Headlines

ad34@hFacMC

அல்லாஹூ அக்பர்! அமெரிக்காவின் ‘ டொமினிக் எஸ்லே ‘ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்

அமெரிக்காவின்  பிரபல விளையாட்டு வீரர் டொமினிக் எஸ்லே சென்ற வாரம் தனது வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். வழக்கமாக  இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது. அவருடைய ட்விட்டர்  பக்கத்தில் பலர் தங்களின் கருத்துக்களையும், ஆதரவையும், வசவுகளையும்  சரமாரியாக  கொடுத்து  வருகின்றனர். எதைப் பற்றியும்  கவலைபடாமல்  டொமினிக்  தனது  வாழ்வியலை  இஸ்லாமாக ஆக்கிக் கொண்டார். அவரது வாழ்வு சிறப்பாக அமைய நாமும் நமது பிரார்தனையை இறைவனிடத்தில்  வைப்போம். ‘பல விஷயங்கள் எனது வாழ்வில் நடந்து விட்டன….

Read More

பள்ளி இமாம்களின் குறைவான ஊதியமும், அவர்களின் எதிர்காலமும்

நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி விரிவுரையாளர் ஆலிம்கள் உலமாக்களை ஏதாவது சொல்லிவிட்டால் கொதித்தெழும் நமது சமூகம் உண்மையில் உலமாக்களை நேசிக்கிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதிலாகும். பள்ளிவாசல்களில் இமாமாக பணி புரியும் உலமாக்களுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்து விட்டு நிர்வாகிகளும் ஊர்மக்களும் உலமாக்கள் உலமாக்கள் என்ற வாய் கிழிய கத்துவதில் எந்த அர்த்தமும் கிடையாது. ஊரில் ஹோட்டலில் ரொட்டி அடிப்பவர் மற்றும் சாதரண கூலித்தொழிலாளர்களுக்கு மாதம் குறைந்தது முப்பதாயிரம் ரூபாய்கள் வருமானம் கிடைக்கிறது. ஆனால் பள்ளி…

Read More

மாஷா அல்லாஹ்! தொழுகையின் பின் நடிகர் கராத்தே ராஜா

புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நடிகர் கராத்தே ராஜா தொழுகையை நிறைவெற்றிய பின். அல்லாஹ் அக்பர் !! . ( வணக்குத்துக் குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் இறுதித் தூதரும் ஆவார்கள்.அல்லாஹ் மிகப் பெரியவன் ) .

Read More

நள்ளிரவில் எழுந்து ஐஸ் வாங்குவதற்காக தனியாக பஸ் ஏறிச் சென்ற 4 வயது சிறுமி

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தனக்கு மிகவும் ஐஸ் வாங்கும் ஆசையில் நள்ளிரவு வேளையில் வீட்டை விட்டு வெளியேறிய 4 வயது சிறுமி, சாலையில் சென்ற பஸ்ஸை கைகாட்டி நிறுத்தி தனியே பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது நள்ளிரவில் வீட்டின் பின் வாசல் கதவு வழியாக வெளியே வந்த அனபெல் என்ற அந்த 4 வயது சிறுமி. இரவு நேரத்தில் அணியும் பைஜாமா உடையின் மீது ஒரு மழை கோட்டினை அணிந்தவாறு வீட்டின்…

Read More

விரைவில் மதினா சர்வதேச விமான நிலையம்!

தி. ரஹ்மத்துல்லா சவூதி அரேபியா மதினா நகரில் கட்டப்பட்டு வரும் புதிய சர்வதேச விமான நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இந்த விமான நிலையம் சோதனை இயக்கம் செய்யப் பட இருக்கிறது. வெற்றிகரமான சோதனை இயக்கத்திற்குப் பின், இந்த விமான நிலையம் விரைவில் திறக்கப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது. இந்த விமான நிலையத்தில் 16 புறப்பாடு வாயில்கள் 32 பாலங்கள் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. 64 போர்டிங்…

Read More

ரத்கம பிரதேச சபை தலைவர் கொலை : சந்தேக நபர் பொலிஸில் சரண்

ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் புஷ்பகுமார கொலையுன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராகிய ஜனித் மதுசங்க த சில்வா பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறு மீளாய்வுக்கான இறுதித் திகதி ஏப்ரல் 24

