சமூக சேவையாளர் தாஸிமின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!
-ஊடகப்பிரிவு- மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ யின் முன்னோடிகளில் ஒருவரான எஸ்.பி.சி.தாஸிம் அவர்கள் கனடாவில் காலமான செய்தி வருத்தமளிக்கின்றது. அவரது மறைவு, சமுதாயத்துக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை வெளியிட்டுள்ளார். அனுதாப அறிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலாய் இனத்தைச் சேர்ந்த தாஸிம், தனது வாழ்வின் பெரும்பகுதியை சமூக சேவையிலேயே கழித்தவர். இலங்கையில் வை.எம்.எம்.ஏ என்ற நிறுவனம் பரந்துபட்ட சேவைகளை வழங்குவதற்கு மர்ஹூம் தாஸிமின் பங்களிப்பு அபரிமிதமானது. மாளிகாவத்தை ஜும்ஆ…
