கிய சில வேலைகள் இருந்ததால் அந்நிகழ்வு இடம்பெறவில்லை. இந்நிலையில்,…

Read More

சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் பூமியைப் போன்ற இரு கிரகங்கள்

சூரிய குடும்பத்தில் பூமியைத் தவிர ஏனைய 8 கிரகங்களிலும் பூமியைப் போன்ற சிக்கலான உயிர் வாழ்க்கை இருப்பதற்கான ஆதாரம் மனிதனுக்கு இதுவரை கிடைக்கவில்லை. மேலும் பிரபஞ்சத்தில் வேறு பல நட்சத்திரங்களைச் சுற்றி வரும் பிற கிரகங்கள் ஏதாவது பூமியைப் போன்ற உயிர் வாழ்க்கைக்கு சாதகமான சூழ்நிலைகளுடன் உள்ளனவா எனவும் மனித இனம் பல நூற்றாண்டுகளாகவே ஆராய்ந்து வருகின்றது. இந்நிலையில் நமது சூரிய குடும்பத்துக்கு  மிக அருகில் அமைந்துள்ள நட்சத்திரமான ப்ரொக்ஸிமா சென்டௌரி மற்றும் அல்ஃபா சென்டூரி A…

Read More

இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும் – பிரதமர் ரணில்

இலங்கையின் படையினர் வலுப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ வடக்குக்கான விஜயத்தின்போது பலாலியில் வைத்து வலியுறுத்தினார். இந்த அடிப்படையில் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை என்பன நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார். ஆசிய பிராந்தியத்தில் 2025ஆம் ஆண்;டளவில் ஏற்படப்போகும் அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். படையினரை வலுப்படுத்தும் அதேநேரம் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியும் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்றும் ரணில் கேட்டுக்கொண்டார். எனவே பழையவற்றை பார்க்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க…

Read More