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பப்படிவம் பெறுபேறு பட்டியலுடன் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் பரீ்ட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் பத்திரிகையில் பிரசுரிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

ஆதரவற்ற சிறுமி துஷ்பிரயோகம்: தலைமறைவானார் மத போதகர்

தாய், தந்தையரை இழந்து சபை ஒன்றின் பாதுகாப்பில் வளர்ந்த சிறுமி ஒருத்தியைச் சபையின் மதபோதகர் சில ஆண்டுகளாகத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது இதுகுறித்துப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதையடுத்து குறித்த பாதிரியார் தலைமறைவாகியுள்ளார் என்று கூறப்படுகின்றது. சிறுமிக்கு ஒரு இளைய சகோரனும் உண்டு. பெற்றோர் இல்லை. அதனால் சிறுமி இல்லம் ஒன்றில் தங்கியிருந்தார். அங்கிருந்து சிறுமியை மருத்துவர் ஒருவரும் அவரது தாயும் அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர். சகோதரனை வேறு…

Read More

சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது…!

சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது…! சவூதி அரேபியாவின் போக்குவரத்து விதிகளின் படி சிகப்பு விளக்கு எரியும் போது வலது புறம் திரும்புபவர்கள் மட்டும் சில வினாடிகள் நின்று விட்டு வலது புறம் திரும்பினால் சிக்னலுக்கான கேமரா படம் பிடிக்காது. அவ்வாறு சில வினாடிகள் நிற்காமல் அப்படியே வலது புறம் திரும்பினால் கேமரா படம் பிடித்து அவராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இன்று முதல் வலது புறம் திரும்புவதாக இருந்தாலும் பச்சை விளக்கு…

Read More

(விபரங்கள் இணைப்பு) காது கேட்பதன் மூலம் வாய் பேச உதவுவீர்களா?

– ஏறாவூர் அபூ பயாஸ் –  அன்பின் சகோதரர்களே, ஏறாவூர்,மிச் நகரை சேர்ந்த காது கேட்காத,வாய் பேச முடியாதிருந்த நான்கு வயது சகோதரன் ரிப்தி ,உங்கள் மேலான உதவிகளைக்கொண்டு செய்யப்பட்ட 16-11-2013 அன்று செய்த சத்திர சிகிச்சை மூலம் “இன்று ஒரு குழந்தை எவ்வாறு தன் பேசும் திறனை வெளிப்படுத்துமோ அவ்வாறு இன்று பேச ஆரம்பித்திருக்கிறான்”. அல்ஹம்துலில்லாஹ். சகோதரன் ரிப்தியை பேச வைப்பதற்காக நீங்கள் எல்லாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. இதனால் கிடைக்கின்ற…

Read More

O Level Result.. கல்முனையில் இரு முஸ்லிம் பாடசாலைகளின் மாணவ, மாணவிகள் வரலாற்று சாதனை படைத்தனர்

– அஸ்ஹர் இப்றாஹிம் – அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரணதரப் பரீ்ட்சை முடிவுகளின்படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து 415 மாணவ மாணவிகள் க.பொ.த. உயர்தரப் பிரிவில் விஞ்ஞான , வர்த்தக , கலை மற்றும் தொழில்நுட்பவியல் துறைகளில் கல்வி கற்க தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கல்முனை வலயத்திலுள்ள பாடசாலைகளுள்ளும் , அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளள்ளும் , அகில இலங்கையிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் இவ்விரு கல்லூரிகளிலுமிருந்து பெரும்…

Read More

மனைவியை மீட்டுத்தரும்படி கணவன், குழந்தை, வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தலுடன்..

சேவைக்காலம் நிறைவடைந்தும் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வரும் படி கூறி நபரொருவர் வேலைவாய்பு பணியகமொன்றின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குருநாகலையில் உள்ள வேலைவாய்ப்பு பணியகமொன்றின் முன்னாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது பிள்ளையுடனேயே குறித்த கணவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வெட்டுக்கத்தி மற்றும் விஷ போத்தல் ஆகியவற்றையும் அவர் தன் வசம் வைத்திருந்துள்ளார். பின்னர் அவ்விடத்துக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

Read More