Headlines

ad34@hFacMC

இன்று தம்பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்கிறார் ஜனாதிபதி

சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்புகிறார். நாடு திரும்பியவிடன், தனது சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

Read More

இன்று முதல் இலவச வைபை இண்டர்நெட் கிடைக்கும் 26 இடங்களும், பாவனை முறையும்

-Razana Manaf- புதிய அரசின் தேர்தல் வாக்குறுதியின் ஒரு அம்சமான இலவச வை பை இன்டர்நெட் சேவை இன்று முதல் நாட்டில் முக்கிய இடங்களில் அறிமுகப்ப்டுத்தபட உள்ளது. 1. கோட்டை புகையிரத நிலையம் 2. கோட்டை பஸ் நிலையம் (தனியார், அரச) 3. கண்டி தலதா மாளிகை 4. புறக்கோட்டை மிதக்கும் சந்தை 5. கொழும்பு சட்டக்கல்லூரி 6. கொழும்பு பொது நூலகம் 7. லிபர்டி பிளாசா 8. கொழும்பு ரேஸ்கோர்ஸ் 9. போலிஸ் தலைமையகம் 10….

Read More

மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் ஸ்தலத்தில் இருவர் மரணம்- இது மட்டக்களப்பு சோகம்

செய்யித் அப்ஷல்  மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சந்தியில் சற்று முன்னர் (ஞாயிறு இரவு 10.30 மணி) இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். கிரான் பகுதியைச் சேர்ந்த எஸ். ஆதித்தன் (வயது 36) மற்றும் விநாயகம் ஜெயபிரதாப் (வயது 24) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும்  வேக கட்டுப்பாட்டை மீறி கிரான் பாடசாலைக்கு எதிரில் வீதி ஓரத்தில் இருந்த…

Read More

வௌியானது க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள்

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இணையத்தில் வௌியிடப்பட்டுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிடலாம். பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More

அமைச்சர் றிஷாத் பிரதமரிடம் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்,தமிழ் மக்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் முஸ்லிம்களது காணிகளை விடுவித்து கொடுக்கும் வகையில் ஒரு வாரகாலத்துக்குள் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும்,துரித கதியில் முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை நிறைவு செய்யும் வகையில் முல்லை மாவட்ட முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பிலான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதனுக்கு பிரதமர் ரணில் விகரமசிங்க பணிப்புரை வழங்கினார். முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஞாயிற்றுக் கிழமை வருகைத்தந்தார் .யுத்தத்தால்…

Read More

சிரியாவின் நெஞ்சைப் பிழியும் சோகம்

AHAMED DEEDAT சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம் அந்நாட்டில் குழந்தைகள் பட்டுவரும் துன்பத்தையும், வேதனையையும் தோலுரித்துக் காட்டியுள்ளது. உள்நாட்டுப் போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த…

Read More

பாயிசுக்கு எதிராக பிரதியமைச்சர் அமீர் அலி குற்றப்பத்திரிகை

அஸ்ரப் ஏ சமத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜே.பாயிசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்றை அனுப்பியுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம். எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீனால் மேற்படி பாயிசை விசாரணைசெய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியினால் பிரதியமைச்சர் அமீர் அலி நியமிகக்ப்பட்டிருந்தார். ஏற்கனவே ஓழுக்காற்று குழுவின் தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலியினால் 13.03.2015திகதி பாயிசுக்கு எதிரான…

Read More

இன்று ஜும்மாவின் பின்னர் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நடிகர் கராத்தே ராஜா

தமிழ்நாடு: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மணலூரை சேர்ந்தவர் கராத்தே ராஜா என அழைக்கப்படும் நடிகர் ராஜா புனித இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் சகோ. யாசர் அரபாத் தம் முகநூலில் சற்றுமுன் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களில் குணசித்திர, வில்லனாகவும், நடிகராகவும், பாத்திரம் ஏற்று இவர் நடித்துள்ளார். சகோ. யாசர் அரபாத் அவர்களின் முகனுளில் இருந்து.. அல்லாஹ் அக்பர் !! நடிகர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் !!…

Read More

யானைகளின் அட்டகாசத்தால் இரவு நேரங்களில் அச்சத்துடன் காவத்தமுனை கிராம மக்கள்

வாழைச்சேனை நிருபா்:மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் இரவு நேரத்தில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டங்களை சேதப்படுத்துவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காவத்தமுனை கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோட்டம் ஒன்றுக்குள் இன்று அதிகாலை 03.00 மணியளவில் உட்புகுந்த இரண்டு யானைகள் அத்தோட்டத்தில் உள்ள முப்பது தென்னங்கன்றுகளையும் வாழை மரங்களையும் நாசப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் அண்மைக்காலமாக யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கும் பொது மக்கள் இக் கிராமத்திற்கு…

Read More

விமானத்தின் இறுதி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி, கதவை பலமாக தட்டிய தலைமை விமானி : துணை விமானி சதி :பரபரப்பு தகவல்

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி கண்டகொள்ளவில்லை எனவும் தலைமை விமானி கதவை பல முறை பலமாக தட்டியும் உதைத்துள்ளதாகவும் ஆனால் துணை விமானி அமைதியாக இருந்து விமானத்தை மலையில் மோதியுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்து ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ எயார்…

Read More

யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரதமர்

வடக்குக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது இன்று யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குகொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து பிரதமர், மீள் குடியேற்றம் தொடர்பிலும், புனருத்தாபனம் பெற்ற இளைஞர்கள் தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார் என்று பிரதமரின்…

Read More

கண்டி மாவட்டத்தில் நீர்விநியோக சபைக்கு வரும் மக்கள் அசெளகரியம். பலர் ஏமாற்றத்துடன்..

-ஜே.எம்.ஹபீஸ்- நீர்வினியோக வடிகால் அமைப்பு சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக கண்டி மாவட்டத்தில் தமது அன்றாடத் தேவைகளக்காக நீர்வினியோக சபைக்கு சமூகமளித்த பொது மக்கள் பலர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.(27.3.2015) கெடம்பே, கட்டுகாஸ்தோட்டை பஹல கொண்டதெனிய, மற்றும் பொல்கொல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள நீர்வினியோக வடிகால் அமைப்பு சபையியன் பிராந்தியக் காரியாலயங்களில் ஊழியாகள் பணியில் ஈடபடாத காரணத்தால் பொது மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் சிலர் வெளியே காத்து நிற்பதையும் படத்தில் காணலாம். இது தொடாபாக…

Read More