குடும்பத்தை சிதைக்கும் ‘வாட்ஸ் அப்’ பெண்கள்!ஒரு அதிர்ச்சி தகவல்!
– விஜயலட்சுமி பந்தையன் – “எப்போதும் சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவது என் மனைவியின் இயல்பு. ஆனால் இப்போது அவள் என்னிடம் பேசுவதே இல்லை. எப்போதாவது பேசினாலும் எரிந்து விழுகிறாள்… கத்துகிறாள். நான் வீட்டிற்குள் இருக்கும்போதுகூட பெரும்பாலான நேரத்தை அறைக்குள் தனிமையிலே கழித்துக்கொண்டிருக்கிறாள்’’ என்று மனைவி மீது குறைபட்டார், கணவர். இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அவருக்கு வயது 40. அவளுக்கு 35 வயது. பத்து வயது மகள் இருக்கிறாள். உற்சாகமாக செயல்பட்டு உலகை புரிந்துகொள்ளவேண்டிய…
